Word |
English & Tamil Meaning |
---|---|
அறுதல் | aṟutal n. <>அறு-. A defect in coins; நாணயக்குற்றவகை. (சரவண. பணவிடு. 66.) |
அறதாலி | aṟu-tāli n. <>id.+தாலி. Widow; கைம்பெண். அறுதாலியாரை யழைத்துத் தன் வீட்டிருத்தி (ஆதியூரவதானி). |
அறுதிப்பங்கு | aṟuti-p-paṅku n. <>அறுதி+. The last and final payment made towards the discharge of debt; கடன் தீர்ப்பதிற் கடைசித் தவணையாகக் கொடுக்குந் தொகை (W.) |
அறுதிப்பட்டு | aṟuti-p-paṭṭu n. <>id.+. Silk presented as aṟuti-p-pariyaṭṭam; அறுதிப் பரியட்டமாகக் கட்டும் பட்டு. Loc. |
அறுதிப்பரிவட்டம் | aṟuti-p-parivaṭṭam n. <>id.+. See அறுதிப்பட்டு. Loc. . |
அறுதிமுறி | aṟuti-muṟi n. <>id.+. Cancelled lease-deed; தீர்ந்த கணக்குச் சீட்டு. ஆண்டு தோறும் அறுதிமுறி பெறவும். (S. I. I.viii, 140). |
அறுதுவர்ப்பு | aṟu-tuvarppu n. <>ஆறு+. Six kinds of emotions viz., āciyam, irati, arati, cōkam, arccam, kurccai, q. v.; ஆசியம் இரதி அரதி சோகம் அர்ச்சம் குர்ச்சை என்ற ஆறுவகையான ரசம். (R.) |
அறுப்படிகணக்கு | aṟuppaṭi-kaṇakku n. <>அறு-+. Balance sheet, statement showing profit and loss; லாபநஷ்டங்களைக் காட்டுங் கணக்கு. Loc. |
அறுப்பம்புல் | aṟuppam-pul n. perh. id.+. A kind of grass; புல்வகை. நீடறுப்பம் புல்லாய்ப் படுபாதிபோக (சரவண. பணவிடு. 144). |
அறுப்பு | aṟuppu n. <>அறு-.(W.) 1. Becoming a widow; தாலியறுக்கை. 2. Opening of a wound; 3. Cut section of a piece of timber; 4. Refutation, as of an argument; |
அறுப்புக்கோடி | aṟuppu-k-kōṭi n. <>அறுப்பு+. New cloth given to a widow, at the funeral of her husband, by her relatives; தாலியறுத்தவட்குச் சுற்றத்தார் இடும் புதுவஸ்திரம். Tinn. |
அறுப்புச்சொம்மு | aṟuppu-c-commu n. <>id.+. Lump sum given to a childless widow, for her maintenance, by her husband's relations; பிள்ளையில்லாத விதவைக்குப் புக்ககத்தார் ஜீவனாம்சத்திற்காக மொத்தமாய்க் கொடுக்குந் தொகை. Nā. |
அறுபத்தை | aṟupattai n. cf. அறுபதம். A species of eclipta; கையாந்தகரை. (பச். மூ.) |
அறுபதாங்கேழ்வரகு | aṟupatāṅ-kēḻvara-ku n. <>அறுபது+. A kind of ragi; கேழ்வரகு வகை. (R.) |
அறுபதாங்கொட்டை | aṟupatāṅ-koṭṭai n. <>id.+. A species of castor plant; பேராமணக்கு. (R.) |
அறுபொழுது | aṟu-poḻutu n. <>ஆறு+. Six divisions of the day, viz., mālai, yāmam, vaikaṟai, viṭiyal, naṇpakal, eṟpāṭu, q. v.; நாட்குரிய மாலை யாமம் வைகறை விடியல் நண்பகல் ஏற்பாடு என்ற அறுவகைக்காலம். (R.) |
அறுமுறி | aṟu-muṟi n. <>அறு.+. Deed of agreement; உடன்படிக்கைப் பத்திரம். (pd. Insc. 940.) |
அறுவகைச்சக்கரவர்த்திகள் | aṟu-vakai-c-cakkaravarttikaḷ n. <>ஆறு+வகை+. The six emperors, viz., Ariccantiraṉ, Naḷaṉ, Mucukuntaṉ, Purūravaṉ, Cakaraṉ, Kārttavīriyaṉ; அரிச்சந்திரன் நளன் முசுகுந்தன் புரூரவன் சகரன் கார்த்தவீரியன் என்ற சக்கரவர்த்திகள் அறுவர். (திவா.) |
அறுவகையரிசி | aṟu-vakai-y-arici n. <>id.+id.+. Six kinds of husked grain, viz., aruṉā-v-arici, ulūvā-v-arici, ēka-v-arici, kārpōkarici, vila-v-arici, veṭpālai-y-arici, q. v.; அருனாவரிசி உலூவாவரிசி ஏலவரிசி கார்போகரிசி விளவரிசி வெட்பாலையரிசி என்ற ஆறுவகையான அரிசி. (சங். அக.) |
அறுவகையுயிர் | aṟu-vakai-y-uyir n. <>id.+id.+. (Buddh.) The six kinds of living beings, viz., makkaḷ, tēvar, piramar, narakar, vilaṅku, pēy, q. v.; மக்கள் தேவர் பிரமர் நரகர் விலங்கு பேய் என்னும் அறுவகை உயிர்கள். (மணி. 30, 56-58.) |
அறுவா - தல் | aṟu-v-ā- v. intr. <>அறு-+. 1.To be spent; செலவழிந்துப்போதல். Loc. 2. To be finished, completed; 3. To be gathered, collected; |
அறுவாக்கு - தல் | aṟu-v-ākku- v. tr. <>id.+. (R.) 1. To conclude, complete; முடித்தல். 2. To gather, collect; |
அறுவு | aṟuvu n. <>id. End of an object; final part of an affair; கடைசிப் பகுதி. (R.) |
அறை | aṟai part. A particle of comparison; ஓர் உவமவுருபு. சுரும்பறை மணித்தோ டுணிய வீசி (மணி. 20, 107, உரை). |
அறைக்கட்டளை | aṟai-k-kaṭṭaḷai n.<>அறை+. 1. Temple stores; கோயிலில் நித்தியப்படித்தரப் பண்டங்கள் வைக்கும் இடம். (R. T.) செய்யு மறைக்கட்டளையார் வந்தால் (விறலி விடு. 281). 2. Lands granted rent-free to individuals in order that they might transfer them to the temples as an act of religous merit; |