Word |
English & Tamil Meaning |
---|---|
குறிப்பு | kuṟippu n. <>குறி-. Example, illustration; உதாரணம். இது திருமந்திரார்த்தானு ஸந்தானத்திற்குக் குறிப்பாக அப்புள்ளார் அருளிச் செய்த விரகு (ரஹஸ்ய. 153). |
குறிமோசம் | kuṟi-mōcam n. <>குறி+. A fraudulent mark put upon a stock of grain after removing a portion of it clandestinely; தானியக்குவியலிலிருந்து சிறிதளவு திருடிக்கொண்டு பின்பு அக்குவியலில் இடுந் திருட்டுக்குறி. (W. G.) |
குறுக்குமறுக்கு | kuṟukku-maṟukku n. <>குறுக்கு+. Interrupting a person when he is speaking and contradicting him; குறுக்கே மறுத்துப்பேசுகை. மணியக்காரன் கணக்குப் பார்க்கிறதும் அதற்குக் கோவில்குருக்கள் குறக்குமறுக்குச் சொல்வதும் (தாசில்தார்நா. 27). |
குறுக்குவரி | kuṟukku-vari n. <>id.+. Diagonal; ஒருசதுரத்தின் அல்லது நீட்டத்தின் குறுக்காகச் செல்லுங் கோடு. Pond. |
குறுகல்முத்து | kuṟukal-muttu n. <>குறுகு-+. Double pearl; இரட்டைமுத்து. (W.) |
குறுகூலி | kuṟu-kūli n. <>குறு-+. Cooly for pounding rice, etc.; குத்துக்கூலி. அரிசிபதக்குக்குக் ... குறுகூலி நெல் நாடுரி (S. I. I. V; 264). |
குறுங்கண் | kuṟuṅ-kaṇ n. <>குறு-மை+. That which is closely jointed, knotty; நெருங்கின கணுவுடையது. குறங்கண்ணான பசு மஞ்சளை (திவ். பெரியாழ். 1, 1, 6, வ்யா. பக்.14). |
குறுங்கார் | kuṟuṅ-kār n. <>id.+. A kind of paddy; நெல்வகை. (A.) |
குறுஞ்சாலி | kuṟu-cāli n. <>id.+. Young tree; இளமரம். (யாழ். அக.) |
குறுத்தவன் | kuṟuttavaṉ n. <>குறு-. Dwarf; குள்ளன். (யாழ். அக.) |
குறுநண்டுக்கால்வெட்டு | kuṟunaṇṭu-k-kālveṭṭu n. An ancient coin; பழைய நாயண வகை. (பணவிடு. 136.) |
குறு நரி | kuṟu-nari n. <>குறு-மை+. Fox; குள்ளநரி. ஏதில் குறுநரி பட்டற்றால் (கலித். 65). |
குறுப்பாலை | kuṟuppālai n. prob. id.+. Child's amulet tree; புத்திரசீவி. (M. M.) |
குறுப்பி | kuṟuppi n. Gold-coloured antimony; பொன்நிமிளை. (யாழ். அக.) |
குறுமாடி | kuṟu-māṭi n. <>குறு-மை+. Gable; வீட்டின் முகட்டுறுப்பு. Loc. |
குறுமூச்சு | kuṟu-mūccu n. <>id.+. Hard breathing; திணறின மூச்சு. Pond. |
குறுவிழிக்கொள்(ளு) - தல் | kuṟu-viḻi-k-koḷ- v. intr. <>id.+விழி+. To see with eyes half-closed; அரைக்கண்ணாற் பார்த்தல். குறுவிழிக் கொண்டு வந்தார் போனார் நிழலாட்டம் பார்த்துக் கொண்டு கிடக்கையாலே (திவ். பெரியாழ். 2, 5, 3, வ்யா. பக். 340). |
குறுவைக்கிளையான் | kuṟuvai-k-kiḷaiyāṉ n. <>குறுவை+இளை+ஆ neg. A kind of paddy; நெல்வகை. மட்டுப்படாத குறுவைக்கிளையான் (நெல்விடு. 180). |
குறுவைமிளகாய்நெல் | kuṟuvai-miḷakāy-nel n. <>id.+மிளகாய்+. A kind of paddy; நெவ்வகை. (A.) |
குறைதீர் - த்தல் | kuṟai-tīr v. intr. <>குறை+. (W.) 1. To supply, as one's wants or needs; to satisfy; வேண்டியவற்றை உதவுதல். 2. To fulfil, as an obligation; |
குறைவறு - த்தல் | kuṟaivaṟu- v. tr. <>குறைவு+. See குறைதீர்-. (பெரியபு. கழறிற். 95.) . |
குறைவறுப்பு | kuṟai-v-aṟuppu n. <>id.+. 1. Head-load of articles, intended for the palace; அரண்மனைக்குரிய பண்டச்சுமை. குறைவறுப்பு எடுக்கவும் (S. I. I. vi, 29). 2. Supplies made, as to a superior; |
குன்றுமுத்துக்கொடி | kuṉṟu-muttu-k-koṭi n. perh. குன்று+. A creeper, கொடிவகை. (விவசா. 6.) |
குன்னாங்குருச்சியாக | kuṉṉāṅ-kurucci-y-āka adv. perh. குன்னா-+குறிச்சி+ஆ-. Privately, secretly; ஏகாந்தமாக. இதுதன்னைக் குன்னாங்குருச்சியாக வன்றிக்கே எல்லாருமறியும்படி ப்ரஸித்தமாகச் சொன்னேன் (திவ். பெரியாழ். 2, 2, 5, வ்யா. பக். 259). |
குனாபி | kuṉāpi n. cf. ku-nābhi. Cyclone; கழிக்காற்று. (யாழ். அக.) |
குனிப்பம் | kuṉippam n. <>குனி-. Dance; ஆடல். கொம்பனைய மாதர் குனிப்பமிட (சொக்க. உலா. 73). |
குஷ்கி | kuṣki n. prob. šuṣka. Dry thing; காய்ந்தது. Loc. |
கூ | kū n. <>gū. Evacuating, passing stools; மலங்கழிக்கை. (யாழ். அக.) |