Word |
English & Tamil Meaning |
---|---|
அருமணவன் | aru-maṇavaṉ n. prob. அருமணம். A kind of eagle-wood, used as incense; அகில்வகை. (சிலப். 14, 108, உரை.) |
அருமிதி | aru-miti n. <>அரு-மை+miti. Excessiveness; மிகுதி. அருமிதியான மணத்தை வாங்கிக்கொண்டு (திவ். திருப்பள்ளி. 2, வ்யா. பக். 19). |
அருமொழி | aru-moḻi n. <>அரு-மை+. See அருமொழித்தேவர். (சாஸனத்.) . |
அருமொழித்தேவர் | arumoḻi-t-tēvar n. <>அருமொழி+. A title of Rājarāja I; முதலாம் இராசராசசோழனது பெயர். (சிவக். பிரபந். பக். 214, கீழ்க்குறிப்பு.) |
அருமொழிவிநாயகர் | aru-moḻi-vinā-yakar n. <>id.+. The God Gaṇēša in the šiva shrine in Tanjore; தஞ்சைப் பெருவுடையார் கோயிலிலுள்ள பிரதான விநாயகர். (சிவக். பிரபந். தஞ்சைப். காப்பு.) |
அருருட்டுக்கிழங்கு | aruruṭṭu-k-kiḻaṇku n. <>E. arrowroot+. True arrowroot plant, sh., Maranta arundinacea typica; ஒருவகைச் செடி. (L.) |
அருவி 1 | aruvi n. <>அரி-. 1. Sheaf of corn; அறுத்த ஒருபிடி கதிர். அருவிகட்டும் வல்லயக்காரர் (தெய்வச். விறலிவிடு.). 2. Stubble of dry crops; |
அருவி 2 | aruvi n. prob. அருவு-. (பொதி.நி.) 1. River; ஆறு. 2. Hill; |
அருவி 3 | aruvi n. <>a-rūpin. Hero, chief male character in a love-poem, dist. fr. uruvi; பெயர் கூறப்படாத கிளவித் தலைமகன். உருவியாகிய... தலைவனை யருவி கூறுத லானந்தம்மே (யாப். வி. பக். 525). |
அருவிவெட்டல் | aruvi-veṭṭal n. <>அரிவி+. See அருவிவெட்டு. (தண்டிகை. பள்.) . |
அருவிவெட்டு | aruvi-veṭṭu n. <>id.+. Harvesting; அறுவடை. நாற்று நடுகை அருவிவெட்டு (தண்டிகை. பள். ஆராய். 1.) |
அருள் | aruḷ n. <>அருள்-. 1. Consort of šiva, as the embodiment of grace; சிவசத்தி. (பொதி. நி.) 2. Brightness of appearance; 3. Mature pomegranate tree; |
அருள்வடிவன் | arul-vaṭivaṉ n. <>அருள்+. šiva; சிவபிரான். (நாமதீப. 10.) |
அருளம் | aruḷam n. perh. aruṇa. Gold; பொன். (வை. மூ.) |
அருளாழி | aruḷāḻi n. <>அருள்+. (Jaina.) The wheel of Dharma; தருமசக்கரம். வினையெறியு மருளாழியும் (மேருமந். 1039). |
அருளுருநிலை | aruḷ-uru-nilai n. <>அருள்+உரு+. Manifestation of šiva as a spiritual preceptor; சிவபெருமான் குருவுருக்கொள்ளும் நிலை. (திருவருட். 5, தலைப்பு.) |
அருனாவரிசி | aruṉāvarici n. A kind of seed used in medicine; அறுவகையரிசியுள் ஒன்றான மருந்துச்சரக்கு. (சங். அக.) |
அரூபி | arūpi n. <>a-rūpin. 1. That which has no form; உருவமில்லாதது. (தக்கயாகப். 474, உரை.) 2. Camphor; |
அரேணு | arēṇu n. <>harēṇu. (நாநார்த்த.) 1. Gentlewoman; குலப்பெண். 2. Cubeb; 3. Bengal gram; |
அரை | arai n. 1. The upper part of the thigh; தொடையின் மேற்பாகம். (பொருந. 104, உரை.) 2. Part, portion; |
அரை - த்தல் | arai 11. v. intr. To be ashamed; வெட்கப்படுதல். Nā. |
அரைக்கண் | arai-k-kaṉ n. <>அரை+. Eyes half-open; கண் திறந்ததும் திறவாததுமான நிலை. அரைக்கண் பார்வை. |
அரைக்கண்போடு - தல் | arai-k-kaṉ-pōṭu- v. intr. <>அரைக்கண்+. To see with half closed eyes, as cattle, etc; கால்நடை முதலியன அரைக்கண்ணோடு பார்த்தல். (பெரியமாட். 129.) |
அரைக்காசுத்தொண்டன் | arai-k-kācu-t-toṇṭaṉ n. <>அரை+காசு+. Poor, despicable fellow; pauper; மிகவும் எளியவன். அரைக்காசுத் தொண்டனிவன் (விறலிவிடு. 835). |
அரைக்காய்ச்சல் | arai-k-kāyccal n. <>id.+. Rice husked from boiled paddy, not fully dried; வதவலரிசி. Loc. |
அரைக்கால்வாசி | araikkāl-vāci n. <>அரைக்கால்+. An ancient tax; பழையவரிவகை. (S.I.I.ii. 115.) |
அரைக்குரல் | arai-k-kural n. <>அரை+. Indistinct speech; தெளிவில்லாப் பேச்சு. Pond. |
அரைக்குழல் | arai-k-kuḻal n. <>id.+. A pendant in the waist-cord, inside which a mystic scroll is kept; அரைஞாணிற்கோத்து அணியும் மந்திரத்தகடு அடைத்த குழல். Loc. |
அரைகுளம்பு | arai-kulampu n. <>id.+. A defect in cattle; கால்நடைகளிற் காணப்படும் ஒருவகைக் குற்றம். (பெரியமாட். 19.) |
அரைச்சம்பளம் | arai-c-campaḷam n. <>id.+. Pension; சம்பளத்தில் பாதியாகப் பெறும் உபகாரவேதனம். Colloq. |