Word |
English & Tamil Meaning |
---|---|
அவைராக்கியம் | a-vairākkiyam n.<>a-vairāgya. Absence of obstinacy, a characteristic of the intellect, one of eight putti-kuṇam, q.v.; புத்திகுணம் எட்டனுள் ஒன்றான பிடிவாதமின்மை. (சி.போ.பா. 2,2, பக். 164.) |
அழகங்காட்டு - தல் | aḻakaṅ-kāṭṭu- v.intr. <>அழகு+ காட்டு-. To mimic; அழகு காட்டுதல். Tinn, |
அழகச்சு | aḻakaccu n. <>id+அச்சு . A coin; நாணயவகை. (T. A. S. iii, 50.) |
அழகப்பன்காளை | aḻakappaṉ-kāḷai n. <>id +அப்பன்+. Sacred bull, adorned with cowries and trained by a class of wandering mendicants; பெருமாள்மாடு. Tinn, |
அழகம் | aḻakam n. <>alaka. Woman's tresses; பெண்டிர் கூந்தல். அழகத் திருநுதலானாய்ந்து (பு. வெ. 12, வென்றிப். 16). |
அழகன் | aḻakaṉ n. <>அழகு. Viṣṇu; திருமால். (தக்கயாகப். 239, உரை.) |
அழகாத்திரிவெட்டு | aḻakāttiri-veṭṭu n. <>id+.அத்திரி+. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 132.) |
அழகாரம் | aḻakāram n. <>id. (W.) 1. Brilliancy of expression; அழகான பேச்சு. 2. Empty compliment; |
அழகு | aḻaku n. [M.alaku.] Good nature; சற்குணம். (அரு.நி.) |
அழகுசெண்டேறு - தல் | aḻaku-ceṇṭēṟu- v. intr. <>அழகு+. To exhibit one's beauty; அழகைக்காட்டுதல். (ஈடு,1, 4, 6.) |
அழகெருது | aḻakerutu n. <>id.+. An ancient tax; வரிவகை.(T. A. S. iii, 32.) |
அழகெருதுக்காட்சிக்காசு | aḻakerutu-k-kāṭci-k-kācu n. <>அழகெருது+காட்சி+. See அழகெருது. (M. E. R. 619 of 1916.) . |
அழல்விரணம் | aḻal-viraṇam n. <>அழல்+. Ulcer caused by fire; நெருப்புச்சுட்டதால் உண்டாம் புண். Loc. |
அழலானி | aḻal-āṉi n. prob. id.+hāni. Fading, withering; வாட்டம். க்ஷணேஜ்வலமாய் அழலானியையுடைய தாமரைப்பூவில் வ்யாவிருத்தமாய். (திவ். அமலனாதி, தனியன், வ்யா. 6). |
அழலிடமேந்தி | aḻal-iṭam-ēnti n. <>id.+இடம்+. God šiva, as holding a ball of fire in His left hand; சிவபிரான். (கந்த. சு. 1.) |
அழற்காமாலை | aḻaṟ-kāmālai n. <>id.+. A kind of jaundice; காமாலை நோய்வகை. (தஞ். சரசு, iii. 122.) |
அழற்பால் | aḻaṟ-pāl n. <>id.+. Madar; எருக்கு. (பச். மூ.) |
அழற்பித்தம் | aḻaṟ-pittam n. <>id.+. A kind of bilious disease; பித்தநோய்வகை. (W.) |
அழற்பிரவை | aḻaṟ-piravai n. <>id.+prabhā. A hell; நரகவகை. (W.) |
அழற்றி | aḻaṟṟi n. <>அழல்-. (சம். அக. Ms.) 1. Burning; எரிவு. 2. Anger; 3. Envy; |
அழி | aḻi n. <>aḷi. Beetle; வண்டு. அழிமல்கு பூம்புனலும் (தேவா. 78, 3.). |
அழி 1 - த்தல் | aḻi- 11 v. intr. To find a solution of; to resolve; விடைகாணுதல். கதை அழித்தல். |
அழி 2 - த்தல் | aḻi- 11 v. tr. & intr. To despise; நிந்தித்தல். அழித்துச் சொன்னவாறு (தக்க யாகப் . 494, உரை). |
அழி 1 | aḻi n. <>அழி-. 1. Excessiveness; மிகுதி. அற்றா ரழிபசி தீர்த்தல் (குறள், 226). 2, Pain; |
அழி 2 | aḻi n. <>அழி-. Place where the lagoon joins the sea; கழிமுகம். Nā. |
அழிகரப்பான் | aḻi-karappāṉ n. prob. id.+. Ringworm; படர்தாமரை நோய். Pond. |
அழிகரு | aḻi-karu n. <>id.+. Aborted foetus; கருவழிவு. (W.) |
அழிகன்று | aḻi-kaṉṟu n. <>id.+. Aborted foetus, in animals; விலங்குகளின் வயிற்றினின்று சிதைந்துவிழுங் கரு. Pond. |
அழிகால் | aḻi-kāl n. <>id.+ கால். Betelleaf garden. where the vines aare unproductive from age and have to be destroyed; முதிர்ச்சியால் அழிக்கவேண்டியதான வெற்றிலைத்தோட்டம். (P.T.L.) |
அழிகொடிக்கால் | aḻi-koṭikkāl n. <>id.+. See அழிகால். Colloq. . |
அழித்துச்சொல்(லு) - தல் | aḻittu-c-cōl- v. intr. <>அழி-+. To refer contemptuously; இழித்துக் கூறுதல். (தக்கயாகப். 494, உரை.) |
அழித்துரை | aḻitturai n. <>id.+உரை. Word of contempt; இழித்துரை. (தக்கயாகப். 508, உரை.) |