Word |
English & Tamil Meaning |
---|---|
காலமீரம் | kālamīram n. Crystal glass; பளிங்கு. (யாழ். அக.) |
காலமுன் | kāla-muṉ n. <>காலம்+. Priority in point of time; காலத்தால் முற்பட்டது. கால முன்னாகச் சொல்லார், இடமுன்னாகச் சொல்லுவர் (தொல். சொல். 279, இளம்பூ.). |
காலற்றநாள் | kāl-aṟṟa-nāḷ n. <>கால்+அறு-+.(Astrol.) The three naksatras, kārttikai, uttiram, uttirāṭam; கார்த்திகை உத்திரம் உத்திராடம் என்னும் மூன்று நட்சத்திரங்கள். (சோதிட கிரக. 40.) |
காலறு - தல் | kāl-aṟu- v. intr. <>id.+. To become extinct, as a family; சந்ததியற்றுப் போதல். (திருக்களிற்றுப். 97, உரை.) |
காலறுவான் | kāl-aṟuvāṉ n. <>id.+. A term of abuse, meaning 'one whose line will become extinct'; 'சந்ததியற்றுப்போவான்' என்று பொருள்படும் ஒரு வகைச்சொல். எள்ளளவுங் கைக் கூலி தான்வாங்குங் காலறுவான் (தனிப்பா. i, 108, 47). |
காலா | kālā n. <>Arab. khālā. Mother's sister; தாயின் சகோதரி. Muham. |
காலாங்கன் | kālāṅkaṉ n. Mūrtta-pāṣāṇam, a prepared arsenic; மூர்த்தபாஷாணம். (யாழ். அக.) |
காலாவதிகபத்திரம் | kālāvatika-pattiram n. <>kālāvadhika+. Document fixing a time-limit for the performance of an act; ஒன்றைச் செய்தற்குக் காலங்குறிப்பிட்டு எழுதித்கொடுக்கும் பத்திரம். (சுக்கிரநீதி, 93.) |
காலிகவிப்புருதி | kālika-vippuruti n. <>kālika+. Chronic abscess; நாட்பட்ட புண்கட்டி. (இங். வை. 298.) |
காலியைபாசம் | kāl-iyai-pācam n. prob. கால்+இயை-+. Subtle body; சூக்கும சரீரம். (சம். அக. Ms.) |
காலிலி | kāl-ili n. <>கால்+இல் neg. Fish; மீன். (யாழ். அக.) |
கால¦கா | kālīkā n. Smoky colour of the teeth of horses, when they are about seven years old; சுமார் ஏழு வயதாகும்போது குதிரைப் பற்களி லேற்படும் புகைநிறம். (அசுவசா. 5.) |
காலுக்கழுத்து | kālu-k-kaḻuttu n. prob. id+. Ankel; கணைக்கால். திருக்காலுக் கழுத்தின் காறை உ-ம் (S. I. I. iv, 81.) |
காலுக்குக்காலாய் | kālukku-k-kāl-āy adv. <>id.+. Hereditarily; பரம்பரையாய். Loc. |
காலேயகம் | kālēyakam n. <>kālēyaka. A kind of turmeric; அரக்குமஞ்சள். (நாநார்த்த.) |
காலை | kālai n. A kind of fish; மீன்வகை. உறுகிழாத்தி காலைபாலை (பறாளை. பள்ளு. 75). |
காலோடு | kāl-ōṭu n. <>கால்+. Gutter tiles; கூடல்வாயோடு. Loc. |
காவட்டு | kāvaṭṭu n. <>காவு-. See கா. Nā. . |
காவணம் | kāvaṇam n. Open hall; மண்டபம்.தேவாசிரியனெனுந் திருக்காவணம் (பெரியபு. திருக்கூட்ட. 2). |
காவர் | kāvar n. perh. E. gaff-spar Martingale, dolphin-striker, short gaff-spar. fixed perpendicularly under the cap of the bow-sprit; சப்தறாவின் நுனிக்குக்கீழிருக்கும் உத்திரம். (M. Navi. 82.) |
காவல் | kāval n. (அக. நி.) 1. A kind of drum; தம்பட்டம். 2. Water; |
காவல்புரப்பு | kāval-purappu n. <>காவல்+ பொறுப்பு An annual tax paid by a watchman appointed in the place of another dismissed for an offence against the government; அரசாங்கத்திற்குச் செய்த குற்றத்திற்காக விலக்கப்பட்ட ஒரு காவற்காரனுக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட காவற்காரன் ஆண்டுதோறுஞ் செலுத்திவரும் வரி. (R. T.) |
காவல்வழக்கு | kāval-vaḻakku n. <>id.+. Customary fees paid to watchman; காவற்காரனுக்குக் கொடுக்கும் வரி. (R. T.) |
காவலம் | kāvalam n. Bloody drop ordure tree; கழுதைவிடை. (L.) |
காவற்படை | kāvaṟ-paṭai n. <>காவல்+. Body-guard; மெய்காவற் சேனை. (யாழ். அக.) |
காவற்பேறு | kāvaṟ-pēṟu n. <>id.+. Cess collected for paying the village-watchman; ஊர்க்காவலுக்காகக் கொடுக்கும் வரி. (M. E. R. 262 of 1925.) |
காவற்றலம் | kāvaṟṟalam n. <>id.+தலம். Prison, gaol; சிறைச்சாலை. Mod. |
காவி | kāvi n. 1. Buoy; காவியாக்கட்டை. Pond. 2. Willow-leaved justicia; |
காவிந்து | kāvintu n. <>Persn. khawand. Master; employer; எசமான். அதுகளைக் காவிந்தவர்கள் பார்வையிடுகிற இங்கில¦ஷ் புஸ்தகத்திலும் எழுதுவித்தேன் (P. T. L. 185). |