Word |
English & Tamil Meaning |
---|---|
காரியசிவதத்துவம் | kāriya-civa-tattuvam n. <>id.+. A civa-tattuvam; சிவதத்துவங்களுளொன்று. (சி. சி. 1, 66, ஞானப்.) |
காரியம் | kāriyam n. perh. id. Cow dung; சாணம். (சைவ. சந். 61.) |
காரியவாசகம் | kāriya-vācakam n. <>id.+. (Gram.) A term meaning action in general; செய்தல் என்னுஞ் சொல்லால் விரிந்து காரியத்தைக் குறிக்குஞ் சொல். (தொல். சொல். 112, உரை.) |
காரியவிலக்கு | kāriya-vilakku n. <>காரியம்+. (Rhet.) A kind of vilakkaṇi; விலக்கணி வகை. (யாழ். அக.) |
காரியவேது | kāriya-v-ētu n. <>id.+. (Log.) Inference of a cause from an effect; காரியம் ஏதுவாய்நின்று காரணமுண்மையை விளக்குகை. (சி. சி. அளவை. 10, சிவஞா.) |
காரியானுமானம் | kāriyāṉumāṉam n. <>kāriya+. (Log.) Inference from effect to cause, a posteriori or inductive reasoning, opp. to kāraṇāṉumāṉam; காரியத்தினின்று காரணத்தை அனுமானிக்கை. (மணி. 27, 33-34, உரை.) |
காரியிண்டு | kāri-y-iṇṭu n. <>கார்+. Shining leaved soap-pod; வெள்ளிண்டு. (L.) |
காரிலவணம் | kār-ilavaṇam n. <>id.+. Bitnoben; பிடாலவணம். (யாழ். அக.) |
காரு | kāru n. <>kāru. (நாநார்த்த.) 1. Artisan; கம்மாளன். 2. Artisanship; |
காருகால் | kārukāl n. Pan for burning incense; இந்தளம். காருகாலிலே கருமுகைபூத்தாற் போலே (திவ். பெரியாழ். 3,6,7, வ்யா. பக். 686). |
காருகோலரிசி | kārukōlarici n. cf. கார்போகரிசி. Seed of scurfy pea; கார்போகரிசி. (பெரிய. 33.) |
காருசம் | kārucam n. <>kāruja. (நாநார்த்த.) 1. Wild Sesamum; காட்டேள். 2. Indian aconite; 3. Froth; 4. Painting; 5. Red ochre; |
காருண்யபிதிர்க்கள் | kāruṇya-pitirkkaḷ n. <>kāruṇya+. The manes whose names are not known and who are propitiated during the Mahālaya fortnight; மாளயபக்ஷத்திற் பூசிக்கப்படும் பெயரறியப்படாத பிதிரர் தொகுதி. Brāh. |
காரேலம் | kār-ēlam n. <>கார்+. A kind of cardamom; ஏலவகை. (சங். அக.) |
காரொளி | kār-oli n. <>id.+. Black stripe, as on cattle; கருந்தாரை. (யாழ். அக.) |
காரோத்துக்கிழங்கு | kārōttu-k-kiḻaṅku n. <>Fr. carotte. See காரட்டு. Pond. . |
கால்கழிகட்டில் | kāl-kaḻi-kaṭṭil n. <>கால்+கழி-+. Bier; பாடை. கால்கழிகட்டிலிற்கிடப்பி (புறநா. 286). |
கால்மேலுறை | kāl-mēl-uṟai n. <>id.+மேல்+. Gaiter, spat; கணுக்காலுறை. Pond. |
கால்வாதம் | kāl-vātam n. <>id.+. A disease; நோய்வகை. (கடம்ப. பு. இல¦லா. 129.) |
கால்வார் - த்தல் | kāl-vār- v. intr. <>id.+. To sow seeds of akatti in a betel garden in the month of āṭi; கொடிக்காலில் ஆடிமாதத்தில் அகத்திவிதையை ஊன்றுதல். Loc. |
கால்வாரி | kāl-vāri n. <>id.+. A defect in cattle; மாட்டுக்குற்ற வகை. (பெரிய. 26.) |
காலக்கடப்பு | kāla-k-kaṭappu n. <>காலம்+கட-. Course of time; காலத்தின் கதி. (தக்கயாகப். 447.) |
காலக்கேப்பை | kāla-k-kēppai n. <>id.+. A species of ragi; இராகிவகை. (விவசா. 3.) |
காலசங்கம் | kāla-caṅkam n. <>id.+. Dawn, early morning; வைகறை. (யாழ். அக.) |
காலத்தேவை | kāla-t-tēvai n. <>id.+. An ancient tax; பழைய வரிவகை. (Pudu. Insc. 399.) |
காலதோஷம் | kāla-tōṣam n. <>id.+. Evil times hard times; கெட்டகாலம். Loc. |
காலப்பாடு | kāla-p-pāṭu n. <>id.+. Condition of the times; காலநிலைமை. கள்ளமில் காலப்பாடுங் கருமமுங் கருதேனாகில் (கம்பரா. இராவணன்வதை. 7). |
காலப்பொல்லாங்கு | kāka-p-pollāṅku n. <>id.+. See காலதோஷம். காலப்பொல்லாங்கைப் பரிகரித்துக்கொண்டு (S. I. I. vii, 496). . |
காலப்போக்கு | kāla-p-pōkku n. <>id.+. See காலப்பாடு. (மீனாட். சரித் ii, 160.) . |
காலபுருடன் | kāla-puruṭaṉ n. <>id.+. Time-server; சமயத்திற்கேற்ப ஒழுகுபவன். இது காலபுருடர் நட்புத் தீதென்றது (குறள், 819, மணக்.). |
காலபைரவர் | kāla-pairavar n. <>kālabhairava. A manifestation of šiva; சிவமூர்த்தங்களுள் ஒன்று. (காஞ்சிப். சிவபுண். 34.) |