Word |
English & Tamil Meaning |
---|---|
ஆத்மபந்து | ātma-pantu n. <>id.+. (Legal.) One's own bandhus, such as father's sister's son, mother's sister's son, etc.; அத்தை மகன் அம்மான் மகன் முதலிய பந்துக்கள். |
ஆத்மவதம் | ātma-vatam n. <>ātma-vadha. Suicide; ஆத்மஹத்தி. ஆத்மவதம் கொலையன்றெனில் (நீலகேசி, 1, உரை). |
ஆத்மவதிகாசனம் | ātma-v-atikācaṉam n. <>ātman+adhika+. (Yōga.) A yōgic posture; நல்லாசனம் என்னும் யோகாசனம். |
ஆத்மார்த்தம் | ātmārttam n. <>ātmārtha. Close intimacy, as between friends; மிக்க நட்பு. ஆத்மார்த்த சினேகிதன். Colloq. |
ஆத்மிகம் | ātmikam n. <>ātmikam. See ஆத்தியாத்துமிகம். மீனரவ மாதியினாங் கட்டமுமிங் காத்மிகமே காண் (சிவதரு. கோபுர. 62, உரை). . |
ஆதங்கம் | ātaṅkam n. <>ātaṅka. (நாநார்த்த.) 1. Grief; துன்பம். 2. Sound of drum; |
ஆதண்டை | ātaṇṭai n. Thorny caper; ஆதொண்டை. (நாமதீப.) |
ஆதபம் | ātapam n. <>ātapa. (Jaina.) A pirakiruti; பிரகிருதிகளுள் ஒன்று. (மேருமந். 165.) |
ஆதபயோகம் | ātapa-yōkam n. <>id.+. A yōgic condition in which the yōgi is able to withstand the burning heat of the sun; வெயிற் கடுமை தாங்கும் யோகநிலை. (மேருமந் 619, உரை.) |
ஆதமர்ணிகப்பொருள் | ātamarṇika-p-poruḷ n. <>ādhamarṇika+. Money that is lent; கடனாகக் கொடுக்கப்படும் பொருள். (சுக்கிரநீதி, 97.) |
ஆதரணை | ātaraṇai n. <>ādaraṇā. Shelter, support, help; ஆதரவு. கைதூக்கி ஆதரணை செய்யும் (கந்தபு. கீர். 31, 18). |
ஆதரம் | ātaram n. Ferry charge; ஓடக்கூலி. (நாநார்த்த.) |
ஆதரி - த்தல் | ātari- 11 v. tr. <>ā-dara. 1. To help; உதவுதல். Tinn. 2. To support by speech; |
ஆதரிசம் | ātaricam n. <>ādarša. (நாநார்த்த.) 1. Commentary; உரை. 2. Original manuscript; |
ஆதல் | ātal n. 1. Treatise; நூல். (அக. நி.) 2. cf. ஆடல். Dance; 3. Vision; 4. Minuteness; 5. cf. ஆவல். Desire; |
ஆதவன் | ātavaṉ n. <>ātapa. 1. Brahmin versed in the Vēdas; வேதியன். (அக. நி.) 2. Sunflower; |
ஆதளை | ātaḷai n. 1. Pomegranate; மாதுளை. (மஞ்சிக. நி.) 2. Agony; |
ஆதளைமாதளை | ātaḷai-mātaḷai n. Redupl. of ஆதளை. Bewilderment; மயக்கம். (W.) |
ஆதளையாடு - தல் | ātaḷai-y-āṭu- v. intr. <>ஆதளை+. To be in death-throes; மரணத்துன்ப மடைதல். Loc. |
ஆதன் 1 | ātaṉ n. perh. āpta. Noble person; ஆரியன். (அக. நி.) |
ஆதன் 2 | ātaṉ n. perh. adhi. Agony; வாதனை. (அக. நி.) |
ஆதன்மை | ātaṉmai n. <>ஆதன். Folly; பேதைமை. ஈவதஃ தாதன்மை (நீலகேசி, 214). |
ஆதனம் | ātaṉam n. <>āsana. 1. Nape of the elephant; யானைக்கழுத்து. (நாநார்த்த.) 2. Seat; 3. Yōgic posture; 4. Cloth; 5. Ground; 6. Buttocks; |
ஆதனமூர்த்தி | ātaṉa-mūrtti n. <>āsanamūrti. (W.) 1. Image; படிமம். 2. Liṅga or emblem of šiva; |
ஆதஸிபீஜம் | ātasi-pījam n. Linseed; ஆளிவிரை. (இங். வை. 52.) |
ஆதாயப்பங்கு | ātāya-p-paṅku n. <>ஆதாயம்+. Dividend; இலாபப்பங்கு. Pond. |
ஆதாரக்கம்பி | ātāra-k-kampi n. <>ஆதாரம்+. Wall plate; சுவர்மேற் போடும் சரப்பலகை. Madr. |
ஆதாரசத்தி | ātāra-catti n. <>ādhāra+šakti. šiva-šakti; சிவசக்தி. (சதாசிவ. 31.) |
ஆதாரணை | ātāraṇai n. <>ஆராதனை. Possession by a deity, during worship; ஆராதனை செய்யும்போது உண்டாகும் தெய்வ ஆவேசம். Tinn. |
ஆதாரதண்டம் | ātāra-taṇṭam n. <>ஆதாரம்+. Backbone; முதுகெலும்பு. (சங். அக.) |
ஆதாரபீடம் | ātāra-pīṭam n. <>id. Pedestal of stone; ஆதாரசிலை. (Insc.) |
ஆதாரம் | ātāram n. <>ādhāra. 1. Plexuses in the body, of which there are six; ஆறாதாரம். ஆதாரத்தாலே நிராதாரத்தே சென்று (திருவுந். 8). 2. Source; 3. Pledge; 4. Tank; 5. Pan; 6. Section, chapter; |