Word |
English & Tamil Meaning |
---|---|
இயற்குணப்பெயர் | iyaṟ-kuṇa-p-peyar n. <>id.+. (Gram.) Noun denoting quality; தொழிலையன்றிப் பண்பேகுறிக்கும் பெயர். (நன். 269, மயிலை.) |
இயற்பெயர் | iyaṟ-peyar n. <>id.+. (Gram.) Noun common to both uyartiṇai and akṟiṇai; விரவுப்பெயர். (தொல். சொல். 174, சேனா.) |
இயற்றண்டம் | iyaṟṟaṇṭam n. <>id.+. Ordinary fine; சாதாரண அபராதம். நாலேகால் காணம் இயற்றண்ட மிடப்பெறுவதாகவும் (S. I. I. iv, 295). |
இயற்றி | iyaṟṟi n. <>இயற்று-. 1. Support; உதவி. கைநிற்கும் பரிகர முண்டாயிருக்க இயற்றியில்லாதாரைப் போலோ (திவ். பெரியாழ். 5,3,6, வ்யா. பக். 574). 2. Skill; 3. Qualification; 4. High position; |
இயறல் | iyaṟal n. <>இயல்-. Final bliss; முத்தி. (அக. நி.) |
இயன்ஞானம் | iyaṉ-āṉam n. <>இயல்+. (Jaina.) Right knowledge; நன்ஞானம். இருளில்லா வியன்ஞான மியம்புவதுன் னியல்பாமோ (பெருந்தொ. 167). |
இயாகதம் | iyākatam n. Common sesban; சிற்றகத்தி. (பச். மூ.) |
இயை | iyai n. cf. இயைமே. Plantain; வாழை. (அக. நி.) |
இயைந்துரை | iyainturai n. <>இயை-+. (Budh.) Collection of several distinct objects; பலபொருள்களின் வரையறைப்பட்ட தொகுதி. (மணி. 30, 193.) |
இயைபிலிசைக்குறி | iyaipil-icai-k-kuṟi n. <>இயைபு+இல்+. Bracket; இடைப்பிறவரலாக வருஞ்சொற்களை யடைக்குங் குறிகள். (பாலபாடம்.) |
இர் | ir part. 1. (Gram.) Suffix denoting second person plural; முன்னிலைப்பன்மை விகுதி. வந்தனிர். 2. (Gram.) Suffix denoting third person plural; |
இரக்கம் | irakkam n. <>இரங்கு-. Absorption; state of being engrossed; ஈடுபாடு. (திவ். பெரியாழ். 3, 6, 10, வ்யா. பக். 696.) |
இரங்கற்பா | iraṅkaṟpā n. <>இரங்கல்+. Elegy; சரமகவி. Mod. |
இரங்கு - தல் | iraṅku- 5 v. intr. 1. To speak; கூறுதல். புலம்பெலரந் தீர்க்குவேமன் னென்றிரங்குபு (கலித். 83). 2. To be absorbed, engrossed; |
இரசக்கட்டி | iraca-k-kaṭṭi n. <>இரசம்+. Cinnabar; பவளமனோசிலை. Pond. |
இரசசுத்தி | iraca-cutti n. <>id.+. Lead; ஈயம். (வை. மூ.) |
இரசத நிமிளை | iracata-nimiḷai n. <>rajata+. Bismuth of a white colour; வெள்ளிநிமிளை. (R.) |
இரசதம் | iracatam n. <>rajata. (நாநார்த்த.) 1. Nakṣatra; நட்சத்திரம். 2. Tusk of an elephant; 3. Whiteness; white colour; 4. Garland of pearls; 5. White mountain, silver mountain; 6. Gold; 7. Blood; |
இரசதமணல் | iracata-maṇal n. <>id.+. Sand containing silver; வெள்ளிகலந்த மணல். (W.) |
இரசபாஷாணம் | iraca-pāṣāṇam n. <>இரசம்+. A prepared arsenic; வைப்புப் பாஷாணவகை. (வை. மூ.) |
இரசமுறி - த்தல் | iraca-muṟi- v. intr. <>id.+. 1. To prepare mercury; பாதரசஞ் செய்தல். 2. To counteract mercurial poison in the body; |
இரசல் | iracal n. perh. இளை-. Weakness, leanness; emaciated condition; இளைத்த தன்மை. Loc. |
இரசவாதசாலை | iracavāta-cālai n. <>rasa+vāda+. Laboratory; இரசாயனசாஸ்திர பரிசோதனை செய்யும் இடம். Pond. |
இரசவைப்பு | iraca-vaippu n. <>id.+. Any preparation of mercuy, amalgam; இரசத்தாலாகிய மருந்து முதலியன. (W.) |
இரசனம் 1 | iracaṉam n. <>rasana. (நாநார்த்த.) 1. Gold; பொன். 2. Silver; 3. Poison; 4. Gum, paste; 5. Fruit; 6. Decoction; 7. Extract of leaves; 8. Sounding; 9. Food; 10. Friendship; |
இரசனம் 2 | iracaṉam n. <>radana. Tooth; பல் (நாநார்த்த.) |
இரசனி | iracaṉi n. <>rajanī. Red cotton; செம்பஞ்சு. (நாநார்த்த.) |
இரசனிமுகம் | iracaṉi-mukam n. <>rajanī-mukha. The period of 1 1/2 hours before and after sunset; பிரதோஷகாலம். (வேதாரணியபு. பிரதக்.95, கீழ்க்குறிப்பு.) |