Word |
English & Tamil Meaning |
---|---|
அரக்குச்சொக்கட்டான் | arakku-c-cokkaṭṭaṉ n. <>அரக்கு+. A kind of saree; சேலைவகை. |
அரக்குவிசிறி | arakku-viciṟi n. <>id.+. A kind of saree; சேலைவகை. |
அரகசா | arakacā n. <>Hind. argajā. A spiced unguent; வாசனைக்குழம்புவகை. Loc. |
அரகத் | arakat n. <>Arab. harkat. Painful talk; மனவருத்தம் விளைக்கும் பேச்சு. அரகத் பேசி (தாசீல்தார்நா. 15). |
அரங்கம் | araṅkam n. <>raṅga. An alloy of copper and tin; தரா. (நாநார்த்த.) |
அரங்கவாசல் | araṅka-vācal n. <>அரங்கம்+. Esplanade; முற்றவெளி. Pond. |
அரங்கி | araṅki n. <>id. Dancing girl; நாடகக்காரி. மடவா ராயிரம்பே ருண்டென் றரங்கியறியாளோ (கூளப்ப. காதல், 359). |
அரங்கு | araṅku n. prob. raṅga. Inner room in a house; உள்வீடு. (நாநார்த்த.) |
அரசசட்டம் | araca-caṭṭam n. A treatise on mathematics, not now extant; இறந்துபட்ட ஒரு கணிதநூல். (யாப். வி. 528.) |
அரசநாகம் | araca-nākam n. <>அரசன்+. Winged serpent; பறவைமாநாகம். (நாமதீப.) |
அரசப்புரசல் | araca-p-puracal n. Redupl. of புரைசல். Scarceness; scantiness; மிகக்குறைவு. Loc. |
அரசமாடம் | araca-māṭam n. <>rāja+māṣa. Chowli bean; பெரும்பயறு. (நாபதீப்.) |
அரசமுத்திரைக்காரன் | araca-muttīrai-k-kāraṉ n. <>அரசன்+முத்திரை+. Keeper of the privy seal; அரச முத்திரையை வைத்திருக்கும் உத்தியோகஸ்தன். Colloq. |
அரசமோகினி | araca-mōkiṉi n. <>id.+. Sour lime; எலுமிச்சை. (நாபதீப.) |
அரசரொளி | aracar-oḷi n. <>id.+. Splendour of glory of kings, of four kinds, viz., koṭai, talai-y-aḷi, ceṅkōl, kuṭi-y-ōmpal; கொடைதலையளி செங்கோல் குடியோம்பல் என்று நான்கு வகைப்பட்டதான அரசருடைய பெருமை. (R.) |
அரசவிலைமுருகு | aracavilai-muruku n. prob. அரசிலை+. An ear-ornament; காதணிவகை. (சரவண. பணவிடு. 121.) |
அரசளி - த்தல் | aracaḷi- v. tr. <>அரசு+. To govern; அரசாளுதல். (W.) |
அரசன் | aracaṉ n. <>rāja. 1. Portia tree; பூவரசு. (மருத்.) 2. A common creeper of the hedges; 3. A person of the Vaṉṉiya caste; |
அரசாங்கம் | aracāṅkam n. <>rājāṅga. 1. See அரசுறுப்பு. . 2. The departments of Government; 3. Government; |
அரசாணி | aracāṇi n. perh. அரை-+சாணை. Grinding stone; அம்மி. (திவ். பெரியாழ். 3, 8, 3, வ்யா. பக். 744.) |
அரசாணித்தம்பம் | aracāṅi-t-tampam n. <>அரசாணி+. Pipal branch placed in a marriage pandal; விவாகமண்டபத்தில் நாட்டப்படும் அரசங்கொம்பு. Cm. |
அரசிப்படு - தல் | araci-paṭu- v. intr. prod. a-rati+. To be vexed; to be angry; கோபித்தல். (திவ். பெரியாழ். 2, 9, 10, வ்யா.) |
அரசியல் | araciyal n. <>அரசு+இயல். Politics; தேசபரிபாலன நெறி. Mod. |
அரசிலக்கணம் | aracilakkaṇam n. <>id.+. Kingly qualities; அரசர்க்குரிய குணங்கள் நித்தியகரும மகன்று வாயாவிருந்திடுத லரசிலக்கண. மன்றென (மகாராஜாதுறவு. 31). |
அரசிலைத்தூக்கம் | aracilai-t-tūkkam n. <>அரசிலை+. Plate of gold or silver of the shape of pipal leaf, strung in the waist-band of girl children to cover their undity; அரைஞாணிற்கோத்துப் பெண்குழந்தையின் இடையிற்கட்டுவதும் அரசிலைபோன்று பொன் அல்லது வெள்ளியாலானதுமான தகடு. Loc. |
அரசிலைத்தொங்கல் | aracilai-t-toṅkal n. <>id.+. See அரசிலைத்தூக்கம். (W.) . |
அரசு | aracu n. <>rāja. 1. Privileges allowed to watchmen; காவற்சுதந்தரம். (P. T. L.) 2. Domain, land; |
அரசுக்காரன் | aracu-k-kāraṉ n. <>அரசு+. Person holding particular privileges for doing police duty; காவற்சுதந்தரக்காரன். (P. T. L.) |
அரசுக்காவல் | aracu-k-kāval n. <>id.+. Inam granted for the service of performing general police duties, dist. fr. kirāma-k-kāval; பொதுப்பந்தோபஸ்து செய்வதற்காக ஏற்பட்ட மானியம். (R. T.) |
அரசுதலைபணி - த்தல் | aracu-talai-paṅi- v. intr. <>id+.தலை+. To be anointed as king; பட்டாபிஷேகஞ் செய்யப்பெறுதல். அங்கர் கோனாயரசுதலை பணித்து (ஞானா. 32). |