Word |
English & Tamil Meaning |
---|---|
உபாயனபத்திரம் | upāyaṉa-pattiram n. <>upāyana+. Document specifying presents; கையுறையாகக் கொடுக்கும் பொருளைப்பற்றி பத்திரம். (சுக்கிரநீதி, 93.) |
உபாயி | upāyi n. <>upāya. Artful person; தந்திரமுள்ளவன். (R.) |
உபேட்சாபாவனை | upēṭcā-pāvaṉai n. <>upēkṣā+. Impartiality; சார்பு பற்றாது ஒப்ப நோக்குந்தன்மை. (மணி. 30, 253, அரும்.) |
உபேட்சையானம் | upēṭcai-yāṉam n. <>upēkṣā+yāna. The return march of a defeated king unmindful of his defeat; தோல்வியடைந்த அரசன் பகைவனைப் புறக்கணித்துத் திரும்புகை. (சுக்கிரநீதி, 337.) |
உபோதகம் | upōtakam n. See உடுபோதம். (யாழ். அக.) . |
உம்பளச்செய் | umpaḷa-c-cey n. <>உம்பளம்+. Land granted for services rendered; செய்த ஊழியத்துக்காக விடப்பட்ட நிலம். மடுத்தகுடி யம்பலத்தா ரும்பளச்செய் யவ்வளவும் (சரவண. பணவிடு. 186). |
உம்மியம் | ummiyam n. Mineral poison; பிறவிப்பாஷாணம். (சங். அக.) |
உம்வரம் | umvaram n. <>umbara. The upper timber of a door frame; மேல்வாயிற்படி. (சங். அக.) |
உமட்டியர் | umaṭṭiyar n. Fem. of உமணர். Fisher-women; நுளைச்சியர். (அக. நி.) |
உமம் | umam n. <>uma. 1. Landing place; கப்பற் சரக்குகளை யிறக்குமிடம். (W.) 2. City; |
உமிசம் | umicam n. 1. Groove in the frame work of a jewel in which stones are to be set; உம்மிசம். 2. Notch; |
உமிப்புடம் | umi-p-puṭam n. <>உமி+. Calcination by heating medicinal drugs over a pitful of burning paddy-husk; குழி நிறைய உமியிட்டு எரிக்கும் புடம். (சங். அக.) |
உமை | umai n. <>umā. 1. Turmeric; மஞ்சள். (நாநார்த்த) 2. Fame; 3. Brilliance; 4. A kind of paddy; 5. Sunhemp; |
உய்த்துணர்மொழி | uyttuṇar-moḻi n. <>உய்-+உணர்-+. (Pros.) A defect in versification; செய்யுட்குற்றங்களுளொன்று. (யாப். வி. 525.) |
உயர்த்து - தல் | uyarttu- 5 v. tr. 1. To conclude, as a ceremony; முடித்தல். சோமவார விரதத்தை யுயர்த்தினார். 2. To extinguish; |
உயவர் | uyavar n. <>உயவு-. Persons in distress; துன்புறுவோர். (W.) |
உயவு - தல் | uyavu- 5 v. intr. cf. உசவு To apply grease to a cart-wheel; வண்டிச்சக்கரத்திற்கு மையிடுதல். தஞ்சாகாடேனு முயவாமற் சேறலோவில் (பழ. 168). |
உயிர்க்கயிறு | uyir-k-kayiṟu n. <>உயிர் +. Strong rope or cable; உறுதியுள்ள கயிறு. வடம்போலேயிருக்கிற வாஸூகியை வலிய உயிர்க்கயிறாகச் சுற்றி (திவ். பெரியாழ். 1, 6, 11, வ்யா. பக். 135). |
உயிர்ப்பு | uyirppu n. <>உயிர்-. A measure of time; ஒரு கால அளவு. கணம்வளி யுயிர்ப்புத் தோவம் (மேருமந். 94). |
உயிர்விளக்கம் | uyir-viḷakkam n. <>உயிர் +. Knowledge of the nature of ātman; ஆத்மஸ்வரூபத்தை அறிகை. (திருவருட். தலைப்பு. பக். 59.) |
உயிர்வை - த்தல் | uyir-vai- v. intr. <>id.+. To die; இறத்தல். அழனிலை யத்தத் தசைந் துயிர்வைப்ப (பெருங். இலாவாண. 9, 129). |
உயிரெடு - த்தல் | uyir-et- v. tr. <>id.+. Lit. To take away life. [உயிரை வாங்கிவிடுதல்] To give great trouble; |
உரக்க | urakka adv. <>உர-. Firmly, tightly; உறுதியாக. அவற்றை யுரக்கப் பிடித்துக்கொண்டேன் (ஈடு, 10, 8, 3, வ்யா. பக். 263). |
உரகர் | urakar n. See உரவர். (யாழ். அக.) . |
உரட்டுக்கை | uraṭṭu-k-kai n. cf. ஒரட்டுக்கை. Left hand; இடதுகை. Madr. |
உரண்டம் | uraṇṭam n. cf. karaṭa. Crow; காக்கை. (அக. நி.) |
உரதம் | uratam n. <>surata. Semen virile; சுக்கிலம். (சங். அக.) |
உரப்பார்சுவார்த்தமண்டலி | ura-p-pār-cuvārtta-maṇṭali n. <>uras + pāršva + ardha+. (Nāṭya.) One of thirty nirutta-k-kai, q.v.; நிருத்தக்கை முப்பதனு ளொன்று. (சிலப். பக். 81.) |
உரம் | uram n. prob. உர-. Rampart; மதில். (பிங்.) |
உரல்வரி | ural-vari n. <>உரல் +. An ancient tax; வரிவகை. (S. I. I. iv, 106.) |
உரலிலை | uralilai n. See உலகுய்யக்கொட்டான். (பெரியமாட். 157.) . |