Word |
English & Tamil Meaning |
---|---|
கற்றளிப்புறம் | kaṟṟaḷi-p-puṟam n. <>கற்றளி+. Endowment made to a temple; கோயிற்குவிட்ட இறையிலி நிலம். (M. E. R. 45 of 1928-29.) |
கறங்குமங்கல் | kaṟaṅku-maṅkal n. Arnotto; சாப்பிரா. (Nels.) |
கறட்டுழந்தான் | kaṟaṭṭuḻantāṉ n. A curl-mark in cattle; மாட்டுச்சுழிவகை. (பெரிய. மாட். 22.) |
கறடு | kaṟaṭu n. <>கறள்-. 1. cf. கரடு. that which is dwarfish; குள்ளமானது. கறட்டுப் பேய்தின்று களிக்க (மான்விடு. 117). 2. Gold; |
கறணை | kaṟaṇai n. A defect in cattle; மாட்டுக்குற்றவகை. (மாட்டுவா.) |
கறவு | kaṟavu n. <>கற-. Milch cow; கறவைப்பசு. கறவிடைப் பாலின் (தேவா. 585, 5). |
கறள்(ளு) - தல் | kaṟal- 2 v. intr. <>குறள். Tinn. 1. To be of stunted growth; வளர்ச்சியறுதல். 2. To burn low, as a wick for want of oil; |
கறிக்காய் | kaṟi-k-kāy n. <>கறி+. Pepper; மிளகு. (சங். அக.) |
கறுக்கட்டுதல் | kaṟu-k-kaṭṭu- v. tr. <>கறு+. To entertain deep-rooted malice; தீராப்பகைகொள்ளுதல். அவன் அதைச்செய்யக் கறுக்கட்டி விட்டான். Loc. |
கறுத்தகடப்பு | kaṟutta-kaṭappu n. <>கறு-+. A kind of paddy; நெல்வகை. (A.) |
கறுத்தகல்லுண்டை | kaṟutta-kal-l-uṇṭai n. <>id.+கல்+. A kind of paddy; நெல்வகை. (A.) |
கறுத்தகெளிறு | kaṟutta-keḷiṟu n. <>id.+. A kind of fish; மீன்வகை. சின்னத்தாளங் கறுத்தகெளிற்று மீன் (பறாளை. பள்ளு. 16). |
கறுத்தப்பூ | kaṟutta-p-pū n. <>id.+. Mussel-shell creeper; கருங்காக்கணம். (சங். அக.) |
கறுத்தமொச்சை | kaṟutta-moccai n. <>id.+. Hyacinth bean; மொச்சைவகை. (விவசா. 4.) |
கறுப்பரிசி | kaṟupparici n. prob கறுப்பு+அரிசி. A variety of coarse paddy; பெருநெல்வகை. Loc. |
கறுப்பி | kaṟuppi n. prob. id. Grey amber; மீனம்பர். (சங். அக.) |
கறுப்பிறுங்கு | kaṟuppiṟuṅku n. <>id.+ இறுங்கு. A kind of millet; சோளவகை. (விவசா. 3.) |
கறுப்பு | kaṟuppu n. <>கறு-. Minus mark against the defeated party, in cards, etc.; சீட்டாட்டத்தில் தோற்றவர் பெருங் குறியீடு. colloq. |
கறுப்புக்காலிநெல் | kaṟuppu-k-kāli-nel n. <>கறுப்பு+. A kind of paddy; நெல்வகை. (A.) |
கறுப்புச்சர்க்கரை | kaṟuppu-c-carkkarai n. <>id.+. Unrefined sugar; சுத்தஞ்செய்யாத சர்க்கரை. Pond. |
கறுப்புப்பிசானம் | kaṟuppu-p-picāṉam n. <>id.+. A kind of paddy; நெல்வகை. (A.) |
கறுப்பூனம் | kaṟuppūṉam n. <>id.+ ஊனம். A flaw in emeralds; பச்சைமணியிலுள்ள குற்றவகை. பச்சை கறுப்பூனமாய் (சரவண. பணவிடு. 206). |
கறுவாலன் | kaṟu-vālaṉ n. prob. கரு-மை+. A kind of paddy; நெல்வகை. (A.) |
கறுவியம் | kaṟuviyam n. <>கறுவு-. Rancour, implacable hatred; தீராப்பகை. (யாழ். அக.) |
கறைக்கணி - த்தல் | kaṟai-k-kaṇi- 11 v. tr. <>கறை+. To pray for redress of grievances; குறைவேண்டித் துதித்தல். எம்பெருமானென்று கறைக்கணித்தவர் கண்டவணக்கத்தாய் (தேவா. 612, 2). |
கறையுரல் | kaṟai-y-ural n. <>கறை+. Large mortar; பெரியவுரல். (சம். அக. Ms.) |
கன்கூட்டு | kaṉ-kūṭṭu n. prob. கன்+. Cave, cavern; கற்சுருங்கை. கன்கூட்டெய்தி கறந்தன னிருப்ப (பெருங். இலாவாண. 17, 17.) |
கன்மசாதாக்கியம் | kaṉma-cātākkiyam n. <>karma+. (šaiva.) Manifestation of šiva in iliṅkam, pīṭam, and pirapacam, இலிங்கமும் பீடமும் பிரபஞ்சமுமாகப் பிண்டீகரிக்குஞ் சிவரூபம் (தத்துவப். 191, உரை.) |
கன்மடி | kaṉ-maṭi n. <>கல்+. Hard udder of cows, yielding milk with difficulty; பசுவின் காய்மடி. (யாழ். அக.) |
கன்மத்தியாகம் | kaṉma-t-tiyākam n. <>karma+. Expiation of the evil done in former births; முன்செய்தவினை தீர்க்கை. (W.) |
கன்மநிட்டன் | kaṉma-niṭṭaṉ n. <>id.+. One who adheres to his ordained duties; கருமானுட்டானத்திற் பற்றுள்ளவன். கன்மநிட்டா சிறு பிள்ளாய் நீ (தாயு. உடல்பொய். 52). |
கன்மயாகம் | kaṉma-yākam n. <>id.+. Performing daily the rites appropriate to each varuṇācciramam, one of paca-yākam, q.v.; பஞ்சயாகத்துள் வருணாச்சிரமங்களுக்குரிய நித்தியக் கிரியைகளாகிய யாகம். (சி. சி. 8, 23, சிவாக்.) |