Word |
English & Tamil Meaning |
---|---|
உருவ | uruva adv. <>உருவு. Repeatedly; திரும்பத்திரும்ப. பின்னையும் விடமாட்டாளே; இங்ஙனே யுருவச் சொல்லுமித்தனை (ஈடு, 10, 3, 4). |
உருவக்கந்தம் | uruva-k-kantam n. <>உருவம் +. (šaiva.) Sound and other categories which are capable of being contemplated by the mind; சித்தத்தால் உணரப்படுஞ் சத்தமுதலாயின. (சி. போ.பா.அவை. 38.) |
உருவகம் | uruvakam n. <>rūpaka. Drama; நாடகம். (நாநார்த்த.) |
உருவத்திருமேனி | uruva-t-tirumēṉi n. <>உருவம் +. God, as assuming form or shape; வடிவுடையவராகக் கருதப்படுங் கடவுள். (சீகாழி. கோ. பக். 88.) |
உருவப்பரப்பு | uruva-p-parappu n. <>id.+. The eight characteristics of the Supreme Being; கடவுளது சர்வஞ்ஞாதி அஷ்டகுணங்கள். தன்னுருவப்பரப்பை யெலாங் கொடுபுகுந்து பதிப்பன் (சி. சி. 9, 12). |
உருவபாவனை | uruva-pāvaṉai n. <>id.+. Meditation on God, as having form; இறைவனை உருவமுடையவனாகத் தியானிக்கை. (சங். அக.) |
உருவறை | uru-v-aṟai n. <>உரு + அறு-. One who has bodily defects; உடலழகற்ற-வன்-வள்-து. உருவறைக்கோபாலர் (திவ். பெரியாழ். 3, 8, 2, வ்யா. பக். 740) |
உருவி | uruvi n. <>rūpin. Hero extolled by name in a poem, dist. fr. aruvi; பாட்டுடைத் தலைவன். உருவியாகிய வொரு பெருங்கிழவனை (யாப். வி. பக். 525). |
உருவு - தல் | uruvu- 5 v. intr. To escape; to give the slip; தப்பித்துக்கொள்ளுதல். பையன் உருவிவிட்டான். Loc. |
உருவுள்ளு | uruvuḷḷu n. Gram; கொள்ளு. (W.) |
உருவெழுத்து | uru-v-eḻuttu n. <>உரு +. Letters of an alphabet, as having forms; வரிவடிவுள்ள வெழுத்து. (யாப். வி. 535.) |
உருளை | uruḷai n. <>உருள்-. 1. A kind of diamond; வயிரவகை. (S. I. I. ii, 78.) 2. Hip-joint of a bull; 3. Egg; 4. White oxide of arsenic; |
உரூப்பியம் | urūppiyam n. <>rūpya. Silver; வெள்ளி. (நாநார்த்த.) |
உரூபிகை | urūpikai n. perh. id. White madder; வெள்ளெருக்கு. (சங். அக.) |
உரேந்திரன் | urēntiraṉ n. perh. uras +. Hero; வீரன். (யாழ். அக.) |
உரையிடு - தல் | urai-y-iṭu- v. intr. <>உரை +. 1. To annotate; நூற்கு உரைசெய்தல். 2. To enter into controversy; to debate; |
உரைவாணன் | urai-vāṇaṉ n. <>id.+. Annotator, commentator; உரை கூறவல்ல புலவன் உரைவாணர்தங்கணவை காணின் (குலோத்; கோ. 363). |
உரோகதி | urōkati n. <>purō-gati. Dog; நாய். (யாழ். அக.) |
உரோகிடம் | urōkiṭam n. <>rohiṣa. Citronella grass; காவட்டம்புல். (நாநார்த்த.) |
உரோகிணி | urōkiṇi n. <>rōhiṇī. Coom teak; பெருங்குமிழ். (நாநார்த்த.) |
உரோகிதம் | urōkitam n. <>rōhita. (நாநார்த்த.) 1. Red carp; செங்கயல். 2. Saffron; 3. Redness; |
உரோசனகம் | urōcaṉakam n. Lime; எலுமிச்சை. (சங். அக.) |
உரோசனை | urōcaṉai n. <>rōcanā. Red water-lily; செங்கழுநீர். (நாநார்த்த.) |
உரோடணம் | urōṭaṇam n. <>rōṣāṇa. (நாநார்த்த.) 1. Quicksilver; பாதரசம். 2. Saline tract; |
உரோபம் | urōpam n. <>rōpa. Arrow; அம்பு. (நாநார்த்த.) |
உரோமக்கிழங்கு | urōma-k-kiḷaṅku n. <>உரோமம் +. Sweet flag; வசம்பு. (வை. மூ.) |
உரோமச்சோளம் | urōma-c-cōḷam n. <>id.+. A kind of American corn, the ears of which have hair-like projections; வாலுடைய சோளவகை. Tinn. |
உரோமண்டலி | urō-maṇṭali n. <>uras +. (Nāṭya.) One of 30 nirutta-k-kai, q.v.; நிருத்தக்கை முப்பதனு ளொன்று. (சிலப். பக். 81.) |
உரோருகம் | urōrukam n. <>uro-ruha. Breast; முலை. (யாழ். அக.) |
உல்கூட்டுஞ்சரக்கு | ulkūṭṭu-carakku n. <>உலகு + ஊட்டு-+. Merchandise from which customs are derived; சுங்கந் தரும் பண்டம். (T. A. S. ii, 82.) |
உல்லங்கி - த்தல் | ullaṅki- 11 v. tr. <>ullaṅgha. To transgress; to stray from the path of virtue; நெறிகடத்தல். குருவங்கிசம் உல்லங்கியாமல் (பாரதவெண். 171, உரை). |