Word |
English & Tamil Meaning |
---|---|
இமிழ் - த்தல் | imiḻ- 11 V. tr. cf. இமை-. To wink; சிமிட்டுதல். (நாநார்த்த.) |
இமிழ் - தல் | imiḻ- 4 v. intr. To abound; மிகுதல். உண்மகி ழுவகை யூக்க மிமிழ (பெருங். நரவாண. 7, 3). |
இமிழி | imiḻi n. <>இமிழ்-. Melody; இசை. (அக. நி.) |
இமை - த்தல் | imai- 11 v. intr. To sleep; தூங்குதல். பூணாகநோக்கி யிமையான் (கலித். 60). |
இயக்கசத்துவம் | iyakka-cattuvam n. <>இயக்கர்+. (Erot.) The natural disposition of a woman classed under the yakṣa type, one of pattu-cattuvam, q.v.; பத்துச்சத்துவங்களுள் இயக்கசாதிப் பெண்ணின் சத்துவம். (கொக்கோ. 4.) |
இயக்கம் | iyakkam n. <>இயங்கு-. Mod. 1. Propaganda; கிளர்ச்சி. 2. Movement; |
இயக்கன் | iyakkaṉ n. <>இயங்கு-. Leader; தலைமையாக நின்று நடத்துபவன். (கலித். 95, உரை.) |
இயக்கு - தல் | iyakku- 5 v. tr. Caus. of இயங்கு-. To conduct; நடத்திவருதல். இயக்கக் கடவனாகவும் (S. I. I. i, 79). |
இயங்குரோதம் | iyakkurōtam n. <>nyagrōdha. Banyan tree; ஆல். (வை. மூ.) |
இயங்கு - தல் | iyaṅku- 5 v. intr. <>இலங்கு-. To shine; ஒளிசெய்தல். (நாநார்த்த.) |
இயங்குபடையரவம் | iyaṅku-paṭai-y-aravam n. <>இயங்கு-+. (Puṟap.) Theme describing the uproar caused by the march of a besieging army; பகையரணை முற்றுதற்கெழுந்த படையின் செலவால் உண்டாம் ஆரவாரத்தைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 63.) |
இயந்தா | iyantā n. <>yantā nom. sing. or yantr. (நாநார்த்த.) 1. Mahout; யானைப்பாகன். 2. Driver of chariots, etc.; |
இயந்திரம் | iyantiram n. <>yantra. (நாநார்த்த.) 1. A kind of vessel or receptacle; பாண்டவகை. 2. Net; |
இயம் | iyam n. Fly; ஈ. (அக. நி.) |
இயம்பல் | iyampal n. <>இயம்பு-. (அக. நி.) 1. Word; சொல். 2. cf. அம்கல். Reproach; |
இயம்பு - தல் | iyampu- 5 v. intr. To call, as for help; கூப்பிடுதல். மடப்பிடி ... நெடுவரை யியம்பும் (மலைபடு. 309, உரை). |
இயமகாமாலை | iyama-kāmālai n. prob. இயமம்+. A kind of jaundice; காமாலைவகை. (தஞ். சரசு. iii, 122.) |
இயமம் | iyamam n. <>yama. Restraint; தடை. (நாநார்த்த.) |
இயல் | iyal n. <>இயல்-. 1. Resemblance; சாயல் (நாநார்த்த.) 2. Greatness; |
இயல்(லு) - தல் | iyal- 3 v. tr. To paint, draw; சித்திர முதலியன எழுதுதல். புதுவதியன்ற மெழுகுசெய் படமிசை (நெடுநல். 159). |
இயல்பு | iyalpu n. <>இயல்-. (Log.) One of ten methods of acquiring true knowledge; பிரமாணம் பத்தனுள் ஒன்று. (மணி. 27, 10.) |
இயல்புகணம் | iyalpu-kaṇam n. <>இயல்பு+.(Gram.) Vowels, nasals and semi-vowels; உயிர்க்கணம் மென்கணம் இடைக்கணங்கள். (தக்க யாகப். 602.) |
இயல்புவிளி | iyalpu-viḷi n. <>id.+. (Gram.) Vocative case in which the noun is uninflected; ஈறுதிரியாது நிற்கும் விளிவேற்று மை. (கலித். 80, உரை.) |
இயல்வாகை | iyalvākai n. A species of unarmed brasiletto; பெருங்கொன்றை. (L.) |
இயல்வாணர் | iyal-vāṇar n. <>இயல்+. Poets; புலவர். இயல்வாணருக் களித்தான் (பெருந் தொ. 1348). |
இயலசை | iyal-acai n. <>id.+. (Pros.) A class of metrical syllables; நேரசை நிரையசைகள். இயலசை முதலிரண்டு (தொல். பொ. 318). |
இயலொழுக்கம் | iyal-oḻūkkam n. <>id.+. (Jaina.) Right conduct; நல்லொழுக்கம். இணையில்லா வியலொழுக்க மிசைத்ததுநின் னிறைமையோ (பெருந்தொ. 167). |
இயவம் | iyavam n. <>yava. (நிகண்டு.) 1. A kind of grain; தானியவகை. 2. Paddy; |
இயவு | iyavu n. (அக. நி.) cf. இயவை. 1. Forest, jungle; காடு. 2. Village; |
இயவுள் | iyavuḷ n. Child; பிள்ளை. (அக. நி.) |
இயவை | iyavai n. <>yava. Dholl; துவரை. (பச். மூ.) |
இயற்காட்சி | iyaṟ-kāṭci n. <>இயல்+. (Jaina.) Right faith; நற்காட்சி. பேதில்லா வியற்காட்சி யருளியது நின்பெருமையோ (பெருந்தொ. 167). |