Word |
English & Tamil Meaning |
|---|---|
| அந்திகூப்புதல் | anti-kūppu- v. intr. <>அந்தி+. To perform cantiyā-vantaṉam; சந்தியாவந்தனஞ் செய்தல். மந்திரத் தந்திகூப்பி (பெருங். உஞ்சைக். 55, 8). |
| அந்திகை 1 | antikai n. <>andhikā. (நாநார்த்த.) 1. Deceit, cunning; கபடம். 2. Night; 3. Mind; |
| அந்திகை 2 | antikai n. <>antikā. (நாநார்த்த.) 1. Indian chickweed; பம்பந்திராய். 2. Oven; |
| அந்திமந்தி | anti-manti n. Redupl. of அந்தி. Evening twilight; மாலை மங்கற்பொழுது. அந்திமந்தி நேரத்திலே வெளியே போகாதே. Colloq. |
| அந்திமலர்ந்தான் | anti-malarntāṉ n. <>அந்தி+மலர்-. Four o'clock flower; அந்திமந்தாரை. (பச். மூ.) |
| அந்தியதீபம் | antiya-tīpam n. <>antya+. (Rhet.) The figure of speech known as kaṭainilai-viḷakku; கடைநிலை விளக்கு என்னும் அணி. |
| அந்தியன் | antiyaṉ n. <>antya. Person of the lowest caste; கடைக்குலத்தான். அந்தண ரந்திய ரெல்லையினின்ற வனைத்துலகும் (ரஹஸ்ய. 390). |
| அந்தியுழவு | anti-y-uḻavu n. <>அந்தி+. Tilling the soil in the evening time during summer; கோடையில் அந்திநேரத்தில் உழுகை. Nā.. |
| அந்திரட்டை | antiraṭṭai n. Corr. of அந்தியேஷ்டி. Loc. . |
| அந்திரர் | antirar n. <>āndhra. The āndhras; ஆந்திரர். அந்திரர் முதலிய வரசர் (பெருந்தொ. 783). |
| அந்திரன் | antiraṉ n. <>andhra. Hunter; வேடன். (சிந்தா. நி. 160.) |
| அந்திரி | antiri n. <>antarī. (பொதி. நி.) 1. Pārvatī; பார்வதி. 2. Kāḷī; |
| அந்தில் | antil n. 1. Place; இடம். (அக. நி.) 2. Two; |
| அந்து 1 | antu n. <>andu. Anklet; பாதகிண்கிணி. (நாநார்த்த.) |
| அந்து 2 | antu n. perh. ஐந்தொகை. Total, aggregate; மொத்தங்கூடிய தொகை. Loc. |
| அந்து 3 | antu n. <>andhu. Well; கிணறு. (நாநார்த்த.) |
| அந்துகம் | antukam n. <>anduka. Chain for an elephant's leg; யானைச்சங்கிலி. (R.) |
| அந்துவாசம் | antuvācam n. cf. அந்தரவனசம். A kind of moss; கொட்டைப்பாசி. (வை. மூ.) |
| அந்தூல்பல்லக்கு | antūl-pallakku n. <>āndōla+. A kind of palanquin; பல்லக்கு வகை. (தக்ஷிண. இந். சரித். 444.) |
| அந்தேசாலம் | antēcālam n. Clearing nut tree; தேற்றா. (பச். மூ.) |
| அந்தேஷ்டி | antēṣṭi n. <>anta+iṣṭi. Funeral rites; அந்தியேஷ்டி. (தஞ். சரசு. ii, 91.) |
| அந்தோ | antō adv. There; அதோ. அந்தோ பார். |
| அந்நாட்குளித் - தல் | annāṭ-kuḷi- v. intr. <>அந்நாள்+. To bathe on the fifth day after menses; பூப்புக்குப் பின் ஐந்தாநாள் தலைமுழுகுதல். Loc. |
| அந்நாள் | annāḷ n. <>ஐந்து+நாள். The fifth day after menses; பெண்டிர் மாதப்பூப்புக்குப்பின் ஐந்தாநாள். Loc. |
| அந்நியாயகாரி | anniyāya-kāri n. <>anyāya-kāri. Treacherous person, as sinner; துரோகியான பாவி. அந்நியாய காரிகளாய்ப் போந்த இவர்கள் (S. I. I. iv, 140). |
| அந்நிலை | a-n-nilai n. <>அ+. That moment; அப்பொழுது. மற்றையோரு மந்நிலை யயின்றனர் (பரிபா. 5, 45). |
| அந்நின்று | a-n-niṉṟu adv. <>id.+நில்-. From there; அவ்விடத்தினின்றும். அந்நின்று வணங்கிப்போய்த் திருவூற லமர்ந்திறைஞ்சி (பெரியபு. ஏயர்கோன். 283). |
| அநநுபாடணம் | ananupāṭaṇam n. <>ananubhāṣaṇa. (Log.) A fault in argumentation; தோல்வித்தானத் தொன்று (செந். iii, 13.) |
| அநயம் | anayam n. <>a-naya. (நாநார்த்த.) 1. Evil karma; தீவினை. 2. Danger; 3. Anything inauspicious; 4. Gambling; |
| அநாதை 1 | anātai n. <>a-nātha. Poor, helpless man; திக்கற்றவன். (W.) |
| அநாதை 2 | anātai n. <>a-nāthā. 1. Poor, helpless woman; திக்கற்றவள். Colloq. 2. (saiva.) A šiva-sakti; |
| அநித்தம் | anittam n. <>a-nityā. (šaiva.) A šiva-sakti; சிவத்திபேதம். (அக. நி.) |
| அநிதம் | anitam n. <>a-nitya. That which is transient or unstable; நிலையற்றது. அநிதவுடற்பூதமாக்கி (திருமந். 1854). |
