Word |
English & Tamil Meaning |
---|---|
காவிப்பட்டை | kāvi-p-paṭṭai n. <>காவி+. Stripes of red wash, alternating with white, made on festive occasions on walls of temples, etc.; சுவர்களிலிடுஞ் செம்மண்பட்டை. Tj. |
காவிப்பாய் | kāvi-p-pāy n. <>காவி+. Top-sail; பாய்மரத்தின் அடிக்கட்டைக்கு அடுத்த பாகத்திற் கட்டப்படும் பாய். (M. Navi. 83.) |
காவிமரம் | kāvi-maram n. <>id.+. Topmast; பாய்மரத்தின் அடிக்கட்டைக்கு மேலுள்ள பாகம். (M. Navi. 81.) |
காவிமாலை | kāvi-mālai n. <>காவி+. Garland sent by a lover to his beloved, soliciting her favour; கல்வியை விரும்பிய தலைவன் தலைவிக்கு அனுப்பும் மாலை. (யாழ். அக.) |
காவில்லி | kāvilli n. See காவலம். (L.) . |
கவெட்டு | kā-veṭṭu- n. <>காய்+. Unripe fruit; நன்றாய்ப் பழுக்காத பழம். Colloq. |
காழ் | kāḻ n. Piece of wood; மரத்துண்டு. தேய்வை வெண்காழ் (புறநா. 369, 19). |
காழகம் 1 | kāḻakam n. 1. cf. kāla. 1. Blue cloth; நீலவாடை. கரையிடைக் கிழிந்தநின் காழகம் (கலித். 73). 2. Boiled rice; |
காழகம் 2 | kāḻakam n. cf. T. gādidē Ass; கழுதை. (அக. நி.) |
காளக்கவி | kāḷa-k-kavi n. <>காளம்+. Poet whose presence is proclaimed by blowing a kāḷam, as a mark of honour; ஊதுகாளத்தை விருதாகப் பெற்ற புலவன். (தக்கயாகப். பக். 277.) |
காளகண்டம் | kāḷa-kaṇṭam n. <>kāḷakanṭha. (நாநார்த்த.) 1. Peacock; மயில். 2. Wagtail; 3. Sparrow; 4. East Indian kino tree; |
காளகந்தரி | kāla-kantari n. <>kāḷa+kandharā. Pārvatī; பார்வதி. (W.) |
காளகர்ணிமுத்திரை | kāḷakarṇi-muttirai n. (šaiva.) A hand-pose in worship; முத்திரைவகை. (சைவா. வி. 19.) |
காளகூடயோகம் | kāḷakūṭa-yōkam n. <>kālakūṭa+. (Astrol.) An inauspicious yōkam; அசுபயோகங்களு ளொன்று. (சோதிடகிரக. 134.) |
காளம் | kāḷam n. <>kāla. Viṣṇu's discus; சக்கராயுதம். (ரஹஸ்ய. 65.) |
காளமேடிகை | kāḷa-meṭikai n. <>kālameṣikā. (நாநார்த்த) 1. Manjeet; மஞ்சிட்டை. 2. A kind of Indian jalap; |
காளாம்பகி | kāḷāmpaki n. A winged serpent; பறவைப்பாம்பு. (நாமதீப.) |
காளான்சக்களத்தி | kāḷāṉ-cakkaḷatti n. <>காளான்+. Muṟiveṭṭiyāṉ, a kind of sea fungus; முறிவெட்டியான்.(W.) |
காளிகம் | kāḷikam n. perh. kāla. Cloud; மேகம். (யாழ். அக.) |
காளிங்கம் | kāḷiṅkam n. A kind of jewel; ஆபரணவகை. தெள்ளொளிய காளிங்கஞ் சோதி கிடப்பத் தொடுத்து (பதினொ. திருக்கை. உலா,121). |
காளிந்தம் | kāḷintam n. cf. காளிங்கன். Snake; பாம்பு. (அக. நி.) |
காற்கயிறு | kāṟ-kayiṟu n. Fetters; கால்விலங்கு. Pond. |
காற்சவுரம் | kāṟ-cavuram n. <>id.+. Shaving the face only; முகச்சவரம். (யாழ். அக.) |
காற்படை | kāṟ-paṭai n. <>id.+. The portion of the basement above the ground; கட்டட அஸ்திவாரத்தில் தரைக்கு மேலுள்ள பகுதி. (M.E.R.127 of 1926.) |
காற்றடக்கி | kāṟṟaṭakki n. <>காற்று+. (யாழ். அக.) 1. Bellows; துருத்தி. 2. Water-bubble; |
காற்றண்டம் | kāṟṟaṇṭam n. <>id.+. A kind of swelling of the scrotum, dist. fr. nīr-aṇṭam; வாதத்தால் வீங்கிய அண்டநோய்வகை. Loc. |
காற்றாடி | kāṟṟāṭi n. <>id.+. Fan; விசிறி. (ஞானபூசா.25, உரை.) |
காற்றுக்கறுப்பு | kāṟṟu-k-kaṟuppu n. <>id.+. Evil spirits; பேய்பிசாசுகள். Loc. |
காற்றுவிசேஷமாய் | kāṟṟu-vicēṣam-āy adv. <>id.+. By way of rumour; பராபரியாய். நாம் காற்றுவிசேஷமாய்க் கேள்விப்பட்டிருக்கிறோம் (தமிழறி. 37.) |
காறுகாறெனல் | kāṟu-kaṟeṉal n. Expr. of seething anger; சீறுதற்குறிப்பு. இவ்வூரிலுள்ளார் என்னோடு காறுகாறென்று (திவ். பெரியாழ். 3, 1, 7 வ்யா. பக். 521). |
கான் 1 | kāṉ n. <>gāna. Music; இசை. கான்பாடல் தங்குமறையோசை (சொக்க. உலா,9). |
கான் 2 | kāṉ n. <>Pkt. kān. <>karṇa. (தக்கயாகப். 448 உரை.) 1. Ear; செவி. 2. Fame, |
கானககீதம் | kāṉaka-kītam n. prob. கானகம்+. Black beetle; கருவண்டு. (யாழ். அக.) |
கானநாடி | kāṉa-nāṭi n. <>கானம்+நாடு. Kāḷī; காளி. கானநாடி திருமுன்றில் (தக்கயாகப். 80). |