Word |
English & Tamil Meaning |
---|---|
கொட்டுவேலை | koṭṭu-vēlai n. prob. id.+. Print on cloth; துணியில் அச்சடிக்கை. (சிற்பரத். முன். பக்.9.) |
கொட்டை | koṭṭai n. A kind of paddy; நெல்வகை. (தண். கன. பள். பக். 62.) |
கொட்டைக்கூலி | koṭṭai-k-kūli n. prob. கொட்டை+. A tax; வரிவகை. (S. I. I. Viii, 139.) |
கொட்டைப்பருந்து | koṭṭai-p-paruntu n. perh.id.+. Black kite; பருந்துவகை. Loc. |
கொட்டைப்பாக்குத் தலைப்பா | koṭṭai-p-pākku-t-talaippā n. <>கொட்டைப்பாக்கு+. A kind of turban; குஞ்சுத்தலைப்பா. (யாழ். அக.) |
கொட்டைமுதல் | koṭṭai-mutal n. <>கொட்டை+. (யாழ். அக.) 1. Seed grain; விதைமுதல். 2. Capital in a business; |
கொட்டையரைஞாண் | koṭṭai-y-araiāṇ n. <>id.+. A child`s ornament; குழந்தையணிவகை. (பெரியபு.சிறுத். 60.) |
கொடரி | koṭari n. cf. தொடரி. Style plant; எழுத்தாணிப்பூடு. (சித். அக.) |
கொடிக்கடமை | koṭi-k-kaṭamai n. prob. கொடி+. A tax; வரிவகை. (S. I. I. V, 330.) |
கொடிக்கத்தரி | koṭi-k-kattari n. <>id.+. A variety of brinjal; கத்தரிவகை. (சித். அக.) |
கொடிக்கருணை | koṭi-k-karuṇai n. <>id.+. A tuberous-rooted plant; கருணைவகை. Loc. |
கொடிச்சி | koṭicci n. <>id. Excreta of termites, in an ant-hill; புற்றாஞ்சோறு. (யாழ். அக.) |
கொடிச்சிங்கேரி | koṭi-c-ciṅkēri n. <>id.+. Indian birthwort; கருடக்கொடி. (சித். அக.) |
கொடிச்சித்தாமரை | koṭicci-t-tāmarai n. <>id.+. Blue nelumbo; நீலத்தாமரை. (சித். அக.) |
கொடிசை | koṭicai n. perh. கொடிறு. Cheek; கன்னம். (யாழ். அக.) |
கொடித்தடக்கி | koṭi-t-taṭakki n. <>கொடி+தடுக்கி. Small projection near the toes of a dog; நாய்க்காலின் மேல் விரல். (யாழ். அக.) |
கொடித்திருப்பாடகம் | koṭi-t-tiruppāṭakam n. <>id.+. A woman`s foot-ornament; மகளிர் காலணிவகை. (W.) |
கொடிதிருப்பு - தல் | koṭi-tiruppu- v. intr. <>id.+. To give a girl in marriage to a member of a family from which a girl has been taken in marriage; பெண்கொண்ட குடும்பத்தில் பெண்கொடுத்தல். Brāh. |
கொடிநாரத்தன் | koṭi-nārattaṉ n. <>id.+. See கொடிநாரத்தை. (சு. வை. ர.166.) . |
கொடிநாரத்தை | koṭi-nārattai n. <>id.+. A kind of citron; நாரத்தைவகை. (சித். அக.) |
கொடிப்புடைவை | koṭi-p-puṭaivai n. <>id.+. New cloth which relatives of a widow place on a clothes-line for use during the first year of her widowhood; விதவையானவளுக்கு முதல் வருஷ உபயோகத்திற்காகச் சுற்றத்தார் கொடியில் இடும். புதுச்சீலை. Brāh. |
கொடிப்பூகம் | koṭi-p-pūkam n. <>id.+. Cowslip creeper; கொடிச்சம்பங்கி. (சித். அக.) |
கொடிபோடு - தல் | koṭi-pōṭu- v. intr. <>id.+. To devise ways and means of appropriating; தன்னதாக்க வழிபண்ணுதல். (யாழ். அக.) |
கொடிமுல்லை | koṭi-mullai n. <>id.+. Eared jasmine; ஊசிமுல்லை. (சித். அக.) |
கொடியாளன் | koṭiyāḷaṉ n. cf. கொடிய வீரன். Kōṭācori-p-pāṣāṇam, a prepared arsenic; கோடா சொரிப்பாஷாணம். (யாழ். அக.) |
கொடியிறக்கம் | koṭi-y-iṟakkam n. <>கொ +. Concluding, finishing; முடிவுபண்ணுகை. (யாழ். அக.) |
கொடுக்கன் | koṭukkaṉ n. (T. koduku.) Son; மகன். வயிரமேகனார் கொடுக்கன் சிற்றண் புலியூர் நாடன். (S. I. I. Viii, 32). |
கொடுக்கு - தல் | koṭukku- 5 v. tr. cf. கொடுகு-. To cause one to shudder; நடுக்குதல். Tinn. |
கொடுகிலை | koṭukilai n. Common cherry nutmeg; நகுதலிலை. (L.) |
கொடுங்கரி | koṭuṅ-kari n. <>கொடு-மை+. False witness; பொய்ச்சாட்சி. (யாழ். அக.) |
கொடுங்காறல் | koṭuṅ-kāṟal n. <>id.+. Horse-mackerel; சுதுப்புநாங்காறல். Loc. |
கொடுங்கொடிச்சிலை | koṭuṅ-koṭi-c-cilai n. <>id.+. cf. கொடுங்கோபிச்சிலை Yellow ochre; மஞ்சட்கல். (யாழ். அக.) |
கொடுநாவி | koṭu-nāvi n. <>id.+. Ceylon leadwort; கொடுவேலி. (சித். அக.) |
கொடுநோய் | koṭu-nōy n. <>id.+. A disease of cattle; மாட்டுநோய்வகை. (பெரியமாட். 117.) |