Word |
English & Tamil Meaning |
---|---|
அறைகழித்தல் | aṟai-kaḷittal n. <>id.+. Ceremony of coming out of the lying-in chamber after delivery; பிரசவித்தபின் பிரசவவறையினின்று வெளிவருதற்குரிய சடங்கு. Loc. |
அறைகுறை | aṟai-kuṟai n. <>அறு-+. (W.) 1. Want, necessity; தேவை. 2. Trouble; |
அறைகூறு - தல் | aṟai-kūṟu- v. tr. <>அறை-+. To challenge; அறைகூவுதல். பூர்வக்ஷணத்திலே வாலி கையாலே நெருக்குண்டுபோனவர் இப்போது இப்படித் தெளிந்துவந்து அறைகூறுகிற இது (ஈடு, 1, 4, 9). |
அறைப்பிள்ளை | aṟai-p-piḷḷai n. <>அறை+. Baby, only a few days old and not brought out of the lying-in chamber; அறைக்குழந்தை Loc.. |
அறைப்புரை | aṟai-p-purai n. <>id.+. Room; அறைவீடு. Nā. |
அறையினாம் | aṟai-y-iṉām n. <>id.+. Rent-free land, granted for the services of the store-keeper in a temple; கோயில் அறைகாரனுக்கு விட்ட மானியம். (R. T.) |
அறைவகு - த்தல் | aṟai-vaku- v. intr. <>id.+. To become fistulous, as an ulcer; புரையோடுதல். (பரராசசே. 230.) |
அறைவாசல் | aṟai-vācal n. <>id.+. Temple store-room; கோயில் உக்கிராணவறை. Loc. |
அறைவாய் | aṟai-vāy n. <>id.+. Mountain, pass; கணவாய். உலக விடைகழி யறைவாய் (புறநா. 175). |
அறைவீடு | aṟai-vīṭu n. <>id.+. Kitchen of a temple; மடைப்பள்ளி. (J. N.) |
அன்பகம் | aṉpakam n. cf. அன்பகர். Elephant creeper சமுத்திரப்பாலை. (சங். அக.) |
அன்மதம் | aṉmatam n. Rock alum; கன்மதம். Pond. |
அன்மயம் | aṉmayam n. Doubt; சந்தேகம். (சிந்தா. நி. 378.) |
அன்வயத்தார் | aṉvayattār n. <>anvaya. Relatives; சுற்றத்தார். நாங்களும் எங்கள் அன்வயத்தாரும். (S. I. I. v, 325). |
அன்வயம் | aṉvayam n. <>anvaya. (Jaina.) That which is inherent and inseparable; தாதான்மியகுணம். அன்வயம் வெதிரேகம் (மேருமந். 698). |
அன்றமை | aṉṟamai n. Air; காற்று. (அக. நி.) |
அன்றாள்கோ | aṉṟāḷ-kō n. <>அன்று+ஆள்+. Reigning monarch; அப்பொழுது ஆளும் அரசன். முட்டில் அன்றாள்கோவுக்கு நிசதிகுன்ற பொன் மன்ற ஒட்டிக்கொடுத்தேன் (S. I. I. i, 115). |
அன்றியுரை - த்தல் | aṉṟi-y-urai- v. intr. <>அன்று+. To speak in opposition; மாறபட்டுச் சொல்லுதல். ஆரையு மன்னியுரைப்பன். (தேவா. 743, 10). |
அன்றில் | aṉṟil n. Peacock; மயில். (சம். அக. Ms.) |
அன்னக்காவடி | aṉṉa-k-kāvaṭi n. <>அன்னம்+. Inam granted for the service of collecting boiled rice from door to door and feeding beggars; அன்னப்பிச்சை யெடுத்துப் பிச்சைக்காரருக்குப் பங்கிடுபவருக்கு ஏற்பட்ட இனாம். (R. T.) |
அன்னக்கொடியோன் | aṉṉa-k-koṭiyōṉ n. <>அன்னம்+. Brahmā; பிரமன். (சிந்தா. நி. 366). |
அன்னக்கொண்டி | aṉṉakkoṇṭi n. <>id.+கெண்டி. A brass vessel shaped like a swan; அன்னவடிவாகச் செய்த பித்தளைப்பாத்திரம். (M. E. R. 22 of 1920). |
அன்னங்கோர்(ரு) - தல் | aṉṉaṅ-kōr- v. intr. <>அன்னம்+. See அன்னம்பிடி-. Nā. . |
அன்னத்தியாகி | aṉṉa-t-tiyāki n. <>id.+. A title; ஒரு பட்டப்பெயர். (கொங்கு. சதக. 77.) |
அன்னதானக்குறுவை | aṉṉ-tāṉa-k-kuṟuvai n. A kind of paddy; நெல்வகை. (A.) |
அன்னநீர் | aṉṉa-nir n. <>அன்னம்+. Water allowed to stand over cooked-rice overnight; நீராகாரம். (பச். மூ.) |
அன்னப்பூ | aṉṉa-p-pū n. <>அன்னம்+. An ornament worn on the head by women; மகளிர் தலையணிவகை. Loc. |
அன்னப்பக்கம் | aṉṉa-pakkam n. <>id.+. (Nāṭya.) A hand-pose; அவிநயக்கைகளுளொன்று. (சிலப். 3, 18, உரை.) |
அன்னபிட்சை | aṉṉa-piṭcai n. <>அன்னம்+. Begging of boiled rice; அன்னமாக வாங்கும் பிச்சை. (மீனாட். சரித். i, 19.) |