Word |
English & Tamil Meaning |
---|---|
கொதியெண்ணி | koti-y-eṇṇi n. <>கொதி-+. One who waits for meals; போசனத்துக்குக் காத்திருப்போன். (யாழ். அக.) |
கொதுகுலம் | kotukulam n. perh. kautūhala. Lisping; மழலை கொஞ்சுகை. (யாழ். அக.) |
கொதுகுலி - த்தல் | kotukuli- 11 v. intr. <>கொதுகுலம். To melt; குழைந்துருகுதல். (யாழ். அக.) |
கொந்தளம் | kontaḷam n. perh. kuntala. An ear-ornament; காதணிவகை. காதுக்குக் கொந்தளம் அணிந்து (தமிழறி. 64). |
கொந்திக்காய் | kontikkāy n. Throat; மிடறு. Loc. |
கொந்து | kontu n. Pollen; பூந்தாது. கொந்து சொரிவன கொன்றையே (தக்கயாகப். 62). |
கொப்பரைவெட்டு | kopparai-veṭṭu n. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 136.) |
கொப்பு | koppu n. cf. கப்பு. A reddish colour; ஒரு வகைச் சிவப்பு. (விறலிவிடு. 713.) |
கொப்புவர்ணம் | koppu-varṇam n. <>கொப்பு+. A kind of saree; சேலைவகை. கொப்புவர்ணமாய்த்தீர்ந்த கொப்புவர்ணம். (விறலிவிடு. 713.) |
கொப்புஜம்புல் | koppu-jampul n. prob. id.+. A kind of ear-ornament; காதணிவகை. (தாசீல்தார்நா. பக். 40.) |
கொம்பரை | komparai n. A disease in cattle; மாட்டுநோய்வகை. (தஞ். சர. iii, 119.) |
கொம்பன் | kompaṉ n. <>கொம்பு. A kind of fish; மீன்வகை. (யாழ். அக.) |
கொம்பாபிள்ளை | kompā-piḷḷai n. <>id.+ஆ-+. One born in an aristocratic family; அதிகாரக்குடியிற் பிறந்தோன். (யாழ். அக.) |
கொம்பாஸ்பெட்டி | kompās-peṭṭi n. <>E. compass+. Box of drawing instruments; படமுதலியன எழுதுதற் குதவுங் கருவிகளையுடைய சிறுபெட்டி. Mod. |
கொம்பு 1 - தல் | kompu- 5 v. intr. To try ; முயலுதல். (யாழ். அக.) |
கொம்பு 2 - தல் | kompu- 5 v. intr. cf. கெம்பு-. To get angry; கோபித்தல். ஈசன்மேற் கொம்பி (பஞ்ச. திருமுக. 107). |
கொம்மடி | kommaṭi n. A kind of water-melon; கொம்மட்டிவகை. சிற்றவரைக் கொம்மடிகள் (தேசிகப். 18, 4). |
கொய் - தல் | koy- 11 v. tr. To take away; கவர்ந்துகொள்ளுதல். (ஈடு, 1, 4, 7.) |
கொய்ச்சாளை | koy-c-cāḷai n. <>கொய்+. A kind of fish; மீன்வகை. (யாழ். அக.) |
கொய்ப்பசிரிக்கீரை | koy-p-paciri-k-kīrai n. <>கொய்-+பசலை+. Seaside Indian saltwort; நீருமரி. (L.) |
கொய்மீன் | koy-mīṉ n. <>கொய்+. A kind of fish; மீன்வகை. கொய்மீன் செப்பலி (குருகூர்ப். 20). |
கொய்யா | koyyā n. prob. T. koyyā. A weaving instrument; நெய்வார் கருவிவகை. (யாழ். அக.) |
கொய்யான் | koyyāṉ n. cf. கோய். Earthen jar; மண்ணாலான பரணி. (யாழ். அக.) |
கொய்யோ | koyyō int. An exclamation of victory; வெற்றிக்குறிப்புச் சொல். (யாழ். அக.) |
கொர்னிசு | corṉicu n. <>E. Cornice; எழுதகவேலை. Mod. |
கொரக்கை | korakkai n. (T. guraka.) Snoring; குறட்டை. (நீலகேசி, 375, உரை.) |
கொரிகாமரம் | korikā-maram n. prob. கொறுக்கா+. Manilla tamarind; கொறுக்காப்புளி. (சித். அக.) |
கொருவோடு | koru-v-ōṭu n. perh. குறு-மை+. Flat tile; தட்டோடு. Madr. |
கொல் | kol n. 1. Iron; இரும்பு. மின் வெள்ளி பொன் கொல்லெனச் சொல்லும் (தக்கயாகப். 550). 2. Metal; |
கொல்லன் | kollaṉ n. <>T.golla. Custodian of treasure; கஜானாக்காரன். (P. T. L.) |
கொல்லிச்சி | kollicci n. Fem. of கொல்லன். Woman of the blacksmith caste; கொல்லச் சாதிப் பெண். (யாழ். அக.) |
கொலைவாளை | kolai-vāḷai n. perh. குலை+வாழை. A kind of paddy; ஒரு வகை நெல். Tinn. |
கொவ்வைக்கனிமணி | kovvai-k-kaṉimaṇi n. <>கொவ்வை+கனி+. A kind of precious stone; கோவரங்கப்பதுமராகம். (யாழ்.அக.) |
கொழுக்கொடு - த்தல் | koḷu-k-koṭu- v. intr. <>கொழு-+. 1. To be indulgent; இளக்காரங் கொடுத்தல். நீ நியமியாமல் கொழுக்கொடுத்தன்றோ இப்படி இவன் தீம்பிலே தகணேற வேண்டிற்று (திவ். பெரியாழ். 2, 9, 2, வ்யா. பக். 454). 2. To exalt; |