Word |
English & Tamil Meaning |
---|---|
குருபத்திரம் 1 | kuru-pattiram n. <>gurupattrā. Tamarind tree; புளியமரம். (யாழ் அக.) |
குருபத்திரம் 2 | kurupattiram n. cf. gurupattraka. Zinc; துத்தநாகம். (யாழ். அக.) |
குருபுகர்சந்திரயோகம் | kuru-pukar-cantira-yōkam n. <>குரு+புகர்+சந்திரன்+. (Astrol.) An auspicious combination of Jupiter, Venus and Moon in the same zodiacal house in a horoscope; சாதகத்தில் வியாழன் சுக்கிரன் சந்திரன் மூவரும் ஓர் இராசியி லிருப்பதாலுண்டாஞ் சுபயோகம். (யாழ். அக.) |
குருலிங்கம் | kuru-liṅkam n. <>guru+. A form of šiva, one of ṣaṭvita-liṅkam, q. v.; ஷட்விதலிங்கங்களு ளொன்று. (சித். சிகா. 201.) |
குருவகம் | kuru-v-akam n. perh. குரு+. Pink; வெண்சிவப்பு. (யாழ். அக.) |
குருவரகு | kuru-varaku n. prob. குறு-மை+. A kind of ragi; வரகுவகை. (விவசா. நூன்மு. 4.) |
குருவால் | kuru-v-āl n. prob. id.+. White fig; இத்தி. (W.) |
குருவிஞ்சி | kuruvici n. pern. குருவி. 1. Pink-tinged white sticky mallow. பேராமுட்டி. (நாமதீப.) 2. See குருவிப்பூண்டு. Loc. |
குருவிப்பூண்டு | kuruvi-p-pūṇṭu n. perh. id.+. White small-flowered mallow, s. sh., Hibiscus micranthes; சிற்றாமுட்டி. Loc. |
குல்மால்பண்ணு - தல் | kulmāl-paṇṇu- v. intr. <>U. gulmāl+. 1. To cheat; புரட்டுச் செய்தல். Loc. 2. To create a hubbub; |
குல்லாலி | kullāli n. <>Arab. kulāli. 1. The Omnipotent; சர்வசக்தன். 2. Clever person; |
குல்லியம் | kulliyam n. Counsel; ஆலோசனை. (யாழ். அக.) |
குல்லை 1 | kullai n. prob. கொல்லை. Deceit; மோசடி. குல்லைத் திருடரைநீ கூடாதே (தெய்வச். விறலிவிடு. 356). |
குல்லை 2 | kullai n. White basil; நாய்த்துளசி. (அக. நி.) |
குலகாயம் | kulakāyam n. Snail; நத்தை. (யாழ். அக.) |
குலகூடஸ்தன் | kula-kūṭastaṉ n. <>குலம்+. The founder of a family; ஒரு குலத்துக்கு மூலபுருஷன். (W.) |
குலடன் | kulaṭaṉ n. <>kulaṭa. Adopted son; சுவீகாரபுத்திரன். (W.) |
குலநாசகம் | kula-nācakam n.<>kulanāšaka. Camel; ஒட்டகம். (யாழ். அக.) |
குலமருது | kula-marutu n. prob. குலம்+. Flowering mardah; வெள்ளைமருது. (L.) |
குலவருத்தனை | kula-varuttaṉai n. <>kula.+. The perquisites of village officers, paid by farmers and by those who pay land revenue to Government; கிராம உத்தியோகஸ்தர்கள் குடிகளிடமிருந்தும் சர்க்காருக்குத் தீர்வை செலுத்துபவரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளுஞ் சுதந்திரம். (W. G.) |
குலவள்ளிநெல் | kulavaḷḷinel n. A kind of paddy; நெல்வகை. (A.) |
குலவியூகம் | kula-viyūkam n. <>kula+. A kind of battle-array, one of nava-viyūkam, q. v.; நவ வியூகத் தொன்று. (சௌந்த. 1, உரை.) |
குலவிருத்தியை | kula-viruttiyai n. <>kula-bhrtyā. Midwife; மருத்துவச்சி. (யாழ். அக.) |
குலாப்ஜான் | kulāp-jāṉ n. <>Arab. gulāb+. A kind of confectionery; தித்திப்புப் பணி யாரவகை. Mod. |
குலிங்கம் | kuliṅkam n. cf. கலிங்கம். Horse; குதிரை. (அக. நி.) |
குலிசம் | kulicam n. <>kuliša. A kinid of hell; நரகவிசேடம். (சிவதரு. சுவர்க்கநரக. 109.) |
குலுக்குச்சீட்டு | kulukku-c-cīṭṭu n. <>குலுக்கு-+. Chit-fund conducted on basis of casting lots; சீட்டுக்களைக் குலுக்கிப்போட்டு எடுத்த நபருக்குத் தொகைகொடுக்குஞ் சீட்டுவகை. Loc. |
குலைஞ்சி | kulaici n. Palmyra spathe; பனஞ்செறும்பு. Loc. |
குலைவெட்டி | kulaiveṭṭi n. A tax; வரிவகை. குலைவெட்டியும் குரப்புவெட்டியும் (S. I. I. viii, 322). |
குவர் | kuvar n.<>E. cover. Sky-sail; டவர்பாய்க்கு மேலுள்ள பாய். (M. Navi. 84.) |
குழம்புசாதி | kuḻampu-cāti n. <>குழம்பு+. Birth as man or animal, attributed to the joint effect of pāpa and puṇya; பாவபுண்ணியக் கலப்பில் உண்டாவதாகக் கருதப்படும் மானுடப் பிறவி அல்லது விலங்குப்பிறவி. (திவ். திருச்சந்த. 16.) |