Word |
English & Tamil Meaning |
---|---|
அவ்விரதம் | avviratam n. <>a-vrata. Breach of vow; விரதபங்கம். அனைய வவ்விரதத் தோடறிசலம் (நீலகேசி, 242). |
அவ்வெதிரேகம் | avvetirēkam n. <>a-vyatirēka. (Phil.) A fallacious example where the non-existence of both the major and the middle terms is stated but not the pervasion of one by the other; தன்னுறுப்புக்களுள் ஒன்றான வெதிரேகவாக்கிய மின்றிக் கூறும் அனுமான வகை. (மணி. 29, 450.) |
அவ்வையன் | avvaiyaṉ n. cf. அபயன். Tender berry of chebulic myrobalan; கடுக்காய்ப் பிஞ்சு. (சங். அக.) |
அவக்கத்தலா | avakkattalā n. cf. அவகதவாய். A small plant with slender green branches; கீழாநெல்லி. (சங். அக.) |
அவக்கரம் 1 | avakkaram n. <>avaskara. (நாநார்த்த.) 1. Private parts of a male or female; குய்யம். 2. Excrement, dung; 3. Human excrement; |
அவக்கரம் 2 | avakkaram. n. Elephant's liver; யானையின் குடர். (நாநார்த்த.) |
அவக்கரம் 3 | avakkaram n. <>apaskara. A part of a chariot; தேரினங்கம். (நாநார்த்த.) |
அவக்களி | ava-k-kaḷi n. prob. அவம்+prob. கழி-. Useless person; உபயோகமற்றவ-ன்-ள். Loc. |
அவக்கிரகம் | avakkirakam n. <>ava-graha. (நாநார்த்த.) 1. Obstacle; தடை. 2. Drought, failure of rain; 3. Elephant's forehead; |
அவக்கிரசம் | avakkiracam n. <>ava+grāsa. Vinegar; காடி. (W.) |
அவக்கிராகம் | avakkirākam n. <>ava-grāha. Cursing; சபிக்கை. (சிந்தா. நி. 324.) |
அவகடம் | avakaṭam n. <>ava-kaṭa. 1. Evil act; தீச்செயல். அற்பமாங்குணத்தினாலே அவகடஞ்செய்வர் (நீதிசாரம், 19). 2. Misfortune; |
அவகதி | avakati n. <>ava-gati. Knowledge; அறிவு. (சிந்தா. நி. 314.) |
அவகஹனத்துவம் | avakahaṉattuvam n. <>ava-gāhana-tva. The power of inter-penetration; மனத்தினுட் புகுந்தன்மை. (மேருமந். 93, உரை.) |
அவகாசம் | avakācam n. <>avakāša Proprietary right, claim, title; பாத்தியதை. சன்ம அவகாசம், பாட்ட அவகாசம். Nā. |
அவகாசி | avakāci n. <>அவகாசம். Heir; வாரீசு. Nā. |
அவகாயம் | avakāyam n. <>ava-kāša. Space; ஆகாயம். அவகாயத்துத் தேரை யடித்தெருட் டாய் (நீலகேசி, 504). |
அவகாரம் | avakāram n. <>ava-hāra. (நாநார்த்த.) 1. Crocodile; முதலை. 2. Temporary cessation, as of war; 3. Game of dice; 4. Theft; 5. Taking by force; 6. Invitation; 7. Substance, article; |
அவகாரன் | avakāraṉ n. <>ava-hāra. (நாநார்த்த.) 1. Thief; திருடன். 2. Gambler; |
அவகீதம் 1 | avakītam n. <>ava-gīta. (நாநார்த்த.) 1. That which is despised by many; பலர் பழித்தது. 2. Calumny; reproach; |
அவகீதம் 2 | avakītam n. <>apa-gīta. Satiric verse; வசைப்பாட்டு. (நாநார்த்த.) |
அவகீரணம் | ava-kīraṇam n. <>ava-kīrṇa. Scattering; சிதறுகை. மாசவகீரணந்தனையு மேவினர் (வேதாரணிய. மேன்மை. 85). |
அவகுஞ்சனம் | avakucaṉam n. <>ava-kucana. Bend, curve; வளைவு. (சிந்தா. நி. 323.) |
அவச்சாடை | ava-c-cāṭai n. <>அவம்+. Bad or inauspicious; கேடுணர்த்துங்குறி. Loc. |
அவச்சாயை | ava-c-cāyai n. <>apa-c-chāyā. (W.) 1. Shadowless being, as a deity. See அபச்சாயை. 2. A sign of death; 3. Deduction of a person's shadow according to the time of the year in calculating time; |
அவச்சேத்தியம் | ava-c-cēttiyam n. <>ava-c-chēdya. (Log.) That which can be split up; பிரிக்கக்கூடியது. (விசாரசந். 321.) |
அவசத்தம் | ava-cattam n. <>apa-šabda. Incorrect word; பிழைபட்ட சொல். சீவன்முத்த ரென்னும் அவசத்த மாபாதகமென் (முத்திநிச். 17). |
அவசரச்சம்பா | avacara-c-campā n. <>அவசரம்+. A kind of paddy; பெருநெல்வகை. Tinn. |
அவசரத்துக்குப்போ - தல் | avacarattuk-ku-p-pō- v. intr. <>id.+போ-. To answer calls of nature; மலசலங்கழித்தல். Pond. |
அவசரப்பாடல் | avacara-p-pāṭal n. <>id.+. Important stanzas worthy of being committed to memory; அவசியமாக நினைவில் வைக்கவேண்டும் பாடல்கள். (மீனா. சரித். i, 10.) |