Word |
English & Tamil Meaning |
---|---|
இல்லாக்காட்டில் | illā-k-kāṭṭil, adv. <>இல்லா-மை+. If not, otherwise; இல்லாவிட்டால். Pond. |
இல்லாக்குற்றம் | illā-k-kuṟṟam, n. <>id.+. 1. Poverty; தரித்திரம். Loc. 2. Calumny; |
இல்லாங்காட்டி | illāṅ-kāṭṭi, adv. <>id.+. See இல்லாக்காட்டில். Loc. . |
இல்லாவாட்டி | illā-v-āṭṭi, n. <>id.+ஆள்-. Destitute woman; வறியவள். Tinn. |
இல்லுனர் | illuṉar, n. cf. ஒல்லுநர். Friends; நண்பர் (W.) |
இலக்கட்சரம் | ilakkaṭcaram, n. prob. இலக்கு+அட்சரம். Secret code; மறைபொருட்சொல். Pond. |
இலக்கை | ilakkai, n. <>rakṣā. Protection; பாதுகாவல். இலக்கை யற்றதவ் விலங்கைக்கு மிராவணன் றனக்கும் (கம்பரா. கும்பகரு. 339). |
இலகல் | ilakal, n. (அக. நி.) 1. cf. lēkha. Letter, character; எழுத்து. 2. cf. laghu. Eagle-wood; 3. cf. lēša. Lightness; |
இலகு - தல் | ilaku-, 5 v. intr. To increase; மிகுதல். (சங்கற்பநி. சங்கிராந்த. 96.) |
இலகுநட்சத்திரம் | ilaku-naṭcattiram, n. <>laghu+. Small star; நுட்பமான நட்சத்திரம் (W.) |
இலகோட்டா | ilakōṭṭā, n. <>Chi. luh w at. Loquat, m. tr., Eriobotrya japonica; மரவகை (L.) |
இலங்கனம் | ilaṅkaṉam, n. <>laṅghana. Transgression; கடக்கை. (நாநார்த்த.) |
இலங்கிகன் | ilaṅkikaṉ n. <>இலிங்கி. Ascetic; துறவி. (அக. நி.) |
இலங்கு | ilaṅku, n. Tank; குளம். (W.) |
இலங்கோடு | ilaṅkōṭu, n. <>Hind. laṅgōṭa. Strip of cloth fitted to the loins; சல்லடம். மிக்கதா மிலங்கோடு கௌபீனமே (அலங்காரச்சிந்து. 16). |
இலச்சி - த்தல் | ilacci-, 11 v. intr. <>lajjā. To be bashful, coy, shy; நாணுதல். திருவானதேவி இலச்சிப்ப (தக்கயாகப். 34, உரை). |
இலச்சைக்கேடு | ilaccai-k-kēṭu, n. <>இலச்சை+. Shamelessness; வெட்கக்கேடு. (W.) |
இலஞ்சி 1 | ilaci, n. Mango tree; மாமரம். (அக. நி.) |
இலஞ்சி 2 | ilaci n. cf. இலேஞ்சி. A towel; சவுக்கம். Colloq. |
இலஞ்சிலி | ilacili, n. cf. இலாஞ்சி. Cardamom plant; ஏலம். (சித். வை.) |
இலட்சுமிவண்டு | ilaṭcumi-vaṇṭu, n. <>lakṣmī+. Cockroach, as a harbinger of prosperity; கரப்புப்பூச்சி. Colloq. |
இலட்டை | ilaṭṭai, n. prob. laddu. Round cake of rice flour and sugar. அப்பம். (அக. நி.) |
இலடு | ilaṭu, n. Horse; குதிரை. (அக. நி.) |
இலபனம் | ilapaṉam, n. <>lapana. (Anat.) Mouth; வாய் (W.) |
இலம்பம் | ilampam, n. <>lamba. (நாநார்த்த.) 1. Height; உயர்வு. 2. Expanse; width; |
இலம்பாடு | ilampāṭu, n. <>இலம்படு-. Sorrow, grief; துக்கம். (அக. நி.) |
இலம்பிதசாபலம் | ilampita-cāpalam, n. <>lambita+. (Astron.) An equation from the table of the moon's parallax; மந்தசாபலம். (சூடா. உள். 433.) |
இலம்பிதம் | ilampitam, n. <>lambita. (Astron.) Parallax of moon's longitude; மந்தசா. (சூடா. உள். 433.) |
இலயசக்தி | ilaya-cakti, n. <>laya+. (šaiva.) šakti of IIaya-Civaṉ; இலயசிவனின் சக்தி. (சி. சி. 2, 75, மறைஞா.) |
இலயதத்துவம் | ilaya-tattuvam, n. <>id.+. (šaiva.) State of the Supreme Being during the makā-caṅkāram; மகாசங்கார காலத்துத் தன் காரியங்களெல்லா மொடுங்கிக் காரணமாத்திரையாய் நிற்கும் இறைவனிலை. (சி. சி. 6, 6, ஞானப்.) |
இலயமுத்தி | ilaya-mutti, n. <>id.+. Salvation through absorption into Godhead; பரம்பொருளொடு இரண்டறக் கலக்கையாகிய முக்தி (யாழ். அக.) |
இலலிதபஞ்சமி | ilalita-pacami, n. <>lalita+. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. 130.) |
இலவடி - த்தல் | ilavaṭi-, v. intr. To thresh out sheaves of corn; நெற்கதிரடித்தல். Colloq. |
இலவம் 1 | ilavam, n. <>lava. 1. (Jaina.) A measure of time; ஒரு கால அளவு. தோவமிலவமே நாள் (மேருமந். 94). 2. Wool; |