Word |
English & Tamil Meaning |
---|---|
கருஞ்செய் | karu-cey- n. <>id.+. Dry land; uncultivated waste; புன்செய். இந் நான்கெல்லைக்குட்பட்ட நஞ்செய் கருஞ்செய்களும் (S. I . I. iv, 106). நான்கெல்லைக்குட்பட்ட நீர்நிலமும் கருஞ்செய் புன்செய்யும் (S. I. I v, 170). |
கருடனை | karuṭaṇai n. <>karṣaṇā. Attraction; சேர்த்திக்கை. (யாழ். அக.) |
கருடம் | karuṭam n. <>karṣa. 1. An ancient coin, of the value 10 māṭai; 10 மாடை கொண்ட பழைய நாணயவகை. (சுக்கிரநீதி, 25). 2. A measure of weight=1/4 palam; |
கருடமுகம் | karuṭa-mukam n. prob. garuda+. A blemish in cattle, having the face alone white; முகம் மட்டும் வெள்ளை நிறமாயிருக்கும் மாட்டுக்குற்றம். (மாட்டுவை.) |
கருடாசனம் | karuṭācaṉam n. <>garudāsana. (Yōga.) A yōgic posture; யோகாசன வகை. |
கருடி - த்தல் | karuṭi- 11 v. tr. <>krṣ. To draw towards; to pull; to attract; இழுத்தல். (சங். அக.) |
கருடு - தல் | karuṭu- 5 v. tr. prob. karṣ. To like; விரும்புதல். (யாழ். அக.) |
கருடோற்காரம் | karutōṟkāram n. prob. garuda+udgāra. A kind of emerald; மரகதவகை. (சிலப். 14, 180-3, உரை.) |
கருணம் | karuṇam n. [M. karṇa.] Lime; எலுமிச்சை. (சங். அக.) |
கருணமல்லி | karuṇa-malli n. prob. karṇa+. Arabian Jasmine; முல்லை. (சங். அக.) |
கருணை | karuṇai n. (Mus.) One of the musical notes; சுரசாதியைந்தனுள் ஒன்று. (பரத. இராக. 47.) |
கருத்தக்கடப்பு | karutta-k-kaṭappu n. <>கரு-மை+. A kind of paddy; நெல்வகை. (W. G.) |
கருத்தளவு | karuttaḷavu n. <>கருத்து+. Approximation, estimate; உத்தேசம். (S. I. I. viii, 369.) |
கருத்தாளி | karu-t-tāḷi n. <>கரு-மை+. A tree; மரவகை. (யாழ். அக.) |
கருந்தண்ணீர்க்கல் | karun-taṇṇīr-k-kal n. <>id.+தண்ணீர்+. A kind of stone; பூச்சிலை என்னுங் கல். (யாழ். அக.) |
கருந்தமிழ் | karun-tamiḻ n. <>id.+. Colloquial, unrefined Tamil; கொச்சைத்தமிழ். கருந்தமிழுஞ் செந்தமிழாங் கோவைத் தினகரா (தினகர. 75). |
கருந்தலைக்குத்தகை | karuntalai-k-kuttakai n. <>கருந்தலை+. Temporary lease; சாசுவதமல்லாத குத்தகை. Loc. |
கருந்திருக்கை | karun-tirukkai n. <>கரு-மை+. A kind of tirukkai fish; திருக்கை மீன்வகை. (W.) |
கருந்தூள்செந்தூள்பறத்தல் | karun-tūḷ-cen-tūḷ-paṟattal n. <>கரு-மை+தூள்+செம்-மை+தூள்+. Making much ado; bustling; feverish activity; தீவரமாய் முயலுகை. Loc. |
கருநாடகம் | karunāṭakam n. <>karṇā-ṭaka. 1. That which is old-fashioned or antiquated; பழைமையானது. Loc. 2. That which is civilised; |
கருநாபி | karu-nāpi n. prob. கரு-மை+. Mineral or rock salt; கல்லுப்பு. (சங். அக.) |
கருநாய் | karu-nāy n. <>id.+. Wolf; ஓநாய். கழுகு கருநாய் விரும்பும் (கதிரை. காதல். 8). |
கருநொச்சி | karu-nocci n. prob. id.+. Menstrual fluid; சோணிதம். (யாழ். அக.) |
கருப்பகோளகை | karuppa-kōḷakai n. <>கருப்பம்+. Womb; கருப்பாசயம். (யாழ். அக.) |
கருப்படம் | karu-p-paṭam n. <>karpaṭa.+. Rags; கந்தற்புடைவை. (யாழ். அக.) |
கருப்பதும்பம் | karuppa-tumpam n. <>கருப்பம்+prob. துன்பம். Afterbirth; the membranous covering containing the embryo; கருப்பத்தை மூடியிருக்கும் நஞ்சுப்பை. கர்ப்பதும்பமாகிற பையிலே கட்டுண்டு (திவ். திருமாலை, அவ. வ்யா. பக். 4). |
கருப்பநாடி | karuppa-nāṭi n. <>id.+. Navel cord; கொப்பூழ்க்கொடி. (யாழ். அக.) |
கருப்பப்பரிசம் | karuppa-p-paricam n. <>id.+. Pregnancy; கருப்பந்தரிக்கை. (யாழ். அக.) |
கருப்பரம் | karupparam n. <>karpara. (யாழ். அக.) 1. Skull; தலையோடு. 2. Bone; 3. Iron vessel; |
கருப்பிடி - த்தல் | karu-p-piṭi- v. intr. <>கரு+. 1. To cast in a mould; அச்சில் வார்த்தல். இவனை மயிலோடேகூடக் கருப்பிடித்ததென்னும்படியா யிருக்கை (திவ். திருப்பள்ளி. 6. வ்யா. பக். 33). 2. To concentrate; to stick to the point; |
கருப்பிலை | karuppilai n. Child's amulet tree; புத்திரசீவிமரம். (L.) |