Word |
English & Tamil Meaning |
---|---|
இளப்பம் | iḷappam, n. <>இனை-. Disgrace; அவமானம். அவனுக்கு இது பெரிய இளப்பம். Colloq. |
இளம்பயிர் | iḷam-payir, n. <>இள-மை+. Seedlings that have been recently transplanted; நாறுபிடுங்கி நட்டுச் சிலநாளான பயிர். Loc. |
இளம்பாக்கு | iḷam-pākku, n. <>id.+. A kind of areca nut; பாக்குவகை. (விறலிவிடு.) |
இளம்பாலாசிரியன் | iḷampāl-āciriyaṉ, n. <>id.+bāla+. Teacher of children, dist. fr. pālāciriyaṉ; இளம்பாலர்க்குக் கற்பிக்கும் ஆசிரியன். (அகநா. 102.) |
இளம்பிடி | iḷam-piṭi, n. <>id.+. Beautiful woman; அழகிய பெண். இளம்பிடி யிவளுக்கென்னினைந்திருந்தாய் (திவ். பெரியதி. 2, 7, 2). (அக. நி.) |
இளம்பிராயம் | iḷam-pirāyam, n. <>id.+. Youth; இளவயது. (R.) |
இளமணல் | iḷa-maṇal, n. <>id.+. Quick sand; குருத்துமணல். தேரோ டிளமண லுட்பட லோம்பு (கலித். 98). |
இளமணற்பாய் - தல் | iḷamaṇaṟ-pāy-, v. intr. <>இளமணல்+. To be caught, as the feet in quick-sand; இளமணவிற் காலழுந்துதற்போல அகப்படுதல். திருச்சோலையின் போக்யதையிலே இளமணற் பாய்ந்து கால்வாங்கமாட்டாதே நிற்கும் (திவ். அமலனாதி. 6, வ்யா. பக். 77). |
இளமுறை | iḷa-muṟai, n. <>இள-மை+. Heir; பின் வாரிசு. Loc. |
இளமை | iḷamai, n. Madness; உன்மத்தம். (நாநார்த்த.) |
இளவழிபாடு | iḷa-vaḻipāṭu, n. <>இள-மை+. Child education; சிறுபிள்ளைக் கல்வி. (யாழ். அக.) |
இளவுறை | iḷa-v-uṟai, n. <>id.+. Milk not fully formed into curds; நன்றாகத் தோயாத தயிர். (யாழ். அக.) |
இளிச்சகண்ணி | iḷicca-kaṇṇi n. <>இளைச்சல்+. Woman who habitually leers; காமக்குறிப்போடு பிறரை நோக்குந் தன்மை யுடையவள். இளிச்சகண்ணிக்குப் புளிச்சகண்ணி தேவலை. |
இளை - த்தல் | iḷai-, 11 v. intr. To get slack; நெகிழநிற்றல். தானே யிளைக்கிற் பார்கீழ் மேலாம் (திவ். இயற். பெரியதிருவந். 24). |
இளை 1 | iḷai, n. (அக. நி.) 1. cf. மிளை. Ditch, moat; கிடங்கு. 2. Indian black bear; |
இளை 2 | iḷai, n. <>இளை-மை. Younger brother; தம்பி. இளைபுரிந் தளித்தன்மே லிவர்ந்த காதலன் (கம்பரா. கவந்த. 27). |
இளையநயினார் | iḷaiya-nayiṉār, n. <>id.+. Skanda; முருகக்கடவுள். (M. E. R. 507 of 1929-30.) |
இளையமரக்கால் | iḷaiya-marakkāl, n. <>id.+. A small marakkāl; சிறு மரக்கால். கலத்துவாய் தூணி இளையமரக்காலால் வரிசையிட்ட படி (S. I. I. iv, 30). |
இளையவாசவன் | iḷaiya-vācavaṉ, n. <>id.+. Upēndra; உபேந்திரன். இளையவாசவன் விசும்பினின்றும் விழ (தக்கயாகப். 651). |
இளையார் | iḷaiyār, n. <>id. Husband's younger brothers; கொழுந்தர். Loc. |
இளையோன் | iḷaiyōṉ, n. <>id. Skanda; முருகக்கடவுள். (தக்கயாகப். 5, உரை.) |
இறக்கம் 1 | iṟakkam, n. <>இற-. Death; சாவு. இறக்கமுற்றனென வேக்கமெய்தினான் (கம்பரா. சடாயுகாண். 19). |
இறக்கம் 2 | iṟakkam, n. <>இறங்கு-. Swallowing, as of food; உணவு முதலியன உட்செல்லுகை. சோற்றிறக்கமு மறந்தான் (குருகூர்ப்.). |
இறக்கு - தல் | iṟakku-, 5 v. tr. To compel payment; பணத்தை நீர்ப்பந்தித்து வசூலித்தல். Colloq. |
இறக்கை | iṟakkai, n. <>T. rekka. Wingwall; கண்ணாற்றின் இருபுறங்களிலுமுள்ள துணைச்சுவர். (கட்டட. நாமா.) |
இறகுக்கூடு | iṟaku-k-kūṭu, n. <>இறகு+. Pen rack; பேனா வைக்குங் கூடு. Pond. |
இறங்கல்மீட்டான் | iṟaṅkal-mīṭṭāṉ, n. <>id.+. cf. இறங்கமாட்டான். A kind of paddy; ஒருவகை நெல். போரிறங்கல்மீட்டான் புழுதிபுரட்டி (நெல்லிடுதூது. 189). |
இறங்கு - தல் | iṟaṅku-, 5 v. intr. 1. To leave, abandon; விட்டுநீங்குதல். அருணோக்க மிறங்காத தாமரைக்க ணெம்பெருமான் (கம்பரா. விராதன். 50). 2. To commence, begin to act; |
இறங்குகிணறு | iṟaṅku-kiṇaṟu, n. <>இறங்கு-+. Well with steps leading down to the water; உள்ளிறங்கிச் செல்வதற்குப் படிவரிசையுள்ள கிணறு. Loc. |
இறங்குசட்டம் | iṟaṅku-caṭṭam n. <>id.+. A defect in cattle; மாட்டுக்குற்றவகை. (பெரியமாட். 18.) |
இறங்குசாத்து | iṟaṅku-cāttu, n. <>id.+ A sect of the Cheṭṭi caste; செட்டிகளுள் ஒரு சாரார் (S. I. I. viii, 232.) |