Word |
English & Tamil Meaning |
---|---|
அவிந்துவி | avintuvi n. Cuscus grass; இருவேரி. (பச். மூ.) |
அவிநாசவாதி | avināca-vāti n.<>a-vināša-vādin. (Phil). One who holds that matter is indestructible; பொருள் அழியாத தென்னுங் கொள்கையுடையோன். அவ னவிநாச வாதி யாதலிற் சாத்தியவிநாச மப்பிரசித்தமாகும் (மணி.29,171-2). |
அவிப்பிணம் | avippiṇam n. Salt prepared by distilling the solution of saline earth; உவர்மண்ணை யெடுத்துக் காய்ச்சும் உப்பு. (சங். அக.) |
அவியயம் | a-viyayam n.<>a-vyaya. That which is imperishable; அழியாதது. அவியயமாமிதை முயல்வாற்கொல வலரார் (பகவற்.2, 21). |
அவியரிசி | avi-y-arici n.<>அவி-+. A kind of rice; புட்டரிசி. (சித். அக.) |
அவியல்மணம் | aviyal-maṇam n.<>id.+. Offensive smell of putrid vegetable matter; காய்கறி முதலானவை அழுகுவதாலுண்டாம் துர்நாற்றம். (W.) |
அவியற்கறி | aviyaṟ-kaṟi n.<>அவியல்+. A relish prepared with several kinds of vegetables, mixed hotch potch; பல மரக்கறிகளை ஒரு சேரச் சமைத்த கறி. Colloq. |
அவிர் - தல் | avir- 4 v. intr. To be torn; to be rent asunder; பீறுதல்- (பொதி. நி) |
அவிரோதம் | a-virōtam n.<>a-virōdha. Amicability; சினேகம். (S. I. I. Vii, 69.) |
அவின் | aviṉ n.<>U. afīm. Opium; அபின். (நாமதீப.) |
அவினந்தமாலை | aviṉanta-mālai n. A treatise on mathematics, not now extant; கணித நூல்வகை. (யாப். வி. 528.) |
அவினாபாவசத்தி | aviṉāpāva-catti n.<>a-vindā-bhāva+. (šaiva.) šakti which is inseparable from šiva; சிவத்தினின்று பிரியாத சக்தி. (சி.சி. 1.74, உரை.) |
அவினாபாவி | a-viṉā-pāvi n.<>a-vinā-bhāvin. That which is inseparable; பிரிக்க முடியாதது. கேவலஞானமும் அதனோடு அவினாபாவியாகிய கேவலதரிசன கேவலவீரிய கேவலசுகமு முடையானவனே சுவாமியாக (நீலகேசி, கடவுள் 1, உரை). |
அவிஜ்ஞாதார்த்தம் | avijatārttam n.<>avijāta+artha. (Log.) A defect in argumentation; தோல்வித்தானங்களு ளொன்று. (செந்.iii, 13.) |
அவிஷ்டு | aviṣṭu n. cf. apaṣṭha. Loc. 1. One who utters words of ill-omen; துர்க்குறியான சொற்களைச் சொல்லுபவன். 2. One who is morally depraved; |
அவீசி 1 | avīci n. A kind of comet; தூமகேது வகை. (தக்கயாகப். 457, உரை.) |
அவீசி 2 | avīci n.<>a-vīci. That which is unruffled, waveless; திரையில்லாதது. (நாநார்த்த.) |
அவீரை | avīrai n.<>avīrā. Sonless widow; பிள்ளையில்லாத விதவை . Loc |
அவுசுக்காரன் | avucu-k-kāraṉ n. <>அவிசு+. One very fond of dress; ஆடையிற் பிரியம் உடையவன். (W.) |
அவுசுப்பம் | avucuppam n. See அவிசுப்பம். (சங். அக.) . |
அவுசூசிகம் | avucūcikam n. See அவிசுப்பம். (சித். அக.) . |
அவுரி | avuri n. [M.avali.] A kind of fish; மீன்வகை. Tinn. |
அவுரிச்சால் | avuri-c-cal n. prob. அவுரி+. Big vessel with wide mouth; வாயகன்ற பெரியசால். Loc. |
அவுரிப்பச்சை | avuri-p-paccai n. perh. அவிர்-+. Refined camphor; பச்சைக்கருப்பூரம். (வை. மூ.) |
அவுஷதகந்தசுரம் | avuṣata-kanta-curam n.<>auṣadha+gandha+. Fever caused by medicinal poison; பாஷாணமருந்தாலுண்டாஞ்சுரம். (ஜீவரட்.) |
அவுஸ்திரேலியா | avustirēliyā n. <>E. Australia. The continent ot Australia; ஆஸ்திரேலியாகண்டம் (M. Navig. 47.) |
அவெளி | aveḷi n. A species of wood-apple; நிலவிளா. (பரி. அக.) |
அவைநான்கு | avai-nāṉku n. <>அவை+. Assembly, of four kinds, viz., nal-l-avai, tī-y-avai, kuṟai-y-avai, niṟai-y-avai; நல்லவை தீயவை குறையவை நிறையவை என்ற நால்வகைக் கூட்டம். (யாப். வி. ஒழிபி. 96, உரை, பக். 514.) |
அவையம் | avaiyam n. cf. அவயம். Cuscusgrass; இலாமிச்சை. (வை. மூ.) |
அவையல் 1 | avaiyal n. <>அவை. Collection, gathering; திரள். (அக. நி.) |
அவையல் 2 | avaiyal n. <>அவை-. Parched rice; அவல். (W.) |