Word |
English & Tamil Meaning |
---|---|
கட்டையிலடி - த்தல் | kaṭṭaiyil-aṭi- v. intr. <>id.+. To be put in stocks; தண்டனையாகக் குட்டையில் மாட்டுதல். Loc. |
கட்டையிலை | kaṭṭai-y-ilai n. <>id.+. Portion of the plantain leaf cut across near the stem, for use as a plate; ஏடாக நறுக்கிய வாழையிலை. Loc. |
கட்டைவண்டி | kaṭṭai-vaṇṭi n. <>id.+. Springless country-cart; வில் இல்லாத வண்டி. |
கட்டைவிழுதல் | kaṭṭai-viḻutal n.<>id.+. Abortion; உருவாகாத கருச் சிதைந்துவிழுகை. Colloq. |
கட்டைவெள்ளை | kaṭṭai-veḷḷai n. <>id.+. A kind of paddy; நெல்வகை. (விவசா. 2.) |
கடக்காரன் | kaṭa-k-kāraṉ n. <>கடன்+. Man or boy who died a premature death; அகாலமரணமடைந்தவன். Nā. |
கடக்காரி | kaṭa-k-kāri n. <>id.+. 1. See கடன்காரி. Nā. . 2. Woman who causes useless expenditure; |
கடக்கை | kaṭakkai n. A kind of musical instrument; வாத்தியவகை. இடக்கை கடக்கை மணிக்காளம் (சேக்கிழார். பு. 73). |
கடகம் | kaṭakam n. <>kaṭaka. Cantonment, military camp; படைவீடு. (அக. நி.) |
கடதாசி | kaṭatāci n. <>Port. cartaz. Playing-cards; விளையாடுஞ் சீட்டு. அவன் கடதாசியாடுகிறான். |
கடந்தை | kaṭantai n. Tinn. 1. A kind of bee; பெருந்தேனீ. 2. cf. கடுந்தேறு. A kind of wasp; |
கடப்படு - தல் | kaṭa-p-paṭu- v. intr. <>கடம்+. To be feasible; சாத்தியப்படுதல். (ரஹஸ்ய. 782.) |
கடப்பா | kaṭappā n. perh. கட்டு-+பாய். Sail of a catamaran; கட்டுமரத்திற் கட்டும் பாய். Loc. |
கடப்பான் | kaṭappāṉ n. prob. கட-. A kind of crab; நண்டுவகை. Tinn. |
கடபம் | kaṭapam n. A kind of vessel with nozzle; கெண்டி. (நாமதீப.) |
கடபயாதி | kaṭapayāti n. <>ka-ṭa-pa-yatādi. A system of signifying numerals by Sanskrit letters; எண்களை வடமொழி எழுத்தாற் குறிப்பதற்கமைந்த ஒருமுறை. (சாச. தமிழ்க். 87.) |
கடபலம் | kaṭapalam n. Teak; தேக்கு. (யாழ். அக.) |
கடம் | kaṭam n. prob. gada: (சம். அக. Ms.) 1. Protection, safety; இரட்சகம். 2. Shield; |
கடமாரி | kaṭamāri n. Scabrous ovate unifoliate tick-trefoil; சிறுபுள்ளடி. (நாமதீப.) |
கடமை | kaṭamai n. <>கடம்+ஆ. Bison, wild cow; காட்டுப்பசு. (யாழ். அக.) |
கடருத்திரம் | kaṭa-ruttiram n. prob. kaṭha+rudra. An Upaniṣad, one of 108; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று. |
கடல் | kaṭal n. Cow; பசு. (அக. நி.) |
கடல்கட்டு - தல் | kaṭal-kaṭṭu- v. intr. <>கடல்+. 1. To prevent, by magic, fish from being caught in the net; மந்திரத்தால் வலையில் மீன் விழாதபடி செய்தல். Nā. 2. To prevent, by magic, storms, etc., in the ocean; |
கடல்முனை | kaṭal-muṉai n. <>id.+. Cape. See கச்சாயம். . |
கடல்வாய்க்கால் | kaṭal-vāykkāl n. <>id.+. Lagoon; உப்பங்கழி. Pond. |
கடல்வாழைக்காய் | kaṭal-vāḻai-k-kāy n. <>id.+. Fish; மீன். Loc. |
கடல்விராஞ்சி | kaṭal-virāci n. perh. id.+. cf. கடலிறாஞ்சி. A kind of shrub; செடிவகை. (W.) |
கடலகம் | kaṭal-akam n. <>id.+. Earth; பூமி. (யாழ். அக.) |
கடலைத்தேங்காய் | kaṭalai-t-tēṅkāy n. <>கடலை+. See கடலைப்பருப்புத்தேங்காய். Tinn. . |
கடலைப்பட்டாணி | kaṭalai-p-paṭṭāṇi n. <>id.+. 1. Pea; பட்டாணிக்கடலை. Loc. 2. A kind of saree; |
கடலைப்பணியாரம் | kaṭalai-p-paṇiyāram n. <>id.+. A confection made of Bengal gram flour; காரமில்லாது கடலைமாவாலான பணியார வகை. Tinn. |
கடலைப்பருப்புத்தேங்காய் | kaṭalai-p-paruppu-t-tēṅkāy n. <>id.+பருப்பு+. Cone-shaped cake of Bengal gram broken, fried and mixed with treacle; பொட்டுக்கடலையாற் செய்த பருப்புத்தேங்காய். Loc. |