Word |
English & Tamil Meaning |
---|---|
அளக்கடவுள் | aṟa-k-kaṭavuḷ n. <>அறம்+. Vidura, an uncle of the Pāṇdavas, as the incarnation of Yama; விதுரன். நல்லறக்கடவுளுக்கு முரையா (பாரத. வாரணா. 54). |
அறக்கப்பாலை | aṟakka-p-pālai n. Ovalleaved China root; திருநாமப்பாலை. (சித். அக.) |
அறகப்பிளப்பி | aṟaka-p-piḷappi n. See அறக்கப்பாலை. (பச். மூ.) . |
அறங்காவல் | aṟaṅ-kāval n. <>அறம்+. Wardenship of temples, caityas, etc.; கோயில் சைத்தியம் முதலாயின காக்குந்தொழில். (S. I. I. iv, 492.) |
அறச்சாலாபோகம் | aṟa-c-cālā-pōkam n. <>id.+சாலை+. Endowment of land for the maintenance of choultries, etc.; அறச்சாலைகளுக்குவிட்ட மானியம். (S. I. I. iii, 389.) |
அறச்செல்வி | aṟa-c-celvi n. <>id.+. Pārvatī; பார்வதி. (சிந்தா. நி. 351.) |
அறச்சோலை | aṟa-c-cōlai n. <>id.+. Grove within a temple; கோயிலினுட் சோலை. (தக்கயாகப். 65.) |
அறசம் | aṟacam n. Brinjal; கத்தரி. (சங். அக.) |
அறசோகணக்கு | aṟacōkaṇakku n. 1. Purple-stalked dragon; காட்டுக்கருணை. (பரி. அக.) 2. Elephant yam; |
அறத்தளி | aṟa-t-taḻi n. prob. அறம்+. Zenana, harem; அந்தப்புரம். (சிந்தா. நி. 349) |
அறத்தின்மூர்த்தி | aṟattiṉ-mūrtti n. <>id.+. 1. Pārvatī; பார்வதி (W.) 2. The God of Justice; 3. Viṣṇu; |
அறத்துப்பால் | aṟattu-p-pāl n.<>id+. The first section of Kuṟaḷ, which treats of dharma, one of mu-p-pāl, q. v., திருக்குறளின் முப்பால்களுள் முதலானதும் தருமத்தைப்பற்றிக் கூறுவதுமான பகுதி. |
அறத்துவச்சளம் | aṟattu-vaccaḷam n. <>id.+ vatsalatva. (Jaina.) Showing tender love towards the followers of Jainism and settling them firmly in their religion; ஜைந தர்மத்தைச் சார்ந்தவர்களை அதன்கண்ணே நிலைநிறுத்தி அவர்களிடத்து மிக்க அன்புசெலுத்துகை. (மேருமந். 1343.) |
அறதனம் | aṟa-taṉam n. Miruta-pāṣāṇam A mineral poison; மிருதபாஷானம். (சங். அக.) |
அறதேயன் | aṟa-tēyaṉ n. prob. அறம் + தேயம். One who manages charitable endowments; தருமங்களை நடத்துவோன். (S. I. I. iv, 31.) |
அறநிலை | aṟa-nilai n. <>id.+. Institution for managing charities; தருமங்களைப் பாதுகாத்தற்குரிய நிலயம். Mod. |
அறநீர் | aṟa-nīr n. <>அறல்+. Water allowed for irrigation, in large or small quantity according to the storage in the reservoir; அருநீர். (R. T.) |
அறநெறிச்சந்தேகசாஸ்திரி | aṟaneṟi-c-cantēka-cāstiri n. <>அறநெறி+. Casuist; சாஸ்திரபரிசீலனை செய்வோன். Chr. |
அறப்பரிகாரம் | aṟa-p-parikāram n. See அறப்பரிசாரம். (சிலப். 2, 85, அரும்.) . |
அறப்பரிசாரம் | aṟa-p-paricāram n. <>அறம்+. Services rendered to ascetics, etc.; துறந்தோர் முதலியவர்க்குச் செய்யும் பணிவிடை. (சிலப். 2, 85.) |
அறப்பாடுபடு - தல் | aṟa-p-pāṭu-paṭu- v. intr. <>அற+பாடு+. To work hard; கஷ்டப்பட்டு வேலைகளைச் செய்தல். |
அறம் | aṟam n. <>அறு-. 1. Happiness; சுகம். (சம். அக. Ms.) 2. That which is salutary; |
அறம்புறமாகப்பேசு - தல் | aṟam-puṟamāka-p-pēcu- v. intr. <>அறம்+புறம்+ஆ-+. To speak disrespectfully, vulgarly; மரியாதையின்றித் தாழ்வாகப் பேசுதல். (J.) |
அறமனைவார்த்தை | aṟamaṉai-vārttai n. <>அரண்மனை+. Word used in official records or communications; சர்க்கார் நடவடிக்கைகளில் வழங்குஞ் சொல். (P. T. L.) |
அறல் | aṟal n. <>அறு-. 1. Fine sand; நுண்மணல். (பொதி. நி.) 2. Festival; 3. Koṟṟāṉ, a parasitic leafless plant; |
அறவன் | aṟavaṉ n. <>அறம். One who teaches the doctrines of religion, as of the Jains; அறத்தைக் கூறுவோன். அருகனறவ னறிவோற் கல்லது (சிலப். 10, 202). |
அறவாய்ப்போ - தல் | aṟa-v-ā-y-p-pō- v. intr. <>அறு-+ஆ-+. To be exhausted, completely spent; அறுவாய்ப்போதல். Tinn. |