Word |
English & Tamil Meaning |
---|---|
குஞ்சிக்கம்பு | kuci-k-kampu n. <>குஞ்சி+. A pendant from the waist-cord, worn by male children; தம்பித் தோழன். Nā. |
குஞ்சித்தலைப்பா | kucu-t-talaippā n. <>குஞ்சு+. A kind of turban; தலைப்பாவகை. (யாழ்.அக.) |
குட்டப்புழுதியாக்கு - தல். | kuṭṭa-p-puḻuti-y- ākku- v. intr. <>குட்டம்+புழுதி+. To be tumultuously playful; கும்மாள மடித்தல். Tinn. |
குட்டபஸ்கி | kuṭṭa-paski n. <>குட்டை+. Man of short stature, குள்ளன். Loc. |
குட்டன் | kuṭṭaṉ n. <>குட்டம். Young of an animal; விலங்கின் குட்டி. நாயின்வெங்கட் சிறு குட்டனை (கம்பரா. நகர்நீ. 117). |
குட்டி | kuṭṭi n. Plantain shoot of sucker near the main tree; வாழைக்கன்று. (யாழ். அக.) |
குட்டியம் | kuṭṭiyam n. <>kudya. 1. Wall; சுவர். (யாழ். அக.) 2. Raised floor or platform; |
குட்டிவேல் | kuṭṭi-vēl n. <> குட்டி+. A kind of acacia; வேலமரவகை. Loc. |
குட்டுவம் | kuṭṭuvam n. A large brass vessel, cauldron; கொப்பரை. Loc. |
குட்டை 1 | kuṭṭai n. cf. கூடை. A kind of basket; கூடைவகை. பெரிய பிரப்பங்குட்டையும் (குருகூர்ப். 25) |
குட்டை 2 | kuṭṭai n. <>T. gudda. Loc. 1. Turban; தலைப்பாகை. 2. Cloth; |
குட்டைக்குறுவை | kuṭṭai-k-kuṟuvai n. <>குட்டை+. A kind of paddy; நெல்வகை. (A.) |
குட்டையநெல் | kuṭṭaiya-nel n. perh. id.+. A kind of paddy; நெல்வகை. (A.) |
குடக்குழி | kuṭa-k-kuḻi n. perh. குட+. Water pond; நீர்க்குண்டு. (யாழ். அக.) |
குடங்கரை | kuṭaṅ-karai n. <>குடம்+. Place for keeping water-pots; தண்ணீர்க்குடம் வைக்கும் இடம். (யாழ் அக.) |
குடத்தி | kuṭatti n. Wolf; ஓநாய். Pond. |
குடத்திநாய் | kuṭatti-nāy n.<>குடத்தி+. A kind of dog; நாய்வகை. Pond. |
குடந்தம் | kuṭantam n. prob. குடம். Roundness; திரட்சி. (அக. நி.) |
குடநாழி | kuṭa-nāḻi n. prob. id.+. A tax of toddy; கள்வரி. (T.A.S.ii,67.) |
குடப்படை | kuṭa-p-paṭai n. <>id.+. A horizontal section above the basement of the inner shrine of a temple; உட்கோவிலின் அடி மட்டத்திலுள்ள கட்டடப் பகுதி. (M.E.R. 143 of 1925.) |
குடப்பாணா | kuṭa-p-pāṇā n. <>id.+. A king of pot; குடவகை. (யாழ்.அக.) |
குடம்பை | kuṭampai n. perh. குட. 1. Big tank; ஏரி. (அக.நி.) 2. cf.குரம்பை. Body; |
குடரி | kuṭari n. cf. குடாரி. Elephant hook; யானைத் தோட்டி. (யாழ். அக.) |
குடலைக்காளை | kuṭalai-k-kāḷai n. perh. குடலை+. Young bullock; இளங்காளை. (W.) |
குடலையிட்டலி | kuṭalai-y-iṭṭali n. <>id.+. A kind of rice-cake baked in steam; இட்டலிவகை. Loc. |
குடலையேற்றம் | kuṭalai-y-ēṟṟam n. <>id.+. A kind of piccottah; ஏற்றவகை. (W.) |
குடவு | kuṭavu n. <> குடை. <> Kuṭai-k-kūttu A dance of God Kumāra; குமரனாடிய குடைக் கூத்து. (யாழ். அக.) |
குடாபாகம் | kuṭā-pākam n. perh. guda+pāka. (Rhet.) A style of literary composition; செய்யுட்பாகவகை. (யாழ். அக.) |
குடிக்காணி | kuṭi-k-kāṇi n. <>குடி + காணி. Permanent tenancy as of temple lands; சாசுவத உழவுப்பாத்தியம். Tj. |
குடிக்காணியாட்சி | kuṭikkāṇi-y-āṭci n. <>குடிக்காணி+. Inheritance, ancestral property; பிதிரார்ச்சித சொத்து. (P. T. L.) |
குடிசிகை | kuṭi-cikai n. <>குடி+. [M. kuṭissika.] Arrears of land revenue of rent; தீர்வைநிலுவை. Loc. |
குடிசில் | kuṭicil n. <>id. Hut; குடிசை. மனைவியையிலாக் குடிசில் (நூற்றெட்டுத். திருப்புகழ். 98). |
குடிசீலை | kuṭi-cīlai n. perh. கொடி+. Loin cloth; கோவணம். Loc. |
குடிஞை | kuṭiai n. 1. Bastion; கோட்டையின் ஏவறை. நெடுமதிலுங் குடிஞைகளும் (நீலகேசி,268). 2. Town,village; |