Word |
English & Tamil Meaning |
---|---|
இடைக்கார் | iṭaikkār n. <>இடை+. A kind of paddy; நெல்வகை. (நாநார்த்த.) |
இடைக்குலநாதன் | iṭai-k-kula-nāṭaṉ n. <>இடை + குலம்+. Krṣṇa; கிருஷ்ணன். (R.) |
இடைகழி | iṭaikaḻi n. The Viṣṇu shrine at Tiru-k-kōvalūr; திருக்கோவலூர்த் திருமால் கோயில். நீயுந் திருமகளு நின்றாயால் . . . கோவலிடைகழியே பற்றி யினி (திவ். இயற். முதல்திருவந். 86). |
இடைச்சம்பவம் | iṭai-c-campavam n. <>இடை+. Chance, accident; தற்செயல். Pond. |
இடைச்சீலை | iṭai-c-cīlai n. <>id.+. Curtain; திரை. (R.) |
இடைத்தீன் | iṭai-t-tīṉ n. <>id.+. Lunch, light refreshments; சிற்றுண்டி. Pond. |
இடைதல் | iṭai-tal n. <>id.+ prob. தலம். Earth; பூமி. (அக. நி.) |
இடைநிலை | iṭai-nilai n. <>id.+. (Gram.) Occurrence of word or words as complementary to the subject or predicate in a sentence; எச்சமுதலியன கொண்டு முடியுஞ் சொற்களினிடையில் ஏற்ற பிறசொல் வருகை. எச்சொல் லாயினு மிடை நிலை வரையார் (தொல். சொல். 237). |
இடைப்பூட்டு | iṭai-p-pūṭṭu n. <>id.+. Girdle, belt; அரைக்கச்சு. (W.) |
இடைபாடு | iṭai-pāṭu n. <>id.+. Nā. 1. Business; அலுவல். 2. Business transaction; |
இடைமடு - த்தல் | iṭai-maṭu- v. tr. <>id.+. To interpolate; இடைச்செருகுதல். புன்சொலிற் றந்திடைமடுத்த கந்தி (பரிபா. பாயி.). |
இடைமுள் | iṭai-muḷ n. <>id.+. (W.) 1. Small new eruption about a healing ulcer; புண்ணிலே தோன்றும் மறுமுள். 2. A kind of eruption; |
இடைமேடு | iṭaimēṭu n. <>id.+. Field parts of which are slightly higher in level than the surrounding parts; இடையிடையே சிறிது மேடான பாகமுள்ள வயல். (W.) |
இடையறு - த்தல் | iṭai-y-aṟu- v. tr. <>id.+. To cut through or divide, as an army; படை முதலியவற்றை ஊடறுத்துச் சென்று பிரித்தல். வருபுனற் கற்சிறை கடுப்ப விடையறுத்து (மதுரைக். 725). |
இடையன்கால்வெள்ளி | iṭaiyaṉ-kāl-veḷḷi n. perh. இடையன் + கால்+. The second nakṣatra; பரணி. (W.) |
இடையாந்தரம் | iṭai-y-āntaram n. <>இடை + அந்தரம். Intermediate space or time; இடைப்பட்ட காலம் அல்லது இடம். அந்த வேலை இடையாந்தரத்திலே கெட்டுப்போயிற்று. (W.) |
இடையீடு | iṭai-y-īṭu n. <>இடையிடு-. Land, the ownership of which had been transferred from the state to a person; அரசாங்கவுரிமையாயிருந்து பிறருக்கு மாற்றப்பட்ட நிலம். இக்கச்சம் பிழைப்போர் யில்லங்களுடைய இடையீடு அகநாழியைச் செலவினோடொக்கும் (T. A. S. iii, p. 193). |
இடையெடு - த்தல் | iṭai-y-eṭu- v. tr. <>எடை+. (ஈடு, 10, 2, 5.) 1. To weigh; நிறுத்தல். 2. To determine, settle; |
இடைவட்டை | iṭai-vaṭṭai n. <>இடை+. That which is in the middle; நடுவிலுள்ளது. (S. I.I. viii, 232.) |
இடைவாய் | iṭaivāy n. <>எடை+. Degrees or marks upon a steelyard; கழுத்துக்கோலின் அளவுக்குறியிடம். (R.) |
இடைவு | iṭaivu n. <>இடை-. (யாழ். அக.) 1. Defeat; தோல்வி. 2. Interspace; gap; 3. Open space; |
இடைவெட்டுப்பேச்சு | iṭai-veṭṭu-p-pēccu n. <>இடை + வெட்டு + Derision, ridicule; பரிகாசவார்த்தை. (W.) |
இடோல் | iṭōl n. <>Hindi. dhōl. A kind of drum; பறைவகை. (W.) |
இடோலி | iṭoli n. <>Hindi. dōlī. Litter; ஒருவகைச் சிவிகை. (W.) |
இண்டனம் | iṇṭanam n. <>hiṇdana. (நாநார்த்த.) 1. Play; sport; கிரீடை. 2. Sexual intercourse; 3. Vehicle; |
இண்டிறுக்கெனல் | iṇṭiṟukkeṉal n. Onom. expr. of snoring; குறட்டைவிடுங் குறிப்பு. இண்டிறுக்கென்னும் அனுகரணத்தாற் கொரக்கை விடுதலால் (நீலகேசி, 375, உரை). |
இண்டைச்சுருக்கு | iṇṭai-curukku n. <>இண்டை+. Chaplet of flowers; மாலைவகை. (பெரியபு. முருக. 9.) |
இணக்குப்பார்வை | iṇakku-p-pārvai n. <>இணக்கு+. Decoy; பார்வைமிருகம். இணக்குப் பார்வையிட்டு மிருகம் பிடிப்பாரைப்போலே ஸஜாதீயரைக்கொண்டே காரியங்கொள்வோ மென்று (ஆசார்ய. அவ. பக். 2). |
இணகு | iṇaku n. <>இணங்கு-. Simile; உவமை. இணகிறந் தகன்றபாசம் (ஞானா. 45). |