Word |
English & Tamil Meaning |
---|---|
அனங்கத்தானம் | aṉaṇka-t-tāṉam n. <>அனங்கன்+. Temple of the God of Love; காமன் கோட்டம். அனங்கத்தானம் புகுந்தவற்கண்டு (பெருங். மகத.17,75) |
அனங்கம் | aṉaṅkam n. <>an-aṅga. (நாநார்த்த.) 1. Atmosphere, sky. ஆகாசம் 2. Mind |
அனங்காகமம் | aṉaṅkākamam n. <>anaṅga + ā-gama. Sexual science; காமநூல். (மதுரைக்கோ.13.) |
அனந்ததேவநாயனார் | aṉanta-tēva-nāyaṉār. n. <>ananta-dēva. The from of šiva responsible for the material cause of the world. அசுத்தமாயாதத்துவத்தின் உற்பத்திக்குக் காரணமான சிவமூர்த்தி. (சி.சி.2,54, மறைஞா.) |
அனந்தநாதன் | aṉantanātaṉ n. Fuller's earth; உழைமண். (R) |
அனந்தபீதம் | aṉantapītam n. Southern wood; மருக்கொழுந்து. (பச். மூ) |
அனந்தம் | aṉantam n. <>ananta. Indestructibility அழிவின்மை (நாநார்த்த.) |
அனந்தர் | aṉantar n. <>ananta. (šaiva.) 1. A Rudra; உருத்திரருள் ஒருவர். (சி.போ.பா.2,3,பக்.215) 2. A kind of pedestal, one of six calācaṉam,q.v..; |
அனந்தரம் 1 | aṉantaram n. cf. அனந்தர், Species of doemia; வேலிப்பருத்தி, (பச், மூ,) |
அனந்தரம் 2 | aṉantaram n. (Arch. ) Collar piece; சிலாவி என்னும் கட்டடவுறுப்பு. Loc. |
அனந்தரவன் | aṉantaravaṉ. n. <>அனந்தரம். Junior member of a maru-makkaṭṭāyam family மருமக்கட்டாயக் குடும்பத்தில் காரணவனுக்கு இளையவன். |
அனந்தவாசி | aṉanta-vāci n. <>ananta + vācin. Word meaning 'many'; 'பல' என்னும் பொருளைக்குறிக்குஞ் சொல். சதம் என்பது அனந்தவாசி (தக்கயாகப்.73, உரை). |
அனந்தவிபவை. | aṉanta-vipavai n. <>ananta-vibhavā Pārvati; பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண.23) |
அனந்தன் | aṉantaṉ, n. 1. The serpent Vāsuki; வாசுகி என்னும் நாகம், (நாநார்த்த,) 2. Balarāma; 3. Saltpetre; |
அனந்தன்சம்பா | aṉantaṉ-campā n. A kind of paddy; பொற்கற்சம்பா. (P.T.L.) |
அனந்தாகமம் | aṉantakamam n. prob. ananta + A secondary Agama; உபாகமங்களிலொன்று. (தக்கயாகப். 334. உரை.) |
அனந்தாழ்வான் | aṉantālvāṉ n. 1. A Vaiṣṇava ācarya, pupil of Rāmānujācārya; இராமாநுஜாசாரியரின் சிஷ்யரான ஒரு வைஷ்ணவாசாரியர் (குருபரம்.) 2. An ancient coin; |
அனந்தேசுவரர் | aṉantēcuvarar n. <>ananta + īšvara. A Rudra; உருத்திரருள் ஒருவர் (சதாசிவ. 32, உரை) |
அனந்தை | aṉantai n <>anantā. 1. Small climbing nettle; சிறுகாஞ்சொறி. (நாநார்த்த.) 2. Indian sarasaparilla; 3. Indian acalypha; 4. Harialli grass; 5. Chebulic myrobalan; 6. Gulancha 7. Red species of malabar glory-lily; 8. (šaiva.) A mystic centre in the body, one of cōṭāca-kalai, q,v,; |
அனயகம் | aṉayakam n. (வை. மூ) 1. Tuscan jasmine; இருவாட்சி. 2.Jasmine |
அனயம் | aṉayam n. <>a-naya. (நாநார்த்த.) 1. Evil deed. தீவினை. 2. Danger; 3. Inauspiciousness 4. Misery; |
அனர்த்தம் | aṉarttam n. <>an-artha Ruin, waste கேடு (நாநார்த்த.) |
அனர்வன் | aṉarvaṉ. n. See அனவரவன், 1,2. (வை.மூ) . |
அனரவன் | aṉaravaṉ n 1. White species of Malabar-lily; வெண்காந்தள். (W) 2. Malabar glory-lily 3. Pacapaṭci-pāṣāṇam, a prepared arsenic |
அனல்விரை | aṉal-virai n. prob. அனல்+. Croton; நேர்வளம் (பச். மூ) |
அனலசம் | aṉalacam, n. Colocynth; பேய்க்கொம்மட்டி. (பச், மூ.) |
அனலநட்சத்திரம் | aṉala-naṭcatṭiram n. <>anala+. (Astrol) The 7th,14th , 16th and 25th nakṣatras, counted fromṟthe nakṣatra occupied by Mars; செவ்வாள் நின்ற நாளுக்கு ஏழு பதினான்கு பதினாரு இருபத்தைந்தாம் நாள்கள். (விதான. குணாகுணா.40.உரை) |
அனலம் | aṉalam n. <>anala See அனலநட்சத்திரம் (விதான. குணாகுணா.40) . |