Word |
English & Tamil Meaning |
---|---|
குமிளா | kumiḷā n. A kind of fish; மீன் வகை. கீளி குமிளா மாசினி (பறாளை. பள்ளு. 74). |
குமிளி | kumiḷi n. prob. குமிழ்-. Bottle; குப்பி. Pond. |
குமுதம் | kumutam n. <>kumuda. Camphor; கர்ப்பூரம். (யாழ். அக.) |
குமுதிசை | kumuticai n. A fragrant tree; வாசனைமரவகை. (யாழ். அக.) |
குமுதை | kumutai n. 1. Coomb teak, Gmelina arborea; குமிழ்மரவகை. Pond. 2. A shrub; |
குமை | kumai n. <>kṣumā. Smallest weight used in weighing precious stones other than corals and pearls, being the weight of a linseed; பவளம் முத்து நீங்கலாக மற்ற இரத்தினங்களை நிறுப்பதற்குதவுஞ் சிறு எடை. (சுக்கிரநீதி, 188.) |
குய்யதீபகம் | kuyya-tīpakam n. <>guhyadīpaka. Fire-fly; மின்மினி. (யாழ். அக.) |
குய்யபாஷிதம் | kuyya-pāṣitam n. <>guhya-bhāṣita. Secret speech; இரகசியச் சொல். (யாழ். அக.) |
குயிற்கண்பப்பளி | kuyiṟ-kaṇ-pappaḷi n. <>குயில்+கண்+. A kind of saree; சேலைவகை. Loc. |
குயிற்கண்மணி | kuyiṟ-kaṇ-maṇi n. <>id.+id.+. A kind of topaz; சௌகந்திகப் பதும ராகம். (யாழ். அக.) |
குரங்கம் | kuraṅkam n. prob. குறங்கு. Darjeeling red cedar; மலைக்கொன்றை. (L.) |
குரங்கன் | kuraṅkaṉ n. prob. குரங்கம். Moon; சந்திரன். (அக.நி.) |
குரங்கு - தல் | kuraṅku- 5 v. tr. To bend; வளைத்தல். தென்னிலங்கை சாரங்கமே குரங்காச் சாதித்தான் (மான்விடு. 7). |
குரங்குச்சத்துவம் | kuraṅku-c-cattuvam n. <>குரங்கு+. (Erot.) The natural disposition of a woman, classed under the monkey type, one of pattucattuvam, q. v.; ஸ்திரீகளின் பத்து சத்துவத்து ளொன்று. (கொக்கோ. 4, 27.) |
குரங்குச்சம்பந்தம் | kuraṅku-c-campantam n. <>id.+. (Nyāya.) The principle of monkey's grasp; மர்க்கட கிசோர நியாயம். (W.) |
குரடன் | kuraṭan n.<>kuraṭa. Cobbler; சக்கிலியன். (யாழ். அக.) |
குரண்டி | kuraṇṭi n. A shrub; செடிவகை. Nā. |
குரணம் | kuraṇam n. <>guraṇa. Effort, perseverance; முயற்சி. (யாழ். அக.) |
குரத்தி | kuratti n. Fem. of குரவன். Jaina female ascetic; சைன தவப்பெண். ஓர் குரத்தி யோட (பெரியபு. திருஞான. 638). |
குரப்புவெட்டி | kurappuveṭṭi n. A tax; வரிவகை. (S. I. I. viii, 322.) |
குரம்பை | kurampai n. (Mus.) A melody-type; இசைவகை. (அக. நி.) |
குரமுளை | kura-muḷai n. prob. அங்குரம்+. Shoot, sprout; வித்தினின்றுதோன்றும் முளை. Loc. |
குரரி | kurari n. prob. kurara. A kind of bird; பறவைவகை. வானிற் சிறுகுரரி நின்றொ துங்கி (விறலிவிடு. 5.) |
குரல் | kural n. 1. Dense mass; கற்றை. குரற் கூந்தல் (கலித். 72, 20). 2. String of a lute; 3. Letter; |
குரவு | kuravu n. Fragrance; நறுமணம். (யாழ். அக.) |
குரவுநிறமணி | kuravu-niṟa-maṇi n. <>குரவு+நிறம். A kind of topaz; கோவரங்கப் பதுமராகம். (யாழ். அக.) |
குரு - த்தல் | kuru- 11 v. intr. To glisten; நிறம்பெறுதல். குருக்குங் கலாமதிக் கூற்றம். (சங்கர. அந். 32). |
குருக்கத்தி | kurukkatti n. White fig; கல்லால். (M. M.) |
குருக்கு | kurukku n. Cowthorn; நெருஞ்சி. Pond. |
குருகன்வெட்டு | kurukaṉ-veṭṭu n. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 135. ) |
குருகிலை | kurukilai n. A tree; ஓர் மரம். பெய்ய முழங்கத் தளிர்க்குங் குருகிலை (நான்மணி. 37). |
குருட்டுமாசு | kuruṭṭu-mācu n. <>குருடு+. Blinding mist; ஓடிமறைக்கும் பனிமேகம். Kōdai. |
குருட்டுவளம் | kuruṭṭu-vaḷam n. <>id.+. Inner side of a cloth or garment, opp. to pārvai-vaḷam; புடைவையின் உட்புறம். (W.) |
குருதுரியம் | kuru-turiyam n. <>guru+.turīya. (Phil.) The highest state attainable in the liberation of the soul; முத்தாத்துமாவின் சுத்த நிலை. (W.) |
குருந்தை | kuruntai n. Broad-leaved jasmine; நாகமல்லி. Loc. |