Word |
English & Tamil Meaning |
---|---|
குளப்பறி | kuḷa-p-paṟi n. <>id.+. Hollow dug out to form a tank; குளமாக்குதற்குத் தோண்டும் பறிப்பு. கிஷ்ணாஜிவீட்டைக் குளப்பறியாகப் பறித்தான் (விறலிவிடு. 241). |
குளப்பாய்வு | kuḷa-p-pāyvu n. <>id.+. Tank irrigation; ஏரிப்பாசனம். (பணவிடு. 24.) |
குளவஞ்சி | kuḷavaci n. prob. குளம். A kind of tree; மரவகை. (யாழ். அக.) |
குளவன் | kuḷavaṉ n. cf. குழகன். God Murukaṉ; முருகக்கடவுள். குளவன் வீற்றிருந்த வளர்புகழ்க் குன்றமும் (வீரவனப்பு. திருநாட். 23). |
குளாஞ்சி | kuḷāci n. See குளவஞ்சி. (யாழ். அக.) . |
குளிகை | kuḷikai n. <>kulika. A particular period of a day considered auspicious for marriage ceremonies and inauspicious for funeral ceremonies; குளிககாலம். Loc. |
குளிகோமணம் | kuḷi-kōmaṇam n. <>குளி-+. A kind of lion-cloth; லங்கோடு. Pond. |
குளிசம் 1 | kuḷicam n. perh. gulika. Ring; வளையம். (யாழ். அக.) |
குளிசம் 2 | kuḷicam n. <>குளிகம். See குளிகை. Colloq. . |
குளிசிங்கி | kuḷi-ciṅki n. <>குளிர்-+. Coaxing; பேச்சினால் வசப்படுத்துகை. Tinn. |
குளிப்பாட்டு - தல் | kuḷippāṭṭu- v. tr. <>குளிப்பு-+ஆட்டு-. To win over, by flattery; முகஸ்துதி செய்து வசீகரித்தல். Tinn. |
குளியிடிச்சான் | kuḷiyiṭiccāṉ n. cf. குள்ளிதாச்சான். A kind of paddy; நெல்வகை. (விவசா. நூன். 2.) |
குளிர்த்தி | kuḷirtti n. <>குளிர்-. A kind of propitiation; ஆராதனைவகை. (யாழ். அக.) |
குளிர்தாமரை | kuḷir-tāmarai n. prob. id.+. ākācattāmarai, a weed; ஆகாசத்தாமரை. Loc. |
குளிரவை - த்தல் | kuḷiva-vai- v. tr. <>id.+. To put out, extinguish as a light; தீபம் முதலியன அணைத்தல். விளக்கைக் குளிரவை. Colloq. |
குளிரிக்குடம் | kuḷiri-k-kuṭam n. prob. id.+. Rose-water bottle; பன்னீர்க்குப்பி. (திவ். நாய்ச். 7, 4, வ்யா.) |
குளிறு | kuḷiṟu n. <>kulira. Crab; நண்டு. எழுகுளிறு மிதித்த வொருபழம்போல (குறுந். 24). |
குளுகுளெனல் | kuḷukuḷeṉal n. Onom. expr. of boiling; கொதித்தற்குறிப்பு. பார்ப்பான் குண்டிகை யிருந்த நீருங் குளுகுளு கொதித்ததன்றே (கம்பரா. வருணனைவழி. 61). |
குளுமி | kuḷumi n. cf. குமிழி. Sluice; மதகு. (P. T. L.) |
குற்றப்பிடிப்பு | kuṟṟa-p-piṭippu n. <>குற்றம்+பிடி-. Censorship; குற்றங்களைத் தெரிந்தெடுக்கை. Pond. |
குற்றாய் | kuṟṟāy n. A kind of fish; மீன் வகை. குற்றாய் நெற்றலி (குருகூர்ப் பக். 7). |
குற்றி | kuṟṟi n. <>குறு-மை. A kind of small narrow-necked vessel; வாய்குறுகிய சிறு பாத்திரவகை. சுண்ணகக் குற்றியும் (பெருங் உஞ் சைக். 38, 168). |
குற்றேற்றம் | kuṟṟēṟṟam n. <>id.+. Small picottah; சிறு ஏற்றம். (S. I. I. i, 151.) |
குற - த்தல் | kuṟa- 12 v. tr. To pour; வார்த்தல். புண்ணிலே புளியைக் குறந்திட்டால் கரிக்குமாபோலே (திவ். பெரியாழ். 2, 9, 1, வ்யா. பக். 451). |
குறங்கன் | kuṟaṅkaṉ n. perh. குறங்கு. cf. குரங்கம். Shingle tree; மலைக்கொன்றை. (L.) |
குறங்கு | kuṟaṅku n. Foot of a mountain; மலையடிவாரம். கட்டிக் குறங்கைக் குறங்காலு மோதி (தக்கயாகப். 540.) |
குறங்குச்சம்பா | kuṟaṅku-c-campā n. perh. குறங்கு+. Kaṭṭai-c-cempāḷai, a kind of coarse campā paddy; கட்டைச் செம்பாளை நெல். Tj. |
குறட்டுக்கம்பு | kuraṭṭu-k-kampu n. <>குறடு+. Cane with head; தலைப்பக்கத்தில் குழிழுள்ள தடி. முரட்டுக் குறட்டுக்கம்பாலே யடிபடவோ (குருகூர்ப். 8). |
குறளி | kuṟali n. <>குறள். Mischievous person; குறும்பன். Loc. |
குறி | kuṟi n.<>குறி-. Measure; அளவு. ஸர்வேஸ்வரனுக்கும் கைக்குறி யாப்பை வாங்குவது இங்கேயிறே (ஈடு, 1, 4, 6). |
குறிச்சி | kuṟicci n. An ōla amulet tied to a child's waist and believed to ward off attacks of whooping cough; குழந்தைக்கு வருங்குத்திருமலுக்கு இரட்சையாகக் கட்டும் ஓலைச்சுருள். Tinn. |
குறிஞன் | kuṟiaṉ n. perh. குறு-மை. Poor person; வறியன். (அக. நி.) |
குறிப்பிடைச்சொல் | kuṟippiṭaiccol n. <>குறிப்பு+. (Gram.) Definite article; ஆங்கிலத்தில் ஒரு பொருளைச் சுட்டிக்காட்ட வுதவும் உரிச்சொல் வகை. Pond. |