Word |
English & Tamil Meaning |
---|---|
ஆலைமாலை | ālai-mālai n. Redupl. of மாலை. Bewilderment; மயக்கம். (W.) |
ஆலோசகபித்தம் | ālōcaka-pittam n. prob. ālōcana+. A nerve of the eye which makes the sight powerful; பார்வையைப் பெருகச்செய்யும் நரம்பு. (சீவரட்.) |
ஆலோசனை | ālōcaṉai n. <>ālōcana. Seeing, sight; பார்வை. (நாநார்த்த.) |
ஆலோடி | ālōṭi n. prob. ஆளோடி. Raised platform in the front of a house; வீட்டு முன்புறத்திற் கட்டப்பட்ட தளவரிசையிட்ட தரை. Tj. |
ஆலோபம் | ālōpam n. prob. ālōla. Distress; வருத்தம். களிறோலமென்ற வாலோபந்தீர்த்த (குலோத். கோ. 493). |
ஆலோலம் | ālōlam n. <>ālōla. Commotion; சஞ்சலம். (நாநார்த்த.) |
ஆவகம் | āvakam n. <>āvaka. A wind, one of capta-maruttu, q.v.; சப்தமருந்துக்களுள் ஒன்று. |
ஆவசியம் | āvaciyam n. <>āvašyaka. Necessity; இன்றியமையாதது. ஆவசிய மென்ப தறியாயோ (அழகியநம்பியுலா, 125). |
ஆவடதர் | āvaṭatar n. A class of divine beings; தேவசாதியார்வகை. (தக்கயாகப். 463, உரை.) |
ஆவணம் | āvaṇam n. Flower-tray; பூந்தட்டு. (அக. நி.) |
ஆவதை | āvatai n. perh. āvarta. Repetition; திரும்பக்கூறுகை. (மேருமந். 1238.) |
ஆவம் | āvam n. Saffron; குங்குமம். (சங். அக.) |
ஆவர்த்தம் | āvarttam n. <>āvarta. (நாநார்த்த.) 1. Whirlpool; நீர்ச்சுழி. 2. Whirl; 3. Cogitation; |
ஆவர்த்தி - த்தல் | āvartti- 11 v. intr. <>āvṟt. To remarry on the death of the first wife; முதல்மனைவி இறந்தபின் மறுவிவாகஞ் செய்துகொள்ளுதல். கூரத்தாழ்வார், ங்கையார் திருவடிசார்ந்தவாறே, பின்பு ஆவர்த்திப்பதாக அறுதியிட்டு (திவ். பெரியாழ். 1, 8, அவ. பக். 156). |
ஆவரணம் 1 | āvaraṇam n. <>āvaraṇa. Arcade; பிராகாரம். (நாநார்த்த.) |
ஆவரணம் 2 | āvaraṇam n. <>ā-bharaṇa. Ornament; அணி. (நாநார்த்த.) |
ஆவரணமூர்த்தி | āvaraṇa-mūrtti n. <>ஆவரணம்+. Minor idols, around the principal deity in a temple; கோயிலில் மூலஸ்தானத்தைச் சுற்றியிருக்கும் பரிவார தேவதைகள். விநாயககடவுள் முதலிய ஆவரணமூர்த்திகளில் (சி. போ. பா. 8, 1, பக். 357). |
ஆவரணி | āvaraṇi n. <>ஆவரணம். Pārvatī; பார்வதி. (நாமதீப.) |
ஆவல் | āval n. Bend; வளைவு. (அக. நி.) |
ஆவலம் | āvalam n. 1. Noise made with the mouth; வாயினாலிடுஞ் சத்தம். (W.) 2. Garden; 3. Saree; 4. Rod round which yarn is wound; |
ஆவலாதி | āvalāti n. Defamatory statement; slander; அவதூறு. (R.) |
ஆவலாதிக்காரன் | āvalāti-k-kāraṉ n. <>ஆவலாதி+. Rogue, scandalous fellow; போக்கிரி. (R.) |
ஆவளி 1 | āvaḷi n. Perh. a-phala. Doubtfulness, uncertainty; indecisiveness; நிச்சயமின்மை. ஆவளிப்பேச்சு. (R.) |
ஆவளி 2 | āvali n. <>āvali. 1. Marks. as on the body or palm of hand; இரேகை. (நாநார்த்த.) 2. (Jaina.) Vaḷi, a small division of time; |
ஆவளி - த்தல் | āvaḷi- 11 v. tr. <>ā-vali. To order, regulate; ஒழுங்குபடுத்துதல். (R.) |
ஆவளிச்சேவகம் | āvaḷi-c-cēvakam n. <>ஆவளி+. Uncertain service; ஸ்திரமற்ற உத்தியோகம். (R.) |
ஆவற்காலம் | āvaṟkālam n. <>ā-pad+kāla. 1 Time of distress; ஆபத்துண்டாங்காலம். 2. Last days; |
ஆவாகனமுத்திரை | āvākaṉa-muttirai n. <>āvahana+. (šaiva.) A handpose, in worship; முத்திரைவகை. (செந். X, 425.) |
ஆவாபம் | āvāpam n. <>āvāpa. (நாநார்த்த.) 1. Sowing; விதைப்பு. 2. Pan, seed-bed; 3. A drink; 4. Cleansing of a vessel; |
ஆவிகாட்டு - தல் | āvi-kāṭṭu- v. tr. <>ஆவி+. To make offerings of food, as to a deity; நிவேதனஞ்செய்தல். (திவ். பெரியாழ். 3, 3, 8 வ்யா. பக். 580.) |
ஆவிசீவாளம் | āvicīvāḷam n. cf. ஆவச்சீவாளம். One's goods, body and soul; உடல் பொருள் ஆவி, ஆவிசீவாளமெல்லாம் வாங்கிவிடுகிறான். (R.) |