Word |
English & Tamil Meaning |
---|---|
உல்லடைப்பு | ul-l-aṭaippu n. perh. உல் +. Damming a river with stockade; மரந்தால் ஆற்றுக்கு அணையிடுகை. Pond. |
உல்லாசத்தலம் | ullāca-t-talam n. <>ullāsa+. Balcony; மாளிகைகளில் உல்லாசமாகக் காலம்போக்குதற்கமைந்த இடம். (கட்டட. நாமா.) |
உல்லி | ulli n. High wall; மதில். (அக. நி.) |
உல்லியக்கூலி | ulliya-k-kūli n. prob. kulya +. An ancient tax; வரிவகை. (S. I. I. ii, 352.) |
உல்லியம் | ulliyam n. cf. kulyā. Well; இறைகிணறு. (W.) |
உலக்கை | ulakkai n. Sea; கடல். (அக. நி.) |
உலகசயன் | ulaka-cayaṉ n. <>lōka-jaya. The Buddha; புத்தன். (W.) |
உலகபுராணம் | ulaka-purāṇam n. <>உலகம் +. An ancient Purāṇa; ஒரு பழைய புராணம். அலகைசான்ற வுலகபுராணமும் (பெருங். உஞ்சைக். 32, 2). |
உலகமீன்றாள் | ulakam-īṉṟāḷ n. <>id.+. Pārvati; பார்வதி. வந்திடு முலகமீன்றாள் வதுவையஞ் சாலை நண்ணி (கந்தபு. திருக்கல். 67). |
உலகர் | ulakar n. The Pāṇdyas; பாண்டியர். (அக. நி.) |
உலகிதன் | ulakitaṉ n. <>lōkāyata. Materialist; உலகாயதன். பல்லுயிரும் . . . வினையுமில் லென்றுரைக்கு முலகிதர் (T. C. M. ii, 2, 815). |
உலகியற்சொல் | ulakiyaṟ-col n. <>உலகியல் +. Word of non-vēdic usage, dist. fr. vaitika-c-col; வேதவழக்கிலில்லாது உலகவழக்கிலே வழங்குஞ் சொல். (கலித், 1, உரை.) |
உலகுடையபெருமாள் | ulakuṭaiya-peru-māl n. <>உலகு + உடை-மை +. King; அரசன். (M. E. R. 211 of 1927-8). |
உலகுய்யக்கொட்டான் | ulakuyya-k-koṭṭāṉ n. <>id.+ உய்-+. A medicinal herb; ஒரு வகை மருந்துப் பச்சிலை. (பெரியமாட். 157-A). |
உலகேடணை | ulakēṭaṇai n. <>lōka + īṣaṇā. (Phil.) Desire for worldly objects; உலகவிஷயங்களிற்கொள்ளும் ஆசை. (கட்டளைக். 51.) |
உலபம் | ulapam n. <>ulapa. Viḷal a kind of grass; விழற்புல். (நாநார்த்த.) |
உலம் | ulam n. (அக. நி.) 1. cf. upala. Strength; வலிமை. 2. cf. உலமால். Grief; 3. cf. உல-. Corpse; 4. Silk cloth; 5. Doorway; 6. Breadth; 7. Water; 8. cf. உலவை. Wind; |
உலம்படி | ulampaṭi n. Corr. of உலைமூடி. Lid or cover of the cooking-pot; உலைப்பானையின் மேல்மூடி. Loc. |
உலவல் | ulaval n. <>உல-. Ascetic; துறந்தோன். (அக. நி.) |
உலவிபொன் | ulavi-poṉ n. perh. உவ்வி +. Pure gold; சுத்தத் தங்கம். உலவிபொன் இருபதின் கழஞ்சு பொன்னுக்கும் (S. I. I. V, 281). |
உலவை | ulavai n. perh. lōbha. Desire; அவா. (அக. நி.) |
உலறு - தல் | ulaṟu- 5. v. tr. To afflict; to cause distress; வருத்துதல். வீழ்ந்தலறி நின்றுலறியங்காக்கும் (நீலகேசி, 52). |
உலாப்புறு - த்தல் | ulāppuṟu- v. tr. <>உல- + உறு-. To destroy; அழித்தல். நாளுலாப்புறுத்தும் வாள்வலி (பெருங். உஞ்சைக். 56, 252) |
உலாங்கிலி | ulāṅkili n. perh. உலுங்கு-. Rattlewort; கிலுகிலுப்பை. (சங். அக.) |
உலாந்தா | ulāntā n. <>Fr. Hollande. Holland; ஐரோப்பாவிலுள்ள ஒரு தேசம். Mod. |
உலாமா 1 | ulāmā n. 1. A kind of tree; கச்சமரம். (பச். மூ.) 2. Bitter orange; |
உலாமா 2 | ulāmā n. <>Arab. ulamā. High priest of Muhammadanism; முகம்மதிய குரு. Muham. |
உலாவுகாட்சை | ulāvu-kāṭcai n. <>உலாவு- + காட்சி. A tax; வரிவகை. (S. I. I V, 330.) |
உலுங்கு - தல் | uluṅku- 5 v. intr. cf. குலுங்கு-. To make a jingling noise; கிணீரென்றொலித்தல். பாதச்சிலம்புக ளதிர்ந்து உலுங்க (கோபாலகிருஷ்ண. கீர்த். 1). |
உலுத்தன் | uluttaṉ n. <>lubdha. Hunter; வேடன். (நாநார்த்த.) |
உலூகம் | ulūkam n. <>உலூகலம். 1. Mortar; உரல். (அக. நி.) 2. Konkani resin; |
உலூகலம் | ulūkalam n. Banyan tree; கல்லால். (நாநார்த்த.) |
உலூதை | ulūtai n. <>lūtā. Ant; எறும்பு. (நாநார்த்த.) |
உலூவாவரிசி | ulūvā-v-arici n. cf. உறூவாவரிசி. A kind of grain; தானியவகை. |