Word |
English & Tamil Meaning |
---|---|
ஆச்சிரவம் | ācciravam n. <>āšrava. 1. Vow சபதம். (நாநார்த்த.) 2. Obeying; 3. Distress; 4. (Jaina.) Inflow of karma; 5. (Jaina.) The action of the senses which impels the soul towards external objects; |
ஆச்சுக்காசி | āccukkāci n. Common caung; மஞ்சட்கோங்கு. (சித். அக.) |
ஆச்சுரிதகம் | āccuritakam n. <>ācchuritaka. (நாநார்த்த.) 1. Laughter; சிரிப்பு. 2. (Erot.) A mark of finger-nail; |
ஆச்சுவாசம் | āccuvācam n. <>āšvāsa. (நாநார்த்த.) 1. Death; சாக்காடு. 2. Chapter, section; |
ஆச்பால் | ācpāl n. <>E. Asphalt; கரிச்சிலா சத்து. (கட்டட. சா.) |
ஆசந்தி | ācanti n. <>āsandī. (நாநார்த்த.) 1. Small cot; சிறுகாட்டில். 2. Seat made of rattan; |
ஆசயம் | ācayam n. <>ā-šaya. Jack tree; பலா. (நாநார்த்த.) |
ஆசரணை | ācaraṇai n. <>ā-caraṇa. Ceremonial purity; தூய்மை. Colloq. |
ஆசல் | ācal n. Value; மதிப்பு. Loc. |
ஆசனி | ācaṉi n. cf. ஆசினி. (சங். அக.) 1. A kind of jack tree; பலாவகை. 2. Asafoetida; |
ஆசாசி 1 - த்தல் | ācāci- 11 v. tr. <>ā-šās. To bless; to invoke benediction upon; வாழ்த்துதல். ஆழ்வாரையும் அவர்-திருக்கையில் வேலையும் ஒருகாலே ஆசாசித்தபடி (பெரியதிருமொழித்தனியன், வ்யா. பக். 3). |
ஆசாசி 2 | ācāci n. cf. ஆகாசி. Gulancha; சீந்தில். (வை. மூ.) |
ஆசாடம் | ācāṭam n. <>āṣādha. 1. Palas tree; முருக்கு. (R.) 2. The lunar month āṣādha; 3. Branch of a tree; 4. Staff of an ascetic; |
ஆசாடி | ācāṭi n. perh. āṣādhī. A spiritual world, one of kuyyāṭṭakapuvaṉam, q.v.; குய்யாட்டகபுவனத்து ளொன்று. (சி. போ. பா. 2, 3, பக். 213). |
ஆசாபந்தம் | ācāpantam n. <>āšā-bandha. (நாநார்த்த.) 1. Confidence; நம்பிக்கை. 2. Cobweb; |
ஆசாபைசாசம் | ācāpaicācam n. <>āšā+. Devilish desire; ஆசையாகிய பேய். உம்மை ஆசா பைசாசங் குமைக்குங்கிடீர் (பாடுது. 33, 7). |
ஆசாமிவாரிஇசாப் | ācāmivāri-icāp n. <>U. āsāmivār+U. hīsāb. Revenue account showing the name, etc., of individual taxpayer; அடங்கற்கணக்கு. (P. T. L.) |
ஆசாரக்கணக்கு | ācāra-k-kaṇakku n. <>ஆசாரம்+. Record of temple rites and ceremonies; கோவிலில் ஆசாரங்களைக் குறித்துவைக்கும் புத்தகம். Nā. |
ஆசாரங்கூட்டு - தல் | ācāraṅ-kūṭṭu- v. tr. <>id.+. To purify ceremonially; சுத்தமாகச் செய்தல். பூசைக்குள்ள உபகரணங்களெல்லாம் ஆசாரங்கூட்டி (தஞ். சரசு. ii, 88). |
ஆசாரச்சாவடி | ācāra-c-cāvaṭi n. <>ஆசாரம்+. Durbar hall; கொலுமண்டபம். (W.) |
ஆசாரம் 1 | ācāram n. <>ācāra. Sight; காட்சி. (அக. நி.) |
ஆசாரம் 2 | ācāram n. <>āsāra. (நாநார்த்த.) 1. Pervasion; வியாபகம். 2. Army; |
ஆசாரம்பண்ணு - தல் | ācāram-paṇṇu- v. intr. <>ஆசாரம்+. To treat courteously; உபசாரஞ்செய்தல். நீங்கள் அவனைக்கண்டு ஆசாரம் பண்ணுதல் செய்வீராகில் (பாரதவெண். 159, உரை). |
ஆசாரலிங்கம் | ācāra-liṅkam n. <>ācāra+. One of Civa-liṅkam; சிவலிங்கபேதங்களுளொன்று. (சித். சிகா. 201.) |
ஆசாரியப்பட்டம் | ācāriya-p-paṭṭam n. <>ācārya+. The title assumed by a priest on his ordination; குருவாக அபிஷேகமாகும் பொழுது வகிக்கும் பட்டம். (R.) |
ஆசாரியபூசனை | ācāriya-pūcaṉai n. <>id.+. Honorarium to priests; குருக்களுக்குரிய சம்பாவனை. சங்கராந்தி ஒன்றினுக்கு ஆசாரியபூசனை உட்பட பொன் கழஞ்சேகால் (S. I. I. ii, 270). |
ஆசாரியாபிஷேகம் | ācāriyāpiṣēkam n. <>id.+. Ordination; குருவாக நியமிக்குஞ் சடங்கு. |
ஆசாலுகம் | ācālukam n. perh. ā-jānuka. (Yōga.) A yōgic posture; யோகாசனவகை. (தத்துவப். 109, உரை.) |
ஆசான் | ācāṉ n. (Mus.) The four kinds of paṇṇiyal, viz., kāntāram, cikaṇṭi, tacākkari, cutta-kāntāram; காந்தாரம் சிகண்டி தசாக்கரி சுத்த காந்தாரம் என்னும் நால்வகைப் பண்ணியல். (சிலப் 13, 112, உரை.) |