Word |
English & Tamil Meaning |
---|---|
அல்பமிறை | alpa-m-iṟai n. prob. alpa+இறை. A tax in grain; தானியக்கடமைகளிலொன்று. (s.I.I.v,196.) |
அல்மதம் | almatam n. cf. கல்மதம். Rock alum; கன்மதம். Pond. |
அல்லணை | allaṇai n. cf. கல்லணை. Dam of stone; கல்லால் அமைத்த அணைக்கட்டு. (R.T.) |
அல்லறம் | al-l-aṟam n. <>அல்+. Sinful act, sin; பாவம். அல்லறஞ் செய்வோ £ருநர கடைதலும் (மணி. 16,89). |
அல்லாப்பாண்டியடி - த்தல் | allāppāṇṭi-y-aṭi v. intr. prob. அல்லாப்பண்டிகை+. To perform a somersault; குட்டிக்கரணம் போடுதல். Tp. |
அல்லி | alli n. perh. அலி. Hermaphrodite; அலி. (பொதி. நி.) |
அல்லியம் | alliyam n. <>halya. Plough; கலப்பை. (சிந்தா. நி. 299.) |
அல்லியுணவு | alli-y-uṇavu n. <>அல்லி+. Food prepared from water-lily seeds; அல்லியரிசியாலான உணவு. கூந்தல்கொய்து.. அல்லியுணவின் மனைவியோ டினியே, புல்லென்றனையால் (புறநா. 250) |
அல்லை | allai n. <>அல்லி. Water-lily; அல்லி. (பச். மூ.) |
அல - த்தல் | ala- 12 v. tr. To desire; ஆசைப்படுதல். (சிவப்பிர. 3.) |
அலக்கரிவாள் | alakkarivāḷ n. <>அலக்கு+. Crotcher-shaped blade attached to a pole; துறட்டுக்கோலின் நுனியில் சேர்த்துள்ள அறுக்குங் கருவி. Tj. |
அலக்கு - தல் | alakku- 5 v. tr. [M. akku.] To wash, as clothes; துணிமுதலியன வளுத்தல். Nā. |
அலக்கு 1 | alakku n. <>அலகு. 1. Bone; எலும்பு. விலாவலக்குக வலக்குக வடிக்கடி சிரித்தன கலிங். 216). 2. Branch; |
அலக்கு 2 | alakku n. cf. அலங்கம். Fort; கோட்டை. (சம். அக. Ms.) |
அலகமான் | alakamāṉ n. cf. அலமான். Long pepper; திப்பிலி. (பச். மூ.) |
அலகிரி | alakari n. perh. lahari. Large wave, surf; பெரியஅலை. (W.) |
அலகழுங்கு | alakaḻuṅku n. Long pepper; திப்பலி. (சங். அக.) |
அலகிரி | alakiri n. 1. See அலகிரி. (W.) . 2. Immodest fellow; |
அலகிருக்கைவெண்பா | alakirukkai-veṇpā n. perh. அலகு+. (Pros.) A kind of verse in veṇpā metre; மிறைக்கவிவகை. (யாப். வி. 510.) |
அலகு 1 | alaku n. 1. (Mus.) A unit of measurement in musical scale; சுருதியளவு. (Mus. Ind.) 2. Flaw; |
அலகு 2 | alaku n. pron. அருகு. Harialli grass; அறுகு. (பச். மூ.) |
அலகுவிரல் | alaku-viral n. <>அலகு+. Spathe of the male palmyra; பனங்கதிர். Tinn. |
அலகை 1 | alakai n. <>அளகை. The city Aḷakā; அளகாபுரி. (சம். அக. Ms.) |
அலகை 2 | alakai n. <>அலகு. Standard; அளவு. அலகை சான்ற வுலக புராணமும் (பெருங். உஞ்சைக். 32,2). |
அலங்கம் | alaṅkam n. <>அரங்கம். Small island in the midst of a river; ஆற்றிடைக்குறை. |
அலங்கல் | alaṅkal n. <>அலங்கு-. 1. Light; ஒளி. (ஈடு, 10,1,2.) 2. Fragrant basil; |
அலங்கலம் | alaṅkalam n. <>id. Movement; அசைகை. (சிந்தா. நி. 290.) |
அலங்கழித்தொழில் | alaṅkaḻi-t-toḻil n. <>அலக்கழி-+. Acts of wickedness or oppression; அலவலைத் தொழில். அறவிய மனத்தினை யாகியலங்கழித்தொழி லொழிந்தடங்கி (நீலகேசி, 74). |
அலங்கன் | alaṅkaṉ n. <>அலங்கம். Rampart, bulwark; கொத்தளம். |
அலங்காரம் | alaṅkāram n. Saltpetre; வெடிகாரம். (சங். அக.) |
அலங்காரமண்டபம் | alaṅkāra-maṇṭa-pam n. <>alaṅkāra+. Saloon; வரவேற்புக்கூடம். (கட்டட. நாமா.) |
அலங்காரமாடம் | alaṅkāra-māṭam n. <>id.+. Tabernacle; ஆராதனைப்பண்டங்களை வைப்பதற்கு ஏற்பட்ட மாடம். (கட்டட. நாமா.) |
அலங்கிதன் | alaṅkitaṉ n. prob. alamkrta. Yellow orpiment; அரிதாரம். (வை. மூ.) |
அலங்கோலை | alaṅ-kōlai n. <>அலங்கோலம். Disorder; slovenliness; அலங்கோலம். Pond. |
அலசகம் | alacakam n. cf. alasa. Common anise; சோம்பு. (பரி. அக.) |