Word |
English & Tamil Meaning |
---|---|
களம்விடு - தல் | kaḷam-viṭu- v. intr. <>களம்+. To sell in one lot the grain scattered on the threshing-floor; நெல்லடித்த களத்திலுள்ள சிந்து மணி சிதறுமணிகளைக் குத்தகை விடுதல். Loc. |
களமெழுத்து | kaḷam-eḻuttu n. <>id.+. Drawing the image of the Goddess and singing Her praises, in Bhagavatī temples; பகவதியம்மன் கோயிலில் அம்மன் உருவம் வரைந்து துதிக்கை. Nā. |
களர்ப்பாழ் | kaḷar-p-pāḻ n. <>களர்+. Brackish waste; உப்புப்படிந்த பாழ்நிலம். முதுநிலத்தரிசான களர்ப்பாழாய் (S. I. I. viii, 109). |
களர்மேடு | kaḷar-mēṭu n. <>id.+. High land unfit for cultivation; சாகுபடிக்கு உதவாத மேட்டுநிலம். Loc. |
களரி | kaḷari n. cf. gala. Throat; மிடறு. (யாழ். அக.) |
களவடி | kaḷa-v-aṭi n. <>களம்+. Sweepings of grain of a threshing-floor; களத்திற் சிதறிய தானியம். Loc. |
களவாரம் | kaḷa-vāram n. <>id.+. Grain given at the threshing-floor to the labourers; நெற்களத்தில் வேலைக்காரர்களுக்குக் கொடுக்குஞ் சுதந்திரம். (W.) |
களவாளன் | kaḷa-v-āḷaṉ n. <>களவு+ஆள்-. Thief; களவாளி. களவாளனாவதூஉங் காண்டும் (நீலகேசி, 338, உரை, மேற்.) |
களவுகொள்(ளு) - தல் | kaḷavu-koḷ- v. intr. <>id+. To steal; திருடுதல். களவு கொண்டாபரணம் பூண்டாற்போலே (ரஹஸ்ய. 13, 48). |
களவுபூசல் | kaḷavu-pūcal n. <>id.+. Irregular fight; guerilla warfare; நேர்முறையின்றி நடத்தும் போர். களவுபூசல் செய்வார்க்கு ஒதுங்க நிழலான பையலை (ஈடு, 10, 6, 8, பக். 205). |
களவேற்று - தல் | kaḷavēṟṟu- v. intr. <>id.+. To charge with theft; திருட்டுக் குற்றஞ் சாட்டுதல். என்பிள்ளையைக் களவேற்றாதே (திவ். பெரியாழ். 2, 1, 5, வ்யா. பக். 225). |
களாநிதி | kaḷā-niti n. (Mus.) A specific melody-type; ஒர் இராகம். (பரத. ராக. 55.) |
களி | kaḷi n. <>களி-. Cruelty; குரூரம். (யாழ். அக.) |
களி - த்தல் | kaḷi- 4 v. tr. To enjoy; அனுபவித்தல். பொற்கொடிமாதரைக் களிப்பதினும் (பாரதி. பாஞ்சாலி. 34). |
களிநெஞ்சன் | kaḷi-necaṉ n. <>களி+. (யாழ். அக.) 1. Proud man; செருக்கன். 2. Cruel man; |
களிநோய் | kaḷi-nōy n. <>id.+. Disease due to excessive drinking; கட்குடியாலுண்டாகும் நோய். கட்கொண்டாங்குக் களிநோய் கனற்ற (பெருங். உஞ்சைக். 35, 51). |
களிங்கம் | kaḷiṅkam n. prob. kaliṅga. (Mus.) A specific melody-type; ஒர் இராகம். (பரத. ராக. 533.) |
களிப்புச்சுண்ணாம்பு | kaḷippu-c-cuṇṇāmpu n. <>களிப்பு+. Lime mortar, ground and left for sometime before using; புளித்த சுண்ணாம்பு. |
களிமண்சுண்ணாம்பு | kaḷimaṇ-cuṇṇāmpu n. <>களிமண்+. A kind of mortar mixed with clay; களிமண் கலந்த சுண்ணாம்புவகை. (கட்டட. சாத்.) |
களியடைக்காய் | kaḷi-y-aṭaikkāy n. <>களி+. Arecanut boiled and dried, for chewing; களிப்பாக்கு. Loc. |
களியலடி | kaḷiyal-aṭi n. <>கழியல்+. A kind of kummi dance; கும்மியாட்டம். Nā. |
களிவாய்நிலம் | kaḷi-vāy-nilam n. <>களி+. Clayey soil; களிமண்பூமி. Loc. |
களிற்றுயிர் | kaḷiṟṟuyir n. <>களிறு+உயிர். See களிற்றுயிர்த்தூம்பு. களிற்றுயிர் தொடுமின் (புறநா. 152). . |
களிற்றுயிர்த்தூம்பு | kaḷiṟṟuyir-t-tūmpu n. <>களிற்றுயிர்+. A kind of blow-pipe; பெருவங்கியம். (புறநா. 152.) |
களிற்றுவட்டம் | kaḻiṟṟu-vaṭṭam n. <>பெருகளற்றுவட்டம். A hell; நரகவகை. (சூடா.) |
களுகொளெனல் | kaḷu-koḷ-eṉal n. Onom. expr. of being soft and slippery, as jelly; நொளுநொளுத்தற் குறிப்பு. (யாழ். அக.) |
களை 1 | kaḷai n. <>களை-. Cutwith hoe; களைக்கோலால் வெட்டிய வெட்டு. (அக. நி.) |
களை 2 | kaḷai n. prob. kalā. A linear measure of fingers breadth or viraṟkaṭai; 80 விரற் கடையளவு. (சிற்பரத். 16.) |
களைக்கொத்து | kaḷai-k-kottu n. <>கிளை+. Weeding hook; களைக்கொட்டு. Pond. |
களைகண் | kaḷai-kaṇ n. <>களை-+. Master lord; நிர்வாககன் (சம். அக. Ms.) |
களைசோபம் | kaḷai-cōpam n. <>id.+. Fatigue exhaustion; களைப்பு. களைசோபந்தான் தெளிந்து (கோவல. கதை. i, 48). |