Word |
English & Tamil Meaning |
---|---|
இருக்குக்குறள் | irukku-k-kuṟaḷ, n. prob. rk+. A kind of short verse; சிறிய பாவகை. ஏகபாதந் தமிழிருக்குக்குறள் சாத்தி (பெரியபு. திருஞான. 276). |
இருசாதி | iru-cāti, n. <>இரண்டு+. Hybrid; mixed caste; கலப்புச்சாதி. இருசாதிமாடு. |
இருசீர்ப்பாணி | iru-cīr-p-pāṇi, n. <>id.+சீர்+. (Mus.) A kind of tāḷam; இரட்டைத் தாளம். (பொருந. 71.) |
இருசுகந்தப்பூண்டு | iru-cukanta-p-pūṇṭu, n. prob. இரு-மை+சுகந்தம்+. Southern-wood; மருக்கொழுந்து. Pond. |
இருட்கண்டம் | iruṭ-kaṇṭam, n. <>இருள்+. A necklace; கழுத்தணிவகை. பிறங்கிருட்கண்டமும் (S. I. I. viii, 39). |
இருட்கண்டர் | iruṭ-kaṇṭar, n. <>id.+. šiva, as having a blue throat; சிவபெருமான். கூர்ந்த விருட்கண்டர் (பெரியபு. திருமுறை. 12). |
இருடி | iruṭi, n. <>rṣi. The vēda; வேதம். (நாநார்த்த.) |
இருடிகம் | iruṭikam, n. See இருடீகம். பதினொ ரிருடிகமுமடைய முடியுமடி யிருடியார் (தேசிகப். 6, 19). . |
இருடீகம் | iruṭīkam, n. <>hrṣīka. Sensory organ; இந்திரியம். இருடீகங்க ளீரைந்துஞ் சரங்களாக (தேசிகப். 2, 41). |
இருண்டசெவலை | iruṇṭa-cevalai, n. <>இருள்-+. Dark brown colour of cattle; கருமை கலந்த மங்கல்நிறமான மாட்டுநிறவகை. (பெரியமாட். 13.) |
இருண்மயபூமி | iruṇ-maya-pūmi, n. <>இருள்+மயம்+. The dark region round the cakravāṭa-kiri, where the ghosts of suicides are made to suffer; சக்கரவாளகிரியைச் சூழ்ந்து இருண்டுகிடப்பதும் தற்கொலைபுரிந்தோர் பேய்வடிவுடன் துன்புறுவதுமான பூமி. (சி. போ. பா. 2, 3.) |
இருணி | iruṇi, n. of. இருளி. Hog; பன்றி. இருணியா யெழுந்த சோதி யிரணியாக் கனைத்தான் கொல்ல (வரத. பாகவத. நாரசிங்க. 5). |
இருத்தி | irutti, n. <>rddhi. Interest; வட்டி. (T. A. S. viii, 15.) |
இருத்து | iruttu, n. <>இருத்து-. 1. That which is firm, permanent; நிலையானபொருள். என்னெஞ்சத்து இருத்தாக விருத்தினேன் (திவ். திருவாய். 9, 4, 6). 2. Pressure; |
இருதலைஞாங்கர் | iru-talai-āṅkar, n. <>இரண்டு+தலை+. Double-headed lance; இருதலையுங் கூருள்ள குமரன்வேல். (யாழ். அக.) |
இருதலைப்பகரங்கள் | iru-talai-p-pakaraṅ-kaḷ, n. <>id.+id.+. Square brackets; எழுத்துக்களை உள்ளடக்கி நிற்கும் [ ] என்ற குறியீடுகள். Mod. |
இருதலைப்பாம்பு | iru-talai-p-pāmpu, n. <>id.+id.+. 1. Semi-nocturnal sand-snake; இருதலைமணியன். Pond. 2. Blind snake with very short head and tail; 3. Earth-worm; |
இருதலைமூரி | iru-talai-mūri, n. <>id.+id.+. See இருதலைப்பாம்பு, 3. Loc. . |
இருதாரைக்கத்தி | iru-tārai-k-katti, n. <>id.+தாரை+. Double-edged sword or knife; இருபக்கமுங் கூர்மையுள்ள கத்தி. (W.) |
இருந்துபோ - தல் | iruntu-pō-, v. tr. <>இரு-+போ. 1. To be stupefied; to be paralysed; செயலறுதல். அந்தத் துக்கத்தைக் கேட்டதும் அவன் இருந்துபோனான். 2. To sink; 3. To remain unsold, as goods: |
இருநிறமணிக்கல் | iru-niṟa-maṇi-k-kal, n. <>இரண்டு+நிறம்+மணி+. A kind of precious stone; இரத்தினவகை. Pond. |
இருப்புக்கட்டி | iruppukkaṭṭi, n. A tax; வரிவகை. (S. I. I. iv, 79.) |
இருப்புக்கட்டை | iruppu-k-kaṭṭai, n. <>இரும்பு+. Hammer; சுத்தியல். Pond. |
இருப்புக்கம்பை | iruppu-k-kampai, n. <>இரு-+. Driver's seat, at the front of the cart; வண்டி ஓட்டுபவனுக்குமுன் வண்டியில் அமைக்கப்பட்ட ஆசனம். Colloq. |
இருப்புக்காய்வேளை | iruppu-k-kāyvēḷai, n. A plant; இரும்புக்காய்வேளை. (W.) |
இருப்புக்குழல் | iruppu-k-kuḻal, n. <>இரும்பு+. A kind of rocket; விருசுவகை. (T. C. M. ii, 2, 593.) |
இருப்புச்சிட்டம் | iruppu-c-ciṭṭam, n. <>id.+. Oxide of iron; இருப்புக்கிட்டம். (W.) |
இருப்புத்தொட்டிப்பாஷாணம் | iruppu-t-toṭṭi-p-pāṣāṇam, n. <>id.+தொட்டி+. A prepared arsenic; வைப்புப்பாஷாணவகை. (சங். அக.) |