Word |
English & Tamil Meaning |
---|---|
அரைச்சவரம் | arai-c-cavaram n. <>id.+. 1. Shaving the head; தலைச்சவரம். 2. Shaving the face; |
அரைசுகட்டு | araicu-kaṭṭu n. prob. அரைசு+கட்டு-. A village perquisite; கிராம சுதந்தர வகை. (Insc. Pudu.) |
அரைத்தூக்கி | arai-t-tūkki n. <>அரை+. Pillory; தூக்குமர வகை. (W.G.) |
அரைநீர் | arai-nīr n. cf. அருநீர். Water for irrigation drawn from a public reservoir during a certain period of the year; குறித்தகாலங்களிற் பாசனமாகப் பாய்ச்சும் நீர். (C.G.) |
அரைப்புக்கட்டி | araippu-k-kaṭṭi n. <>அரைப்பு+. Mahua oil-cake; இலுப்பைப் பிண்ணாக்கு. (சங். அக.) |
அரைப்பூட்டு | arai-p-pūṭṭu n. <>அரை+. Groin; தொடைச்சந்து. Pond. |
அரைபாணா | arai-pāṇā n. A kind of fencing rod; சிலம்பக்கழிவகை. (மதி. களஞ். i, 66.) |
அரைமதியிரும்பு | arai-mati-y-irumpu n. <>அரை+மதி+. A crescent-shaped goad for elephant; அர்த்தசந்திரனைப் போன்ற ஒருவகை அங்குசம். அரைம தியிரும்பொடு (பெருங். உஞ்சைக். 32,96). |
அரைமலை | arai-malai n. <>id.+. Side of a hill; மலையின் சார்பு. (புறநா. 2, உரை.) |
அரையர்கோவை | araiyar-kōvai n. <>அரையன்+. A kōvai on the chief Tayāparaṉ of Tacai, not now extant; தஞ்சைத் தயாபரன் என்ற தலைவன்மேற் பாடப்பட்ட கோவைப் பிரபந்தம். (களவியற். 90.) |
அரையலிடுகை | araiyal-iṭukai n. <>அரை-+. (W.) 1. Rubbing or wearing away a place by sitting or standing; உட்கார்ந்தாவது நின்றாவது ஓரிடத்தைத் தேய்த்துக் கொண்டிருக்கை. 2. Eating too much without doing any work; |
அரையற்றநாள் | arai-y-aṟṟ-nāl n. <>அரை+அறு-+. The 5th, 14th and 23rd nakṣatras; மிருகசீரிடம் சித்திரை அவிட்டம் என்ற நட்சத்திரங்கள். (சோதிட. அக.) |
அரையன் | araiyaṉ n. <>அரசன். An ancient title; ஓர் பழைய பட்டம். அரையன் அரங்கன் பிச்சன் (S.I.I.iii, 438). |
அரையன்சம்பா | araiyaṉ-campā n. perh.id.+. A kind of paddy; நெல்வகை. (A.) |
அரையாப்பு | arai-y-āppu n. <>அரை+. Groin; தொடைச்சந்து. Pond. |
அரையாறுபடு - தல் | arai-y-āṟu-paṭu- v. intr. <>id.+ஆறு+. To decrease, lessen; to be reduced; குறைதல். பிரிவாலே அரையாறுபட்டுச் சிவந்திருக்கும் (ஈடு, 1,4,2, பக். 176.) |
அரைவளைந்தான் | arai-vaḷaintāṉ n. <>id.+. Cloth worn round the loins without kaccam; தட்டுச்சுற்றுடை. Tinn. |
அரைவளைவாசனம் | arai-vaḷaivācaṉam n. <>id.+வளைவு+. (yōge) A kind of semi-circular yōgic posture; யோகாசன வகை. |
அரைவாய்க்கொண்டுதின்னல் | arai-vāy-k-koṇṭu-tiṉṉal n. <>id.+வாய்+. Eating slowly, as diseased-stricken animals; நோயினால் மாடு முதலியன மெதுவாக இரையெடுக்கை. (பெரிய மாட். 156.) |
அரைவீற்று | arai-vīṟṟu n. <>id.+. Semi-circle; வட்டத்திற் பாதி. |
அரைவெறி | arai-veṟi n. <>id.+. Partial intoxication; கட்குடியால் உண்டாஞ் சிறுமயக்கம். (W.) |
அரைவேஷ்டி | arai-vēṣṭi n. <>id.+. Cloth worn as an outer garment, covering from waist to ankles; இடுப்பிற் கட்டும் ஆடை. Colloq. |
அல் | al n. perh. எல். (அக. நி.) 1. Sun; சூரியன். 2. Sunshine; |
அல்கா | alkā n. Padding underneath the collar of a horse; குதிரைச் சேணத்தில் கழுத்து வளையத்துக்குக் கீழிடும் மெத்தை. loc. |
அல்கு - தல் | alku- 5 v. tr. To preserve; சேமித்துவைத்தல். சிலைகெழு குறவர்க் கல்குமிசைவாகும் (புறநா. 236). |
அல்கு | alku n. <>அல்கு-. Stay, sojourn; தங்குகை. (பொதி.நி.) |
அல்குப்பை | alkuppai n. Ceylon verbisina; பொற்றலைக்கையாந்தகரை. (வை. மூ.) |
அல்சா | alcā n. Rudder; சுக்கான். Loc. |
அல்டப்பா | alṭappā n. Useless thing; பயனற்றது. Madr. |
அல்தி | alti n. <>U. alṭi. A term in the game of marbles used by a player for removing the obstacles in his front, before playing; கோலியாட்டத்தில் கோலியாடுபவன் தன்னுடைய கோலிக்கு முன்னே அடிக்கத்தடையாக உள்ள செத்தை குப்பைகளை நீக்குவதற்காகச் சொல்லும் வார்த்தை. Madr. |
அல்நார் | alnār n. <>கல்நார். Asbestos; கல்நார். (R.) |