Word |
English & Tamil Meaning |
---|---|
கும்பகாரி | kumpakāri n. <>kumbha-kārī. (யாழ். அக.) 1. Potter woman; குயத்தி. 2. A kind of collyrium; 3. Cempāṣāṇam, a mineral poison; |
கும்பதாசி | kumpatāci n. <>kumbha-dāsī. (யாழ். அக.) 1. Procuress; சங்கதூதி. 2. Prostitute; |
கும்பப்பூ | kumpa-p-pū n. <>கும்பம்+. Crop harvested in the month of Māci, dist. fr. kaṉṉi-p-pū; மாசி மாதத்து அறுவடையாகும் பிசான போகம் .Nā. |
கும்பம் | kumpam n. <>kumbha. Hamlet, one-fourth the size of a kirāmam; ஒரு கிராமத்தின் காற்பங்கு அளவுள்ள ஊர். (சுக்கிரநீதி, 27.) |
கும்பம்பாலை | kumpam-pālai n. <>கும்பம்+. Pitcher-shaped finial as of a tower; கோபுர முதலியவற்றின் மேல் வைக்கும் அலங்காரகலசம். Loc. |
கும்பமுத்திரை | kumpa-muttirai n. <>id.+. A hand-pose, in worship; முத்திரை வகை. (சைவாநுட். வி. 12.) |
கும்பரேகை | kumpa-rēkai n. <>id.+. (Palmistry.) A line in palm of hand; கைரேகை வகை. (திருவாரூர். குற. Ms.) |
கும்பன் | kumpaṉ n.<>kumbha. (யாழ். அக.) 1. A Rākṣasa; ஓர் அரக்கன். 2. Libertine; |
கும்பாசம் | kumpācam n. Coral reef; பவளக்கொடி. Loc. |
கும்பாசாரம் | kumpācāram n. See கும்பாரம்1. (W.) . |
கும்பாரம் 1 | kumpāram n. prob. கும்பு. Heap, pile; அம்பாரம். (W.) |
கும்பாரம் 2 | kumpāram n. cf. கும்பம். Pot; கும்பம். (யாழ். அக.) |
கும்பி 1 | kumpi n. <>கும்பம். The zodiacal sign Aquarius; கும்பராசி. (யாழ். அக.) |
கும்பி 2 | kumpi n. <>kumbhī. Earthern vessel; மட்பாண்டம். (யாழ். அக.) |
கும்பி 3 | kumpi n. perh. கும்பு-. Fire; தீ. (யாழ். அக.) |
கும்பிட்டுக்கட்டு - தல் | kumpiṭṭu-k-kaṭṭu- v. tr. <>கும்பு+இடு-+. To enfold in a close embrace; தழுவிக்கொள்ளுதல். (யாழ். அக.) |
கும்பியழித்தல் | kumpi-y-aḻittal n. prob. கும்பி+. A game; ஒரு விளையாட்டு. (யாழ். அக.) |
கும்பிலன் | kumpilaṉ n. <>kumbhila. (யாழ். அக.) 1. House-breaker, thief; திருடன். 2. Wife's brother, brother-in-law; |
கும்பீநசம் | kumpīnacam n. <>kumbhīnasa. A kind of large serpent; பெரும்பாம்பு வகை. (யாழ். அக.) |
கும்பீலம் | kumpīlam n. <>kumbhīla. Crocodile; முதலை. (யாழ். அக.) |
கும்பை 1 | kumpai n. <>கும்பம். Pot; குடம். (யாழ். அக.) |
கும்பை 2 | kumpai n. <>kumbhā. Prostitute; வேசி. (யாழ். அக.) |
கும்பை 3 | kumpai n. <>kumbā. Enclosure round a sacrificial pit; ஓமகுண்டத்தின் வேதிகை. (யாழ். அக.) |
கும்பை 4 | kumpai n. A kind of plantain; வாழைவகை. (யாழ். அக.) |
கும்மாளி | kummāḷi n. <>கும்மாளம். Romp; jumping about; கும்மாளம். (யாழ். அக.) |
கும்மு - தல் | kummu- 5 v. intr. To happen, occur; கூடுதல். பண்டுநினைத்த பருவங்கும்முதடி (கனம் கிருஷ்ணையர், கீர்த். 4). |
குமட்டிக்கீரை | kumaṭṭi-k-kīrai n. cf. கொம்மட்டிக்கீரை. A kind of greens, celosia nodiflora; கீரைவகை. (W.) |
குமரவலி | kumaravali n. cf. குமரகண்டம். A kind of epileptic fit; காக்கைவலிப்பு நோய் வகை. (திருப்பு. 176, புதுப்.) |
குமாரகாலம் | kumāra-kālam n. <>kumāra+. The period of youth; கௌமாரபருவம். குமாரகால நிறைவுற வுய்த்து (பெருங். நரவாண. 8, 44). |
குமாரவிருத்தியை | kumāra-viruttiyai n. <>kumāra-bhrtyā. cf. குலவிருத்தியை. Midwife; child's nurse; மருத்துவச்சி. (யாழ். அக.) |
குமிட்டில் | kumiṭṭil n. cf. குமட்டிக்கீரை. A kind of greens; கீரைவகை. (யாழ். அக.) |
குமிட்டு | kumiṭṭu n. <>குமிழ். Heap; குவியல். (யாழ். அக.) |
குமிடு | kumiṭu n. prob. குடுமி. cf. குவடு. Hill; குன்று. காடுஞ் குமிடு மிடமாக (பாடு போற்றி.) |
குமிழ் - தல் | kumiḻ- 4 v. intr. To be embossed or worked in relief; சித்திரவேலை செதுக்கப்படுதல். மரத்திற் குமிழ்ந்த யானை. |
குமிழி | kumiḻi n. <>குமிழ். See கீழ்க்குமிழி. (S. I. I. iii, 411.) . |