Word |
English & Tamil Meaning |
---|---|
உ | u n. (Astrol.) Letter representing crow, in paca-paṭci; பஞ்சபட்சிகளுள் காகங் குறிக்கும் எழுத்து. (பிங்.) |
உக்கம் 1 | ukkam n. <>ugra. Severity; உக்கிரம். உக்கதவர் தித்ததவர் (மேருமந். 1097). |
உக்கம் 2 | ukkam n. <>ukṣan. (அக. நி.) 1. Cow; பசு. 2. Fowl; |
உக்கரைத்தட்டு | ukkarai-t-taṭṭu n. <>உள்+கரை+. The part just above the middle of the valantarai of a mirutaṅkam; மிருதங்க வலந்தரையின் நடுப்பாகத்துக்கு மேலுள்ள பாகம். (கலைமகள், xii, 400.) |
உக்கா | ukkā n. Toddy; கள். (யாழ். அக.) |
உக்காக்கம் | ukkākkam n. <>உக்கம்+. Waist cord; அரைஞாண். (யாழ். அக.) |
உக்கிட்டு | ukkiṭṭu n. <>உள்+கட்டு. A kind of necklace; உட்கட்டு. Loc. |
உக்கிரகந்தை | ukkirakantai n. <>ugra-gandhā. 1. Sweet flag; வசம்பு. (சித். அக.) 2. Bishop's weed; |
உக்கிரநாள் | ukkira-nāḷ n. <>உக்கிரம்+. The five nakṣatras, paraṇi, makam, pūram, pūrāṭam, pūraṭṭāti; பரணி மகம் பூரம் பூராடம் பூரட்டாதி ஆகிய ஐந்து நட்சத்திரங்கள். (சோதிட. சிந். 36.) |
உக்கிரமம் | ukkiramam n. <>ugra. Blaze, glow; சுவாலை. Pond. |
உக்கிரன் | ukkiraṉ n. <>ugra. A mani-festation of šiva; சிவமூர்த்தங்களுள் ஒன்று. (காஞ்சிப்பு.சிவபுண். 15.) |
உக்கு | ukku n. Clove; இலவங்கம். (சங். அக.) |
உக்கும் | ukkum n. <>U.hukm. Permission, order; உத்தரவு. (P. T. L.) |
உக்கும்நாமா | ukkum-namā n. <>U.hukm-nāmā. Written order; எழுத்து மூலமான உத்தரவு. (P. T. L.) |
உக்குமத்து | ukkumattu n. <>U.hūkamal 1. Influence; செல்வாக்கு. Loc. 2. Arrogance; 3. Complicity; |
உக்குரோட்டு | ukkurōṭṭu n. prob.krōṣṭu. Jackal; நரி. (நாமதீப.) |
உக்குறள் | u-k-kuṟaḷ n. <>உ+. The shortened u; குற்றியலுகரம். உயிர்வரி னுக்குறண்மெய்விட் டோடும் (நன். 164). |
உக்கூம் | ukkūm n. See உக்கும். (P. T. L.) . |
உகந்துடைமை | ukantuṭaimai n. <>உக+உடை-மை. Right of a married woman to a share of her husband's property; கணவனுடைய சொத்தில் மனைவிக்குரிய பாகவுரிமை. Nā. |
உகப்பார்பொன் | ukappār-poṉ n. perh.id.+. A tax; வரிவகை. (S. I. I. iii, 110.) |
உகம் | ukam n. <>yuga. Day; நாள். (அக. நி.) |
உகவை | ukavai n. <>உக-. 1. Favour; அநுகூலம். உள்குவார்கட்குகவைகள் பலவுஞ் செய்து (தேவா. 1146, 5). 2. See உகவைப்பொன். (S. I. I. iii, 38.) |
உகவைப்பொன் | ukavai-p-poṉ n. <>உகவை+. A tax in money; காசாயவகை. (S. I. I. vii, 290.) |
உகளம் | ukaḷam n. <>உகளி-. Delight; இஷ்டம். (அக. நி.) |
உகளி | ukaḷi n. Gum; பிசின். (காமதீப.) |
உகளு - தல் | ukaḷu-. 5 v. intr. To turn upside down; பிறழ்தல். பொருகய லுகளிப் பாய (சீவக. 1854). |
உகிர்ப்புறவன் | ukir-p-puṟavaṉ n. <>உகிர்+புரம். A jewel for nails; நகத்தின்மேல் அணியும் அணிவகை. (S. I. I. ii, 16.) |
உகுனை | ukuṉai n. perhஉகு-+நோய். A disease affecting paddy; நெற்பயிருக்குரிய நோய் வகை. (நீலகேசி, 366, உரை.) |
உச்சட்டம் | uccaṭṭam n. prob. ucca. (W.) 1. Straightness; நேர்மை. 2. Mark, butt; |
உச்சடை | uccaṭai n. <>uccaṭā. (நாநார்த்த.) 1. Foppishness; இடம்பாசாரம். 2. Garlic; 3. A kind of grass; |
உச்சதரு | ucc-taru n. <>ucca+. Cocoanut tree; தென்னை. (பச். மூ.) |
உச்சநிலைநாள் | ucca-nilai-nāḷ n. <>id.+நிலை+. The tree nakṣatras, mirukaciram, cittirai, aviṭṭam; மிருகசிரம் சித்திரை அவிட்டம் என்ற மூன்று நட்சத்திரங்கள். (சோதிட. சிந். 36.) |
உச்சம் | uccam n. <>ucca. 1. One of eight pāṭaṟ-payaṉ, q.v.; எண்வகைப் பாடற்பயன்களுள் ஒன்று. (சிலப். 3, 16, உரை.) 2. (Erot.) A mode of sexual union; |