Word |
English & Tamil Meaning |
---|---|
குழம்புபதம் | kuḻampu-patam n. <>id.+. A stage in the preparation of medicinal oil, one of marunteṇṇey-p-patam, q. v.; மருந்தெண்ணெய்ப்பதங்களு ளொன்று. Loc. |
குழல் | kuḻal n. Gun; துப்பாக்கி. கொட்ட மிடும் புலியைக் குண்டுதுன்றுங் குழலால் (கூளப்ப. 90). |
குழவி | kuḻavi n. Greatness; பெருமை. (யாழ். அக.) |
குழாய்ப்பிட்டு | kuḻāy-p-piṭṭu n. <>குழாய்+. A kind of soft pastry; குழற்பிட்டு. (W.) |
குழிச்சிலந்தி | kuḻi-c-cilanti n. <>குழி+. A species of spider; சிலந்திவகை. (அபி. சிந்.) |
குழித்தட்டு | kuḻi-t-taṭṭu n. <>id.+. A kind of plate or salver; தாம்பாளவகை. (S. I. I. iii, 295.) |
குழித்தளிகை | kuḻi-t-taḷikai n. <>id.+. Boiled rice and relish, offered to gods in temples; கோவிலிற் கறி பாயசம் முதலியவற்றோடு நிவேதனஞ் செய்யும் அன்னம். Loc. |
குழிதாழி | kuḻi-tāḻi n. <>id.+. Flower-pot; பூத்தொட்டி. Cheṭṭi. |
குழிநரி | kuṟi-nari n. <>id.+. See குழிப்பன்றி. Loc. . |
குழிப்பணியாரம் | kuḻi-p-paṇiyāram n. <>id.+. A kind of cake; பணியாரவகை. Tj. |
குழிப்பன்றி | kuḻi-p-paṉṟi n. <>id.+. Ant-lion; பூச்சிவகை. Loc. |
குழிப்பூப்புடம் | kuḻi-p-pū-p-puṭam n. <>id.+பூ-+. Calcining medicine by putting it into a closed pit or hole for some time, one of mu-p-pū-p-puṭam, q. v.; முப்பூப்புடங்களுள் மருந்தைக் குழியில்வைத்து எடுக்கும் புடவகை. |
குழிபறி - தல் | kuḻi-paṟi- v. intr. <>id.+. To become hollow; to be full of pits or ruts; பள்ளம் விழுதல். (யாழ். அக.) |
குழிமாறு - தல் | kuḻi-māṟu- v. tr. <>id.+. To level up; குழியை நிரப்பிப் பரப்பாக்குதல். (யாழ். அக.) |
குழிமீண்டான் | kuḻi-mīṇṭāṉ n. <>குழி+மீள்-. Child which with a view to avert its premature death is treated as dead, placed in a grave and then taken back; குழியில் உயிர்போனதாகப் பாவித்து வைத்துப் பின்னர் எடுத்த பிள்ளை. Nāṉ. |
குழியுரல் | kuḻi-y-ural n. <>id.+. A kind of mortar; உரல்வகை. Loc. |
குழிவரியேற்று - தல் | kuḻi-vari-y-ēṟṟu- v. intr. <>id.+வரி+. To levy land tax; அரசிறையிடுதல். (S. I. I. iii, 12.) |
குழிவாழை | kuḻi-vāḻai n. <>id.+. A species of plantain; வாழைவகை. Loc. |
குழு | kuḻu n. <>id.+. கொழு-. Intractability; அடங்காமை. (யாழ். அக.) |
குழுப்படை | kuḻu-p-paṭai n. <>குழு+. Forces under the command of a general appointed by the king; அரசனால் நியமிக்கப்பட்ட தலைவனையுடைய படை. (சுக்கிரநீதி, 303.) |
குழுவன் | kuḻuvaṉ n. <>குழு. cf. குளுவன். Intractable person; சொற்கேளாதவன். (யாழ். அக.) |
குழைக்கடி - த்தல் | kuḻai-k-kaṭi- v. tr. <>குழை+. To effect a cure by magic, passing a handful of neem twigs over the patient's body; குழையடித்தல். (யாழ். அக.) |
குழைவு | kuḻaivu n. <>குழை-. (யாழ். அக.) 1. Embrace; அணைவு. 2. Mixture, combination; 3. Bend; |
குழைவுசீனி | kuḻaivu-cīṉi n. <>குழைவு+. Refined, white sugar; வெள்ளைச்சர்க்கரை. Loc. |
குழைவுதிரணை | kuḻaivu-tiraṇai n. <>id.+. Cordon-work; வளைவாகவுள்ள திரணை. (கட்டட. நாமா.) |
குள்ளக்கார் | kuḷḷakkār n. prob. குள்ளம். A kind of paddy; சித்திரைக்கடப்பு என்னும் நெல். Tj. |
குள்ளவாழை | kuḷḷa-vāḻai n. prob. id. See குழிவாழை. Loc. . |
குள்ளிதாச்சான் | kuḷḷitāccāṉ n. cf. குளியிடிச்சான். A kind of paddy; நெல்வகை. (A.) |
குளக்கன் | kuḷakkaṉ n. prob. குளம். A kind of fish; மீன்வகை. பறவையுறவி குளக்கன்றோகை. (பறாளை. பள்ளு. 15). |
குளக்குருவி | kuḷa-k-kuruvi n. <>id.+. Crab; நண்டு. (யாழ். அக.) |
குளகறி | kuḷa-kaṟi n. perh. குளகு+கறி. A relish; வெஞ்சனவகை. (சவரண. பணவிடு. 275.) |
குளஞ்சி | kuḷaci n. <>குளம். Sugar; சருக்கரை. (யாழ். அக.) |
குளத்தட்டி | kuḷa-t-taṭṭi n. <>குளம்+. Small dam across a channel, with a row of split bamboos in it, put up in fishing; மீன் பிடிக்க இடுஞ் சிற்றணை. Pond. |