Word |
English & Tamil Meaning |
---|---|
அலாக்கு | alākku n. Wrong, injury; கெடுதி. (R.) |
அலாதசக்கரம் | alāta-cakkaram n. <>a-lāla+. Apparent circle in the air caused by whirling a fire-brand; கொள்ளியைச் சுழற்றுதலிற்றோன்றும் வட்டவடிவு. Loc. |
அலாதம் | alātam n. <>alāta. Charcoal; மரஞ்சுட்ட கரி. (நாநார்த்த.) |
அலாயிதா | alāyitā n. An ancient cess levied at the rate of fanam for every 100 kalams of the settled gross produce; வரையறை செய்த மொத்தவருமானத்தில் 100 கல நெல்லுக்கு ஒருபணம்வீதஞ் செலுத்தும் வரி. (R.T.) |
அலாரி | alāri n. cf. அலாரிதா. Oleander; அலரி. (சங். அக.) |
அலிகம் | alikam n. <>alika. Forehead; நெற்றி. (சிந்தா. நி. 299.) |
அலிப்பான் | alippāṉ n. Saltpetre; வெடியுப்பு. (பச். மூ.) |
அலிமரம் | ali-maram n. <>அலி+. Tree with juicy, fibrous and thorny stem; பாலும் நாரும் முள்ளும் உள்ள மரம். (பச். மூ.) |
அலியாநிலை | aliyā-nilai n. perh. அலை-+ ஆ neg.+. Unalterable state; சலியாத நிலை. அலியா நிலைநிற்கு மைய னையாறன் (தேவா. 294,20) |
அலுப்தசத்தி | alupta-catti n. <>alupta+. (šaiva.) Being possessed of infinite mercy; பேரருளுடைமை. |
அலூகம் | alūkam n. cf. அலுவீகம். Bael; வில்வம். (பச். மூ.) |
அலூரமாமுகம் | alūramāmukam n. Grass; புல். (பச். மூ.) |
அலேபகன் | alēpakaṉ n. <>a-lēpaka. (Phil.) One who believes that sin does not attach itself to a soul; பாவம் ஆன்மாவைப்பற்றா தென்னுங் கொள்கையினன். (சங்கற்பசூரியோ. பக். 8.) |
அலை | alai n. <>அலை-. Hostile criticism; கண்டனம். அலைபலவே யுரைத்தாளென் றருகிருந்தோர் கருதுதலும் (நீலகேசி. 204). |
அலைகாற்று | alai-kāṟṟu n. <>id.+. Fierce wind, tempest; பெருங்காற்று. (R.) |
அலைகொள்(ளு) - தல் | alai-koḷ- v. intr. id+. To be agitated, harassed; வருத்த முறுதல். காமன்கணைகொண் டலைகொள்ளவோ (திருக்கோ. 90). |
அலைதிகுலைதி | alaiti-kulaiti n. <>அலை-+குலை-. cf. Disturbed and confused condition; குலைவு. மயிர்முடி அலைதிகுலைதியாய்ப்பேணாதே போகப் பொக்கையாயிருப்பாளொருத்தி யோடே (திவ். பெருமாள். 6,3, வ்யா. பக். 87). |
அலையல் | alaiyal n. cf. அலசல். Laziness; சோம்பல். (நாநார்த்த.) |
அலைவன் | alaivaṉ n. <>அலவன். Small climbing nettle; பூனைக்காஞ்சொறி. (பச். மூ.) |
அலோகம் | alōkam n. <>a-lōka. (தக்கயாகப். அரும்.) 1. Word where the sun's rays do not fall; சூரியகிரணம்படாத உலகம். 2. That which is not constituted of the five elements; |
அலோகி | alōki n. cf. அலோசி. Purslane; பசளை. (சங். அக.) |
அவ்யாஜகருணை | avyāja-karuṇai n. <>a-vyāja+karuṇā. Grave which does not require any pretext or cause; காரணமே வேண்டாத கிருபை. (தென். இந். க்ஷேத். 252.) |
அவ்வச்சிலேடிகவியாபகம் | avvac-cilēṭika-viyāpakam n. <>aupašlēṣika+vyāpaka. (Phil.) Permeation due to close or immediate contact; நன்கு பொருந்தியுள்ளதாலுண்டாம் வியாபகம். (சிவப்பிர. சிந்தனையுரை.) |
அவ்வமை | avvamai n. Rock salt or sodium chloride used in medicine; இந்துப்பு. (சங். அக.) |
அவ்வல் | avval adj. <>Arab awwal. First, principal; முதன்மையான். (P.T.L.) |
அவ்விதை | avvitai n. True croton-oil plant; நேர்வாளம். (சங்.அக.) |
அவ்வியக்தி | avviyakti n. <>a-vykati. A comet; ஒரு தூமகேது. (தக்கயாகப். 457, உரை.) |
அவ்வியத்தம் | avviyattam n. <>a-vyakta. 1. Soul; ஆன்மா. (நாநார்த்த.) 2. Great Cosmic Space; |
அவ்வியத்தலக்கணை | avviyatta-lakkaṇai n. <>avyakta-lakṣaṇā. Pārvatī; பார்வதி. (கூர்ம்பு. திருக்கலி. 23.) |
அவ்வியத்தலிங்கம் | avviyatta-liṅkam n. <>a-vyakta+. (šaiva.) Formless aspect of God; அருவத்திருமேனி. (சி. சி. 12, 4, மறைஞா.) |
அவ்வியத்தன் | avviyattaṉ n. <>a-vyakta. One who is devoid of intelligence; அறிவில்லாதவன். (நாநார்த்த.) |