Word |
English & Tamil Meaning |
---|---|
ஊர்க்கணக்கர்ஜீவிதம் | ūrkkaṇakkar-jīvitam n. <>ஊர்க்கணக்கன்+. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. V., 374.) |
ஊர்க்கமஞ்சு | ūrkkamacu n. An office under the Cōḻa administration; சோழராச்சியத்திலமைந்த ஒருத்தியோகம். (S. I. I. V, 283.) |
ஊர்க்கலனை | ūr-k-kalaṉai n. perh. ஊர் + கலனை. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. iv, 79.) |
ஊர்க்காரியம் | ūr-k-kāriyam n. <>id.+. Public affairs; ஊர்ப்பொதுக் காரியம். (திவ். பெரியாழ். 3, 8, 4, வ்யா. பக். 748.) |
ஊர்க்கீழிறையிலி | ūr-k-kīḻ-iṟai-y-ili n. <>id.+. Tax-free land included in the village accounts; கிராமக்கணக்கிற் சேர்ந்த வரியில்லா நிலம். (S. I. I. viii, 404.) |
ஊர்க்கௌண்டன் | ūr-k-kauṇṭaṉ n. <>id.+. Headman of a village; கிராம அதிகாரி. (எங்களூர்.) |
ஊர்ச்சம் | ūrccam n. <>ūrja. (நாநார்த்த.) 1. Zeal, enthusiasm; உற்சாகம். 2. Prowess; 3. The solar month Kārttikai; |
ஊர்ச்சரிகை | ūr-c-carikai n. <>ஊர்+. A tax; வரிவகை. (S. I. I. V, 359.) |
ஊர்ச்சுற்று | ūr-c-cuṟṟu n. <>id.+. Vicinity of a village; ஊரின் புறப்பாகம். ஊர்ச்சுற்றிலே அலர்ந்து கிடக்குமாய்த்துப் பொழில்கள் (ஈடு, 10, 2, 2). |
ஊர்சுற்றி | ūr-cuṟṟi n. <>id.+சுற்று-. Ass; கழுதை. (சங். அக.) |
ஊர்த்தம் | ūrttam n. prob. ūrdhva. Upland, highland; மேடு. (நாமதீப.) |
ஊர்த்தமுகி | ūrtta-muki n. prob. id.+. A plant; பூடுவகை. (நாமதீப.) |
ஊர்த்தலையாரி | ūr-t-talaiyāri n. <>ஊர்+. Village Watchman; ஊர்க்காவற்காரன். (தாசில். நா.) |
ஊர்த்தவெள்ளை | ūrttaveḷḷai n. A kind of fish; ஒருவகைமீன். கெண்டைக்கார லூர்த்த வெள்ளை (பறாளை. பள்ளு. 16). |
ஊர்த்துவநிருத்தம் | ūrttuva-niruttam n. <>ūrdhva + nrtta. 1. šiva's dance with one leg poised upward; ஊர்த்துவதாண்டவம். 2. (šaiva.) standing on one leg, the other leg being raised upward and held by one hand; |
ஊர்ப்பொருத்தம் | ūr-p-poruttam n. <>ஊர்+. (Astrol.) The agreement between the first letters of the name of a place and of the person about whom prediction is made; ஊர்ப்பெயரின் முதலெழுத்துக்குங் குறிகேட்போன் பெயரின் முதலெழுத்துக்கும் அமையும் பொருத்தம். (சோதிட. சிந். 199.) |
ஊர்மணியம் | ūr-maṇiyam n. <>id.+. (R. T.) 1. Superintendence of a village; கிராம மேற்பார்வை. 2. Superintendent of a village; |
ஊர்மி | ūrmi n. <>ūrmi. Wave; அலை. (விசாரசந். 344.) |
ஊர்வரை | ūr-varai n. <>ஊர்-+. Elephant; யானை. பொன்னூர்வரைதனில் (சிவக். பிரபந். கோடீச்சுர. 241). |
ஊர்வாருகம் | ūrvārukam n. <>urvāruka. Cucumber; வெள்ளரி. (நாமதீப.) |
ஊரணாயு | ūraṇāyu n. <>ūrṇāyu. (நாநார்த்த.) 1. Spider; சிலந்தி. 2. Goat; 3. Woollen blanket; |
ஊரதிசயங்காட்டி | ūr-aticayaṅ-kāṭṭi n. <>ஊர்+. Cicerone. guide; ஊரில் அதிசயமாயுள்ளவற்றை யெல்லாம் அங்குப் புதிதாக வருபவர்க்குக் காட்டுபவன். Pond. |
ஊரமை | ūramai n. prob. ஊராண்மை. Administration of a village; கிராமப் பொதுக் காரியங்களை நிர்வகிக்கை. ஊரமை செய்யும் வாரியப் பெருமக்களோம் (S. I. I. i,117). |
ஊரழிபூசல் | ūr-aḻi-pūcal n. <>ஊர் + அழி-+. War in which the whole village is looted; ஊரைக் கொள்ளையிட்டழிக்கும் போர். ஊரழிபூசல் போலே திருமேனியின் நிறமானது எல்லாவற்றையுங்கூடக் கொண்டுவந்து என்னெஞ்சைக் கொள்ளைகொண்டது (திவ். அமலனாதி. 9, வ்யா. பக். 99). |
ஊரறுகு | ūr-aṟuku n. <>id.+. A kind of grass; அறுகுவகை. (தஞ். சரசு. iv, 144.) |
ஊரன் | ūraṉ n. <>ஆரூரன். St. Sundarar; சுந்தரமூர்த்திநாயனார். (தேவா. 1242, 10.) |
ஊராளன் | ūr-āḷaṉ n. <>ஊர் + ஆள்-. An official who superintends the village affairs; ஊராட்சி செய்யும் ஓர் அதிகாரி. (T. A. S. iv, i, 10.) |
ஊரி | ūri n. <>ஊர்-. A kind of snail; நத்தைவகை. Pond. |