Word |
English & Tamil Meaning |
|---|---|
| அம்பலகாரன் | ampala-kāraṉ n. <>அம்பலம்+. Chairman of a village assembly; கிராமசபைத் தலைவன். (R. T.) |
| அம்பலத்தார் | ampalattār n. <>id. Members of a village assembly; கிராமப் பொதுச்சபையார். நிலத்தை வலுக்கொண் டம்பலத்தா ரெடுத்துழுது கொண்டார்களென்று (சரவண. பணவிடு. 185). |
| அம்பலநாட்டான் | ampala-nāṭṭāṉ n. <>id.+. 1. Headman of a village; கிராமத்தலைவன். 2. See அம்பலகாரன். கிராமமுன்சீ பம்பலநாட்டா ரெவர்க்கும் (பஞ்ச. திருமுக. 380). |
| அம்பலம் | ampalam n. cf. ambara. See அம்பலகாரன். (R. T.) . |
| அம்பலமானியம் | ampala-māṉiyam n. <>அம்பலம்+. Land held free of tax by the headman of a village, as a perquisite of his office; கிராமத்தலைவன் அனுபவிக்கும் இறையிலி நிலம் (W. G.) |
| அம்பலவன் | ampalavaṉ n. <>id. šiva at Chidambaram; தில்லைச் சிவபிரான். குவளைக்களத் தம்பலவன் (திருக்கோ. 33). |
| அம்பலவாசி | ampala-vāci n. <>id.+. A caste in Malabar rendering service in temples; மலையாளநாட்டிற் கோயில்வேலை செய்யும் ஒரு சாதியினர். (அபி. சிந்.) |
| அம்பஸ்தை | ampastai n. cf. ambaṣṭha. Glacous backed triangular buckler-leaved moonseed, cl., Stephania hernandifolia; கொடி வகை. Loc. |
| அம்பார் | ampār n. <>U. ambār. Heap of paddy or other grain; தானியக்குவியல். (P. T. L.) |
| அம்பாரக்கடை | ampāra-k-kaṭai n. <>அம்பாரம்+. Store, granary, place where anything is stored; களஞ்சியம். (W. G.) |
| அம்பாரம் 1 | ampāram n. <>U. ambār. 1. Heap; குவியல். 2. Pile; |
| அம்பாரம் 2 | ampāram n. <>U. ambārī. Howdah; அம்பாரி. Loc. |
| அம்பாரராசி | ampāra-rāci n. <>அம்பாரம்+. The government's share of the gross produce of paddy; சாகுபடியான நெல்லில் அரசாங்கத்தாருக்கு உரிய பகுதி. (R. T.) |
| அம்பாரவாசி | ampāra-vāci n. <>id.+. Extra quantity of grain measured by the tenant to the landlord to compensate for the loss, due to shrinkage, etc.; காய்ச்சற்பாடு முதலியவற்றால் நஷ்டமேற்படாதபடி அதிகப்படியாய்க் கொடுக்கும் நெல். அம்பாரவாசி அரைவாயிலே கழித்து (சரவண. பணவிடு. 136). |
| அம்பாவனம் | ampāvaṉam n. <>அம்பரவாணம். A mythical bird; சரபபட்சி. (W.) |
| அம்பி 1 | ampi n. <>அம்பி. (W.) 1. Baling-basket; இறைகூடை. 2. Rope used for drawing water; |
| அம்பி 2 | ampi n. Hampi, the capital of the Vijayanagar kings; விஜயநகரத்தரசர் தலை நகரான ஹம்பியென்ற ஊர். அம்பி நகருங்கெடுக்க வந்த குலாமா (தமிழ்நா. 224.) |
| அம்பிகை | ampikai n. <>ambikā. (நாநார்த்த.) 1. Mother; தாய். 2. Aunt; |
| அம்பிடி | ampiṭi n. White sugar; சீனிச் சர்க்கரை. (பச். மூ.) |
| அம்பு 1 | ampu n. <>ambara. Sky, firmament; விண். (தொதி. நி.) |
| அம்பு 2 | ampu n. <>ambu. Cuscus grass; வெட்டிவேர். (நாநார்த்த.) |
| அம்புச்சிறகு | ampu-c-ciṟaku n. <>அம்பு+. Feather end of an arrow; அம்பின் அடிப்பாகம். (நாமதீப.) |
| அம்புசம் | ampucam n. <>ambu-ja. Water cadamba; நீர்க்கடம்பு. (நாநார்த்த.) |
| அம்புசன்மம் | ampu-caṉmam n. <>ambu-janmam. Lotus; தாமரை. (பச். மூ.) |
| அம்புடம் | ampuṭam n. cf. அம்படம். Worm-killer; ஆடுதின்னாப்பாளை. (பச். மூ.) |
| அம்புதம் | amputam n. 1. cf. ambu. 1. Water; நீர். (வை. மூ.) 2. cf.ambu.ja Lotus; |
| அம்புதி | amputi n. <>ambu-dhi Channel; கால்வாய். (சம். அக. Ms.) |
| அம்புநிதி | ampu-niti n. <>ambu-nidhi. Ocean; கடல். (சிந்தா. நி. 205.) |
| அம்புநீர் | ampu-nīr n. perh. அம்பு+. Semen virile; விந்து. (சித். அக.) |
| அம்புநேசம் | ampu-nēcam n. <>id.+. Lotus; தாமரை. (பரி. அக.) |
| அம்புப்பிரசாதனம் | ampu-p-piracāta-ṉam n. <>ambu-prasādana. Clearing nut; தேற்றாங்கொட்டை. (சித். அக.) |
