Word |
English & Tamil Meaning |
---|---|
அறவை | aṟavai n. <>அறம். Righteousness; தருமநெறி. அறவை செஞ்சத்தாயர் (புறநா. 390). |
அறவைப்பு | aṟa-vaippu n. <>அறு-+வை-. Calcination; புடம்வைக்கை. (யாழ். அக.) |
அறவோலை | aṟa-v-ōlai n. <>அறம்+. Trust deed; இனாம் சாசனம். (Insc.) |
அறவோன் | aṟavōṉ n. <>id. The Buddha; புத்தன். அறவோ னாசனம் (மணி. 12, 11). |
அறளிகா | aṟaḷikā n. Golden colour of the teeth of horses when they are about eleven years old; சுமார் பதினோரு வயதான குதிரையினுடைய பற்களின் பொன்னிறம். (அசுவசா. 6.) |
அறனையம் | aṟaṉaiyam n. cf. அறணை Purple-stalked dragon; காட்டுக்கருணை. (சங். அக.) |
அறாம்பை | aṟāmpai n. cf. அறாமை. White dead-nettle; தும்பை. (சங். அக.) |
அறாவட்டி | aṟā-vaṭṭi n. <>அறு-+ஆ neg.+. Exorbitant interest; அதிக வட்டி. அன்னியரை யெல்லாம் அறாவட்டி வாங்கி (நெல்விடு. 368). |
அறி - தல் | aṟi- 4 v. tr. To discover; புதிதாய்க் கண்டுபிடித்தல். Pond. |
அறிக்கை | aṟikkai n. Training, teaching; பயிற்றுகை. (பொதி. நி.) |
அறிகண்ணி | aṟikaṇṇi n. Root of madar; எருக்கங் கிழங்கு. (சங். அக.) |
அறிசலம் | aṟi-calam n. <>அறி-+சலம். Conscious guilt; நெஞ்சறிந்த குற்றம். அனையவவ் விரதத்தோ டறிசலம் (நீலகேசி, 242). |
அறிசா | aṟicā n. A kind of fish; ஒருவகை மீன். (சங். அக.) |
அறிட்டம் | aṟiṭṭam n. (சங். அக.) cf. அருட்டம். 1. Black hellebore; கடுகுரோகினி. 2. Pepper; 3. cf. அரிட்டம் Margosa; |
அறிமடம் | aṟi-maṭam n. <>அறி-+. (W.) 1. Forgetfulness, inability to recall to memory; ஞாபகமின்மை. 2. Inability to reduce to practice what one has learnt; |
அறியல் | aṟiyal n. cf. அரில். Bamboo; மூங்கில் (சங். அக.) |
அறிவறை | aṟivaṟai n. <>அறிவு+அறு-. (W.) 1. Lack of spiritual knowledge: ஆன்ம போத மின்மை. 2. Delusion; 3. One destitute of spiritual knowledge; |
அறிவன் | aṟivaṉ n. <>அறி-. The nakṣatra uttiraṭṭāti; உத்திரட்டாதி. (நாநார்த்த.) |
அறு - தல் | aṟu- 6. v. intr. To be digested; சீரணித்தல். அற்றது போற்றியுணின் (குறள், 942). |
அறுக்கணக்கு | aṟu-k-kaṇakku n. prob. அறை+. Store account; உக்கிராணக் கணக்கு. Loc. |
அறுக்கன் | aṟukkaṉ n. (சம். அக. Ms.) 1. Chief; கோ. 2. Confidant, intimate friend; |
அறுகிலிப்பூடு | aṟukili-p-pūṭu n. <>அறுகு +இலி+. A kind of shrub; பூடுவகை. (Insc.) |
அறுகு 1 | aṟuku n. <>அருகு 1. A covered platform or terrace, forming a verandah or porch; pial; வெளித்திண்ணை. (W. G.) 2. Pandal in the street, in front of a house; |
அறுகு 2 | aṟuku n. prob. அறு-. Elephant; யானை. (பொதி. நி.) |
அறுகுவெட்டுத்தரிசுகூலி | aṟuku-veṭṭu-t-taricu-kūli n. <>அறுகு+வெட்டு-+. Right to enjoy land reclaimed from jungle growth and brought under cultivation; தரிசுநிலத்திலுள்ள காடுகளை வெட்டிச் செம்மை செய்து உழவுக்குக் கொண்டுவந்தவர்க்கு அதுபற்றி அந்நிலத்தில் ஏற்பட்ட அனுபோகவுரிமை. Loc. |
அறுகெடு - த்தல் | aṟukeṭu- v. intr. <>id.+எடு-. 1. To invoke blessings on a person, by scattering on his head rice with cynodon grass; அறுகிட்டு ஆசீர்வதித்தல். மறையோ ரறுகெடுப்ப (சேக்கிழார். பு. 88). 2. to worship; |
அறுகெழுந்தபடுதரை | aṟukeḷunta-paṭu-tarai n. <>id.+எழு-+. Land overgrown with harialli grass, classified as waste; அறுகுமுளைத்து உழவுக்குப் பயன்படாத தரிசுநிலம். (S. I. I. v, 376.) |
அறுகைவாணிகன் | aṟukai-vāṇikaṉ n. <>அறுவை+. Cloth merchant; ஆடை விற்பவன். (S. I. I. vii, 318). |
அறுசங்கம் | aṟucaṅkam n. cf. அனுசங்கம். Copulation; புணர்ச்சி. (சித். அக.) |
அறுசூலை | aṟu-cūlai n. <>அறு+. Six kinds of arthritis or gout, viz., pitta-cūlai, vāta-cūlai, cilēṭṭuma-cūlai, vāta-pitta-cūlai, cilēṭ-ṭuma-pitta-cūlai, aiyakaṇa-cūlai, q. v.; பித்தசூலை வாதசூலை சிலேட்டுமசூலை வாதபித்தசூலை சிலேட்டுமபித்தசூலை ஐயகணசூலை என்னு அறுவகைச் சூலைநோய். (R.) |