Word |
English & Tamil Meaning |
---|---|
உண்டைச்சுரை | uṇṭai-c-curai n. <>உண்டை+. A kind of calabash; சுரைவகை. (நாமதீப.) |
உண்டைவில் | uṇṭai-vil n. <>id.+. Bow from which dried balls of clay are shot; காய்ந்த களிமண்ணுருண்டையை வைத்துத் தெறிக்குஞ் சுண்டுவில். கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய். (திவ். திருவாய். 1, 5, 5). |
உண்ணாநோன்பி | uṇṇā-nōṉpi n. <>உண்ணு-+ஆ neg.+நோன்பு. Jaina ascetic who fasts on specified occasions; குறித்தகாலங்களிற் பட்டினிவிட்டுண்ணுஞ் சைனமுனிவன். உண்ணா நோன்பி தன்னொடுஞ் சூளுற்று (மணி.3, 102). |
உண்ணாமறிப்பு | uṇṇā-maṟippu n. <>id.+id.+. The creditor's act of preventing his debtor from taking food till he is paid; கடன்கொடுத்தோர் கடன்வாங்கினவர்களை உணவுகொள்ள வொட்டாமல் தகையும் மறியல். கடன்காரர் வந்திழுக்க வுண்ணாமறிப்பி லுடைவாரும் (தெய்வச். விறலிவிடு. 366). |
உண்ணாவிரதம் | uṇṇā-viratam n. <>id.+. Hunger-strike; விரும்பிய காரியத்தைச் சாதிக்கப் பட்டினிகிடக்கை. Mod. |
உண்ணியப்பம் | uṇṇi-y-appam n. <>உண்ணி+. Small, round, sweet cake; சிறிய உருண்டைவடிவான இனிப்புப் பணிகாரவகை. Loc. |
உண்ணீடம் | uṇṇīṭam n. <>uṣṇīṣa. (நாநார்த்த.) 1. Turban, தலைப்பாகை. 2. Crown; |
உண்முகம் | uṉ-mukam n. <>உள்+. Looking in ward; மனத்தால் உட்புறம்நோக்கும் நோக்கம். கானநீரிற்கண டுண்முகமடைவரா (மகாராஜாதுறவு, 102). |
உண்மூக்கு | uṇmūkku n. <>id.+. Top of the nostril; மூக்கின் உட்புறத்தின் மேற்பாகம். (யாழ். அக.) |
உண்மை | uṇmai n. <>id. Individual soul; ஆன்மா. (சி. சி. பர. ஆசீவக. 8.) |
உண்மையுத்தரம் | uṇmai-y-uttaram n. <>உண்மை+. Answer of the defendant, admitting the truth of the plaint; வாதியாற் கூறப்பட்ட உண்மைமொழிகளைப் பிரதிவாதி யொப்புக்கொண்டு கூறும் விடை. (சுக்கிரநீதி. 270.) |
உணக்குப்பொருள் | uṇakku-p-poruḷ n. <>உணக்கு-+. Dried vegetables; காய்கறிகளின் வற்றல். (நாமதீப.) |
உணர்த்தியறு - தல் | uṇartti-y-aṟu- v. intr. <>உணர்த்தி+. To Swoon; to lose consciousness; மெய்ம்மறத்தல். ஸ்வதஸ்ஸர்வஜ்ஞமான வஸ்துவும் உணர்த்தியறும்படி யாய்த்துப் படுக்கைவாய்ப்பு (ஈடு, 10, 2, 8, வ்யா. பக. 60). |
உணர்வெழுத்து | uṇarveḻuttu n. <>உணர்வு+. Symbolic letter; குறியினாலுணரப்படும் ஒருவகை யெழுத்து. (யாப். வி. 535.) |
உணவு | uṇavu n. <>உண்-. Rain; மழை. (அக. நி.) |
உணை | uṇai n. perh. உள்+நை-. Emaciation; மெலிவு. (யாழ். அக.) |
உத்தஞ்சம் | uttacam n. <>uttamsa. (நாநார்த்த.) 1. Ear-pendant; செவிப்பூண். 2. Wreath; |
உத்தண்டமாலை | uttaṇṭa-mālai n. <>K. uttaṇda+. A woman's necklace made of gold beads; பொன்மணிகளாலான மாதர் கழுத்தணிவகை. உத்தண்டமாலையைக் காதோலையைப் பொன்மோதிரத்தை வைத்தென்றாலும் கடுக வாங்கித்தா (விறலிவிடு. 258). |
உத்தம் | uttam n. cf. un-matta. Becoming mad or maddened; பித்தேறுகை. (அக. நி.) |
உத்தம்பகம் | uttampakam n. <>uttam-bhaka. Augmenting, raising; விருத்தி செய்கை. அது பழைய அபிநிவேசத்துக்கு உத்தம்பகமாய் (திவ். இயற். திருநெடுந். 1, வ்யா.). |
உத்தம்பி - த்தல் | uttampi- 11 v. intr. <>utambh. To augment; விருத்திசெய்தல். (ரஹஸ்ய. 94.) |
உத்தமகன்னி | uttamam-kaṉṉi n. cf. உத்தமாகாணி. Hedge-twiner; வேலிப்பருத்தி. (நாமதீப.) |
உத்தமசாகசம் | uttama-cākacam n. <>uttama+. Fine of 1000 fanams; ஆயிரம் பணம் விதிக்கும் அபராதம். (சுக்கிரநீதி, 173.) |
உத்தமதானம் | uttamatāṉam n. <>id.+. Gift of betel leaves and nut; பாக்கு வெற்றிலைகளைத் தானமாகக்கொடுக்கை. (யாழ். அக.) |
உத்தமதானி | uttama-tāṉi n. <>id.+. A kind of temple lamp; கோயிலில் வைக்கும் ஒருவகை விளக்கு. (S. I. I. v, 246.) |
உத்தமம் | uttamam n. Galangal; அரத்தை. (சங். அக.) |
உத்தமர்ணன் | uttamarṇaṉ n. <>uttamarṇa. Creditor, money-lender; கடன் கொடுப்பவன். (சுக்கிரநீதி, 96.) |