Word |
English & Tamil Meaning |
---|---|
இன்பசாகரமடல் | iṉpa-cākara-maṭal, n. <>இன்பம்+சாகரம்+. A treatise on erotics; ஒரு காமநூல். (தத்துவப். 155, உரை.) |
இன்பி - த்தல் | iṉpi-, 11 v. tr. <>இன்பு. To cause to be happy; இன்ப மூட்டுதல். என்னையுருக்கியின்பித்தவடி (பாடு. திருவருட்.). |
இன்மணியாரம் | iṉ-maṇi-y-āram, n. <>இனி-மை+மணி+. An ancient musical treatise; இறந்துபட்டதோர் இசைநூல். (யாப். வி. 540.) |
இன்றி | iṉṟi, adv. <>இன்-மை. Without; இல்லாமல். தனக்கொரு பயனின்றியிருக்க (கலித். 96, 30, உரை). |
இன்று | iṉṟu, <>id. part. No; இல்லை. --adv. See இன்றி. உப்பின்று புற்கை யுண்கமா கொற்கை யே னே (நன். 172, மயிலை.). |
இன்னா | iṉṉā, int. cf. இந்தா. Here; இதோ. Tinn. |
இன்னாவிசை | iṉṉā-v-icai, n. <>இன்னா+. (Pros.) One of the defects in the composition of verses; செய்யுட்குற்றம் இருபத்தேழுனு ளொன்று. (யாப். வி. 525.) |
இன்னிசைமாலை | iṉṉicai-mālai, n. <>இன்னிசை+. A treatise on akapporuḷ; அகப்பொருள் பற்றிய ஒரு நூல். (கள. கா. 24.) |
இன்னியம் | iṉ-ṉ-iyam, n. <>இனி-மை+. Musical instruments; வாச்சியங்கள். (பெருங். வத்தவ. 2, 30.) |
இன்னியர் | iṉṉiyar, n. <>இன்னியம். Bards, singers; பாணர். (அக. நி.) |
இனம் | iṉam, n. Comparison; உபமானம். இனனுணர் முழுநலம் (திவ். திருவாய். 1, 1, 2). |
இனவரி | iṉa-vari, n. <>இனம்+. An ancient tax in cash; பழைய காசாயவரிவகை. (S. I. I. 1, 89.) |
இனவெழுத்துப்பாட்டு | iṉa-v-eḻuttu-p-pāṭṭu, n. <>id.+. (Pros.) A kind of cittira-kavi; வல்லின முதலிய மூவினங்களுள் ஒரினத்தெழுத்துக்களேவரப் பாடுஞ் சித்திரகவிவகை. (யாப். வி. 503.) |
இனன் | iṉaṉ, n. <>id. 1. Kinsman; உறவினன். இன்னா தினனில் லூர் வாழ்தல் (குறள், 1158). 2. Equal; 3. Teacher; |
இனாம்நாட்கள் | iṉām-nāṭkaḷ, n. <>இனாம்+. Lay days; சரக்கேற்றற்காவது இறக்கற்காவது விடப்படும் நாட்கள். (M. Navi. 122.) |
இனிப்புச்சேவு | iṉippu-c-cēvu, n. <>இனிப்பு+. A kind of confectionery; தித்திப்புச் சேர்ந்த சேவுப்பணியாரம். Tinn. |
இனியபிரிவு | iṉiya-pirivu, n. <>இனி-மை+புரிவு. Concubine's house; வைப்பாட்டி வீடு. சம்பிருதியெல்லா மினியபிரிவுக் களந்த ரென்றும் (சரவபண. பணவிடு. 182). |
இனுக்காவலை | iṉukkā-valai, n. A kind of net, used in fishing at sea; கடலில் வேலிபோற்கட்டி மீன் பிடிக்கவுதவும் வலை. Loc. |
இஜதாசார் | ijatācār, n. <>U. izzat-āsār<>Arab. izzat-āthār. Mark of respect; மரியாதையின் அடையாளம். (P. T. L.) |
இஷ்டப்பிரசாதம் | iṣṭa-p-piracātam, n. <>இஷ்டம்+ (R.) 1. Gift of grace; கைம்மாறு வேண்டாக் கொடை. 2. Grace of God; 3. Boiled rice offered to the idols; 4. Eucharist; |
இஷீகாஸ்திரம் | iṣīkāstiram, n. <>iṣīkāstra. A kind of missile; அஸ்திரவகை. (கம்பரா. நிகும். 132, உரை.) |
இஸ்கார் | iskār, n. Ratlines; கப்பலில் லவுரானுக்குக் குறுக்கே ஏணிப்படிபோல இடப்பட்டிருக்குஞ் சிறு குறுக்குக்கயிறுகள். (M. Navi. 85.) |
இஸ்திபா | istipā, n. <>Arab. istifa. Deed of relinquishment; விடுதலைப்பத்திரம். (R. T.) |
இஸ்தீங்கி | istīṅki, n. Brails; கப்பற்பாயை ஏற்ற இறக்க உதவுங் கயிறுகள். (M. Nave. 86.) |
இஸ்பேட் | ispēt, n.<>E.spade. Spades, in a pack of playing cards; விளையாட்டுச் சீட்டில் ஒரு சாதி. Colloq. |
இஸ்பேட்ராஜா | ispēṭ-rājā, n.<>.<>இஸ்பேட்+. Figure-head; அதிகாரமற்ற தலைவன். Colloq. |
இஸாபா | īsāpā, n. <>Arab. izāfah. Additional charge imposed; அதிகவரி. (R. T.) |
ஈ - தல் | ī-, 4 v. aux. An auxiliary verb; ஒரு துணைவினை. தேறியல்வேண்டும் (கலித். 98, 2). |
ஈகு - தல் | īku-, 5 v. intr. cf. இறுகு-. To solidify; கட்டியாதல். திரட்டுப்பாலும் ஈகினநெய்யும் கட்டித்தயிரும் (திவ். பெரியாழ். 3, 2, 6, வ்யா. பக். 545). |
ஈகை | īkai, n. (அக. நி.) 1. Want; இல்லாமை. 2. Wind; |
ஈங்கு | īṅku, n. Sandalwood; சந்தனம். (சங். அக.) |
ஈச்சை | īccai, n. <>ஈந்து. Date-palm; ஈந்து. Colloq. |