Word |
English & Tamil Meaning |
---|---|
உரவர் | uravar n. cf. உறுவர். Jains; சமணர். (யாழ். அக.) |
உரற்பணை | uraṟ-paṇai n. <>உரல் +. Cylindrical ring of wicker work placed over the mortar so that rice may not spill in pounding; தீட்டும்போது அரிசி சிந்தாதவாறு உரலின்மேல் வைக்குங் கூடு. Loc. |
உராதரம் | urātaram n. prob. uras + dhara. Breast; முலை. (யாழ். அக.) |
உரி | uri n. prob. உருவி A plant growing in hedges and thickets; நாயுருவி. Nāṉ. |
உரிமட்டை | uri-maṭṭai n. <>உரி-+. The fibrous covering of a cocoanut; தேங்காயின் வெளிமட்டை. Loc. |
உரிமை | urimai n. Property; சொத்து. (R. T.) |
உரிமைச்சமானம் | urimai-c-camāṉam n. <>உரிமை +. Equality; ஒப்பு. Pond. |
உரிமைப்படை | urimai-p-paṭai n. <>id.+. Paid soldiers; கூலிப்படை. (சுக்கிரநீதி, 303.) |
உரியசை | uri-y-acai n. <>உரி +. (Pros.) Particular kinds of metrical syllables; நேர்புநிரை பசைகள். (தொல். பொ. 318.) |
உரீகாரம் | urīkāram n. perh. உரி-மை +. 1. Acceptance; approval; அங்கீகாரம். (சங். அக.) 2. Promise; |
உரு 1 | uru n. Lime tree; எலுமிச்சை. (சித். அக.) |
உரு 2 | uru n. <>rūpa. Nature; தன்மை. (ஈடு 1, 5, 3, ஜீ. பக். 232.) |
உரு 3 | uru n. <>uru. Largeness; width; அகலம். (நாநார்த்த.) |
உருக்கரம் | urukkaram n. Borax; வெண்காரம். (சங். அக.) |
உருக்கல் | uru-k-kal n. <>உரு +. Stone effigy of a hero who died in a battle; போரில் இறந்த வீரனது உருச்செதுக்கிய கல். (சங். தமிழும். 67.) |
உருக்காட்டி | uru-k-kāṭṭi n. <>id.+ காட்டு-. Mirror; கண்ணாடி. Loc. |
உருக்குமம் | urukkumam n. <>rukma. Streel; உருக்கு. (நாநார்த்த.) |
உருசகம் | urucakam n. <>urcaka. (நாநார்த்த.) 1. Pomegranate; மாதுளை. 2. Small elliptic cuspidate-leaved wind-berry; 3. Bezoar; |
உருசி | uruci n. <>ruci. 1. Ray of light; கிரணம். (நாநார்த்த.) 2. Brilliance; 3. See உருசியாதனம். மயிறண்டுருசி (தத்துவப். 107). |
உருசியாதனம் | uruci-y-ātaṉam n. <>உருசி +. (šaiva.) A yōgic posture; யோகாசனவகை. (தத்துவப். 107, உரை.) |
உருத்திதம் | uruttitam n. prob. rddhi. (அக. நி.) 1. Profit; wages; ஊதியம். 2. Property; 3. Increase; |
உருத்திரகண்டி | urittira-kaṇṭi n. <>உருத்திரம் +. A kind of saree; சீலைவகை. Loc. |
உருத்திரசோலை | urittira-cōlai n. A grove in Kācī, entry into which is supposed to free one from future births; காஞ்சியிலுள்ளதும் தன்னை அடைந்தவர்களின் பிறப்பினை யழிக்கவல்லதாகக் கருதப்படுவதுமான ஒரு சோலை. சுரர்கள் வந்து சூழ் உருத்திரசோலை (பெரியபு. குறிப்பு, 84). |
உருத்திரம் | uruttiram n. prob. haridra. 1. Turmeric; மஞ்சள். (W.) 2. Tree turmeric; |
உருத்திராணி | uruttirāṇi n. <>Rudrāṇi. The river Paccaiyāṟu, a tributary of the Tāmpiraparūṇi; தாமிரபருணியின் உபநதிகளுளொன்றான பச்சையாறு. (நாமதீப. 528.) |
உருத்துவம் | uruttuvam n. <>urutva. Bulkiness; largeness; பருமை. (சங். அக.) |
உருத்தேறு - தல் | uru-t-tēṟu- v. intr. <>உரு +. To be in proper condition; நல்ல நிலையிலிருத்தல். பேர்பாதிச் சரக்காவது உருத்தேறும் (மதி. களஞ். i, 186). |
உருநாட்டு | uru-nāṭṭu n. <>id.+ நாட்டு-. Picture; சித்திரம். (யாழ். அக.) |
உருப்பம் | uruppam n. Flour of millet; தினைமா. (சங். அக.) |
உருப்பு | uruppu n. perh. உரு-. (அக. நி.) 1. Grief; துக்கம். 2. Kitchen; |
உருப்பெயர் - த்தல் | uru-p-peyar- v. tr. <>உரு +. To transliterate; ஒரு சொல்லைப் பிறமொழி யெழுத்தில் எழுதுதல். Mod. |
உருபு | urupu n. prob. உரு-. Malady; நோய். (அக. நி.) |
உருமணி | urumaṇi n. <>உரு +. Pupil of the eye; கருவிழி. (யாழ். அக.) |
உருமானம் | uru-māṉam n. <>id.+. 1. Figure, shape; உருவம். 2. Anything ripe or full grown; |