Word |
English & Tamil Meaning |
---|---|
காடுமேடு | kāṭu-mēṭu n. <>id.+. Rough, uneven waste land; மேடாயுள்ள தரிசு நிலம். Loc. |
காடுமேய் - தல் | kāṭu-mēy- v. intr. <>id.+. To wander uselessly, aimlessly; வீணாய்த் திரிதல். Loc. |
காடுவெட்டி | kāṭu-veṭṭi n. <>id.+. 1. A kind of small hoe; சிறு மண்வெட்டிவகை. (யாழ். அக). 2. A title of Pallava kings; |
காடுறைநிலை | kāṭuṟai-nilai n. <>id.+ உறை-+. The third stage of life, vāṉappirattam; வானப்பிரத்தம். (சுக்கிரநீதி, 219.) |
காடைக்கறுப்பன் | kāṭai-k-kaṟuppaṉ n. <>id.+. A kind of paddy; நெல்வகை. பொன்னாயகன் சொற் காடைக்கறுப்பன் (பறாளை. பள்ளு. 23). |
காடைக்கொம்பன் | kāṭai-k-kompaṉ n. <>காடை+. A kind of paddy; நெல்வகை. Tinn. |
காண்கொடு - த்தல் | kāṇ-koṭu- v. tr. <>காண்-+. To enable to see; பார்க்கும்படி செய்தல். கனவினுட் காண்கொடா கண்ணும் (புறத்திரட்டு, 1524). |
காண்டம் | kāṇṭam n.perh. காண்-. Mind, intellect; புத்தி. (அக. நி.) |
காண்டுமதம் | kāṇṭu-matam n. <>காண்டு+. Pain; வருத்தம். (யாழ். அக.) |
காணவட்டம் | kāṇa-vaṭṭam n. <>காணம்+. A small quantity of oil, daily given, as a perquisite by the oil-mongers to the village officers and servants; கிராமாதிகாரிகளுக்குங் கிராமச்சிப்பந்திகளுக்கும் நாள்தோறுஞ் செக்கார் கொடுக்கும் எண்ணெய் வரி. (W. G.) |
காணாதகண் | kāṇāta-kaṇ n. காண்-+ஆ neg.+. Mind's eye; ஞானக்கண். காணாதகண்ணுடன் (திருமந். 1610). |
காணாதன் | kāṇātaṉ n. <>kaṇāda. Adherent of the school of kaṇātam; கணாதமதத்தினன். கண்டகராய்நின்ற காணாதர் வாதங் கழற்றுவமே (தேசிகப். 5, 30). |
காணி - த்தல் | kāṇi- 11 v. tr. Caus. of காண்-. To show; காட்டுதல். Nāṉ. |
காணிக்கல் | kāṇi-k-kal n. <>காணி+. Boundary stone; எல்லைக்கல். காணிக்கல்லின்கீழே இரண்டு செப்புத்தவலை அகப்பட்டது (மதி. கள. i, 177). |
காணிக்கை | kāṇikkai n. <>காணி-. Debt, loan; கடன். காணிக்கையானேன் .... மாலையை வைத்து நான் காணிக்கை தீர்ந்த மறுமாதம் (விறலிவிடு. 296). |
காணிக்கைச்சாசனம் | kāṇikkai-c-cācaṉam n. <>காணிக்கை+. Document conferring a right to properties; உரிமைச்சாசனம். இம்முடிக் காணிக்கைச்சாசனந் தந்தனனே (பெருந்தொ. 1338). |
காணிப்பிடிபாடு | kāṇi-p-piṭipāṭu n. <>காணி+. Deed of lease for cultivation; நிலச் சாகுபடிப் பத்திரம். (M. E. R. 66 of 1916, p. 123.) |
காணிப்பேறு | kāṇi-p-pēṟu n. <>id.+. The dignity of a land-holder, a term used in conveyances of mirasi rights; பூஸ்திதி படைத்திருப்பதால் உண்டாகும் பெருமை. (W. G.) |
காணிமாறு - தல் | kāṇi-māṟu- v. intr. <>id.+. To dispossess a person of his land; உரிமைநிலத்தை இழக்கச்செய்தல். துரோகம்செய்தாரைக் காணிமாறின நிலமும் (S. I. I. V, 298). |
காணிமேரை | kāṇi-mērai n. <>id.+. A portion of produce claimed extra by mirasdars as their perquisite; மிராசுதார்கள் மாமூலை அனுசரித்து அதிகப்பட்டியாகப் பெற்றுக்கொள்ளும் மாசூலின் பகுதி. (W. G.) |
காணியாண்மை | kāṇi-y-āṇmai n. <>id.+. Hereditary right to land, etc.; காணியாட்சி. (pd. Insc. 745.) |
காணியாளன் | kāṇi-y-āḷaṉ n. perh. id.+. A kind of fish; ஒருவகை மீன். வயலினுதிக்குங்காணியாளனும் (பறாளை. பள்ளு. 16). |
காணிவெட்டி | kāṇi-veṭṭi n. <>id.+. A tax; வரிவகை. (S. I. I. V, 383.) |
காணிஸ்தானம் | kāṇi-stāṉam n. <>id.+. Unit place, in numbers; எண் வரிசையின் முதல் ஸ்தானம். அவர்கள் முந்துற காணிஸ்தானத்திலே வைத்து (திவ். திருவாய். 1, 2, 2, அரும்.). |
காணும்பொழுது | kāṇum-poḷutu n. <>காண்-+. Sunrise; சூரியோதயம். படுத்திருந்து காணும்பொழுதி லெழுந்து (தெய்வச். விறலி. 44). |
காத்தடி | kā-t-taṭi n. <>கா+. Pole for carrying burdens; காவடித்தண்டு. (W.) |
காத்தய்யன் | kāttayyaṉ n. <>கா-+அய்யன். A village deity; ஒரு கிராமதேவதை. பாரிய காத்தய்யா (பஞ்ச. திருமுக. 655). |
காத்தவராயன் | kāttava-rāyaṉ n. <>id.+. Watchman, guard; காவல்புரிபவன். (W. G.) |