Word |
English & Tamil Meaning |
---|---|
உள்ளான் | uḷḷān n. An insect; பூச்சிவகை. Tinn. |
உள்ளிட்டம் | uḻ-ḻ-iṭṭam n. <>உள் + இடு-. Loss; நஷ்டம். ஏற்ற உள்ளிட்டம் வாராமல் காத்து நோக்கக் கடவாராகவும் (Pudu. Insc. 475). |
உள்ளிழிச்சு - தல் | uḻ-ḻ-iḻiccu- v. tr. <>id.+. To gulp; to swallow; உட்கொள்ளுதல். ஸாரஸ்யத்தாலே உள்ளிழிச்சவும் மாட்டாதே உமிழவும் மாட்டாதே நடுவே நாக்கடியிலே வைத்திருக்கிற படியைச் சொல்லுதல் (திவ். திருநெடுந். 11, வ்யா.). |
உள்ளினர் | uḷḷiṉar n. <>உள்ளு-. Intimate friends; அந்தரங்கமானவர் (திருவருட். 2, பக். 43.) |
உள்ளுக்குள்ளே | uḷḷukkuḷḷē adv. <>உள் + உள். Inwardly; மனத்துக்குள். உள்ளுக்குள்ளே அவனுக்குப்பயம். (W.) |
உள்ளுடை | uḷ-ḷ-uṭai n. <>id.+. shirt; inner garment; உட்சட்டை. Pond. |
உள்ளுளவு | uḻ-ḻ-u-uḷavu n. <>id.+. Collusion; உடந்தை. உள்ளுளவான கடைக்காரர்கள் (மதி. களஞ். i, 9). |
உளப்பாடு 1 | uḻa-p-pāṭu n. <>உண்-மை +. Real state; உண்மைநிலை. அவ்வினையினது உளப்பாடறிவானது (குறள், 673, மணக்.). |
உளப்பாடு 2 | uḻa-p-pāṭu n. <>உளம் +. Consent; சம்மதம். அஃது உளப்பாடுள்வழி நிகழ்வ தாகலின் (குறள், 1092, உரை). |
உளம் | uḻam n. <>உள். 1.Inside; உட்பக்கம். யாவையு முளம்புக விழுங்கியிட் டுமிழ்வ வொத்து (நீலகேசி, 24). 2. Soul; |
உளர் | uḻar n. <>id. Accomplice; உடந்தை. (யாழ். அக.) |
உளவாளி | uḷavāḷi n. <>உளவு + ஆள். 1. Spy; உளவாள். (தாசில். நா.) 2. See உளர். Loc. |
உளிக்குத்து | uḻi-k-kuttu n. prob. உளி+. Fisticuff; முஷ்டியாற் குத்துங் குத்து. Tinn. |
உளுந்தூர்ச்சக்கரம் | uḷuntūr-c-cakka-ram n. An ancient coin, probably after a place uḷuntūr; பழையநாணயவகை. (பணவிடு. 145.) |
உளை | uḻai n. <>உளை-. Inarticulate sound; எழுத்திலாவோசை. (நாநார்த்த.) |
உற்கசங்கரேகை | uṟka-caṅka-rēkai n. prob. utka +. (Palmistry) A line in the palm; கைரேகைவகை. (கூளப்ப. 346.) |
உற்கடம் | uṟkaṭam n. <>utkaṭa. 1. Cloves; இலவங்கம். (நாநார்த்த.) 2. Severity; 3. An elephant in rut; 4. Pride; 5. Sarsaparilla; |
உற்கடிதம் | uṟkaṭitam n. <>udghaṭita. (Nāṭya.) One of five nirutta-pātam, q.v.; ஐவகை நிருத்தபாதங்ளு ளொன்று. (சிலப். பக். 81.) |
உற்கரி - த்தல் | uṟkari- 11 v. intr. prob. utkr. To vociferate; உரக்கப் பேசுதல். (W.) |
உற்கிரகம் | uṟkirakam n. prob. udgraha. (Mus.) One of five icai-k-kiḷai, q.v.; இசைக்கிளை ஐந்தனுள் ஒன்று. (பெரியபு. ஆனாய. 26, உரை.) |
உற்பணம் | uṟpaṇam n. <>ulbaṇa. (Naṭya.) One of thirty nirutta-k-kai, q.v.; நிருத்தக்கை முப்பதனு ளொன்று. (சிலப். பக். 81.) |
உற்பவமுத்திரை | uṟpava-muttirai n. <>உற்பவம் +. A hand-pose; முத்திரைவகை. (செந், X, 426.) |
உற்பனம் | uṟpaṉam n. <>ulpanna. Knowledge; ஞானம். உற்பனத்தை யெண்ணி யுருச்செபித்தேன் (விறலிவிடு. 586). |
உறங்காப்புளியன் | uṟaṇkā-p-puḷiyan n. உறங்கு-+ ஆ neg.+. An inferior deity; ஒரு சிறுதெய்வம். உன்னிவளர்ந்த வுறங்காப்புளியனென்றும் (பஞ்ச. திருமுக. 736). |
உறங்கி | uṟaṅki n. prob. id. Tamarind; புளி. (சங். அக) |
உறங்குணி | uṟaṅkuṇi n. <>id.+ உண்-. Sleepy head; தூங்குபவன். Colloq. |
உறப்பு | uṟappu n. <>உற-. Cleavage; பிளப்பு. (நாநார்த்த.) |
உறழ்ப்பு | uṟaḻppu n. <>உறழ்-. Denseness; closeness; நெருக்கம். (நாநார்த்த.) |
உறழ்வு | uṟaḻvu n. <>உறழ்-. Multiplication; பெருக்கல். (நாநார்த்த.) |
உறள் | uṟaḷ n. A kind of bee; வண்டுவகை. Loc. |
உறாவுதல் | uṟāvutal n. <>உறு-. Distress; வருத்தம். அர்ஜுனனுடைய முகத்தில் உறாவுதலைக் கண்டருளியிருக்கச்செய்தே (ரஹஸ்ய. 1293). |
உறாவொற்றி | urā-v-oṟṟi n. <>id.+ ஆ neg.+. Irredeemable mortgage; மீளா வொற்றி. பணத்துக்கு உறாவொற்றியாக வேண்டின நிலம் (T. A. S. iii, 225). |
உறுகிழாத்தி | uṟukiḻātti n. A kind of fish; மீன்வகை. உறுகிழாத்தி காலை பாலை (பறாளை. பள்ளு. 75). |